Published:Updated:

யானை வெடியும், மெழுகுவத்தியும்..!

வே.கிருஷ்ணவேணி

யானை வெடியும், மெழுகுவத்தியும்..!

வே.கிருஷ்ணவேணி

Published:Updated:

'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா...’

- 'மதுரை’ முத்துவுக்கு போன் செய்தால், ஜம்மென இசைக்கிறது காலர் டியூன். ''வணக்கம்!'' என்று லைனுக்கு வந்தவரிடம், ''தீபாவளி வந்துடுச்சு பாஸ்... மக்களை கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டுங்க பாஸ்!'' என்றோம். சட்டென்று ஆரம்பித்தார் கச்சேரியை!

• தலைதீபாவளின்னாலே கலகலதான். என்னோட தலை தீபாவளியும் அப்படித்தான். 'நாளைக்கு விடியக்காலையில எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கணும், சீக்கிரமா எழுந்திரிச்சிடுங்க’னு சொல்லிட்டு தூங்கிட்டாங்க மனைவி. எனக்கு எண்ணெய் வெச்சுக் குளிக்கிறதுனாலே அலர்ஜி. நம்ம கேசத்தோட அழகு என்ன ஆகுறது? விடிஞ்சா, 'எண்ணெய் வெச்சுக்கோங்க மாப்ள... எண்ணெய் வெச்சுக்கோங்க மாப்ள’னு சுத்தித் சுத்தி வந்தார் மாமனார். எங்கிட்டு 'எஸ்’ ஆகுறதுனு தெரியல. ஐடியா! கூப்பிட்டேன் என் மனைவியை. 'உங்க அப்பாகிட்ட அப்படிக் கேட்கச் சொல்லாதம்மா... கேட்கவே நாராசமா இருக்கு!’னு அவருக்கு கேட்கிறபடியே சத்தமா சொல்ல, வீட்டுல ஒரே குசுகுசு சிரிப்பு. இதுக்குப் பிறகும் மாமனார் எங்கிட்ட வந்து 'எண்ணெய்' வெச்சுக்க சொல்வார்..? ம்ஹும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யானை வெடியும், மெழுகுவத்தியும்..!

•  அதே தலைதீபாவளியில, எங்க மாம னாரு எனக்கு கொடுத்தாரு பாருங்க ஒரு கவுன்ட்டரு... சூப்பரு போங்க!

தலைதீபாவளிக்கு என் மாமனார் எனக்கு மோதிரம் போட்டாரு. நாம வாய வெச்சுக்கிட்டு சும்மா இருந்தாதானே? 'பாவம், காலையில மனுஷன கலாய்ச்சுட்டோமே’னு சகஜமாக்க, 'உங்க மாமனார் உங்க தலைதீபாவளிக்கு மோதிரம் போட்டாரா மாமா?’னு பேச்சுக் கொடுத்தேன். 'அதை வாங்குற அளவுக்கு நான் ரோஷங்கெட்ட ஆளா என்ன!’னு சொன்னாரு பாருங்க... இதுக்கு மேலயும் நான் ஏதாவது பேசியிருப்பேன்னு நினைக்கிறீங்க..?!

•  ஒரு தீபாவளிக்கு பிள்ளைங்களோட பட்டாசு வெடிச்சிட்டு இருந்தேன். 'அப்பா  யானை வெடிதான் வெடிப்பேன்’னு சலம்பல் விட்டுட்டு, ஒரு வெடியை ரொம்ப நேரமா பத்த வெச்சிட்டே இருந்தும், வெடிக்கல. பிள்ளைங்க சமையல்கட்டுல இருந்த என் மனைவிகிட்ட போய், 'அம்மா, அப்பா வெச்ச வெடி வெடிக்கவே மாட்டேங்குதும்மா’னு சொல்ல, 'இன்னும் எவ்வளவு நேரமானாலும் அவரு கொளுத்தினது வெடிக்காது. ஏன்னா, அது மெழுகுவத்தி!’னு, சம்பவ இடத்தைப் பார்க்காமலே போட்டு உடைச்சாங்க பாருங்க என் குட்டை... அதாங்க இல்லத்தரசி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism