'இன்னும் கொஞ்சம் சாப்பிடு’ - எல்லோருக்கும் அவள் சொல்லுவாள். அவளுக்கு யாருமே சொன்னதில்லை.

'கவலைப்படாதே சரியாயிடும்’ - அவள் பிறருக்குச் சொல்லுவாள். அவளுக்கு யாருமே சொன்னதில்லை.

அவளுக்கும் புதுசு பிடிக்கும். புதுப்புடவையின் வாசனை பிடிக்கும். புதுப்புடவையின் வெளிச்சம் பிடிக்கும்.

அவளுக்கும் இனிப்பு பிடிக்கும். இனிப்புப் பண்டத்தின் வாசனை பிடிக்கும். அதன் சர்க்கரைப் பாகு மயக்கம் பிடிக்கும்.

அவளுக்கும் சிறகுகள் பிடிக்கும். மனச்சுமை இல்லாமல் ஒற்றைச் சிறகெனக் காற்றில் மிதக்கப் பிடிக்கும்.

அவளுக்கும் மத்தாப்பு பிடிக்கும். அதிலிருந்து தெறிக்கும் நட்சத்திரங்கள் பிடிக்கும்.

ஆனாலும் என்ன?

தன் பட்டுப்புடவை ஆசையை மறந்துவிட்டு, குழந்தைக்குப் பட்டாம்பூச்சி வண்ண உடை வாங்கித் தந்து சந்தோஷிப்பாள்.

தன் நெய்ப்பணியாரம் ஆசையை மறந்து, மகனுக்கு நெய்முறுக்கு செய்து தந்து சந்தோஷிப்பாள்.

தன் குந்துமணித் தங்க ஆசையை மறந்து, மகளுக்குத் தங்க செயின் வாங்கித் தந்து சந்தோஷிப்பாள்.

அவள் இனிமேலாவது புன்னகை செய்யட்டும். அவளின் விரலை நீவிவிடுங்கள்.

அவள் இனிமேலாவது புதுசு உடுத்தட்டும். உங்களின் ஆடம்பரத்தைச் சுருக்கிவிடுங்கள்.

அவள் இனிமேலாவது பண்டிகைப் பலகாரம் உண்ணட்டும். உங்களின் வார இறுதிக் கேளிக்கை கொண்டாட்டத்தைக் குறைத்துவிடுங்கள்.

அவள் இனிமேலாவது குந்துமணி தங்கம் அணியட்டும். உங்களின் பேராசையை அடகு வையுங்கள்.

அவள் இனிமேலாவது வாசல் காற்றைச் சுவாசிக்கட்டும்.

அவள் இனிமேலாவது வானத்து நிலவைப் பார்க்கட்டும்.

அவள் - இனிமேலாவது அவளாகவே இருக்கட்டும்...

சுயமாக... சுயம்புவாக!