தீபாவளிக்கு நம்ம பர்ச்சேஸ் இருக்கட்டும்... இந்த ஸ்டார்ஸோட பர்ச்சேஸ் என்னனு தெரிஞ்சுக்கலாமா!

த்ரிஷா

''பொதுவா தீபாவளியன்னிக்கு வீட்டில் இருக்கிறது அபூர்வம். அப்படியிருந்தா, என் ஜாரோ, ஜாயோ (செல்லப்பிராணிகள்) கூடத்தான் இருப்பேன். பட்டாசு வெடிக்காத தீபாவளி என் கொள்கைனாலும், ரோட்டுல வெடிக்கிறவங்களைத் தடுக்க முடியாதே? அந்த சத்தத்துல என் பெட்ஸ் பயந்துடக்கூடாதுனு ரூமுக்குள்ளயே வெச்சிருப்பேன். தீப ஒளியில டிரெடிஷனல் டிரெஸ் போட்டு நடக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். தீபாவளிக்குனு தனியா ஷாப்பிங் கிடையாது. வெளிநாடுகளுக்குப் போகும்போது அள்ளிட்டு வர்றதுல கொஞ்சம் தீபாவளிக்கும் வெச்சுக்குவேன். ஆனா, என் ஜாரோ, ஜாயோ ரெண்டு பேருக்கும் கண்டிப்பா தீபாவளி பர்ச்சேஸ் உண்டு!''

பாபி சிம்ஹா

''தீபாவளி ஷாப்பிங் இல்ல... எல்லா ஷாப்பிங்குமே எனக்கு 10 நிமிஷ வேலைதான். ஒரு டிரெஸ்ஸை எடுத்து, அதைவிட இது நல்லாயிருக்கேனு இன்னொண்ணைப் பார்த்து, இப்படியே 100, 200னு நீந்தி, கடைசியா ஒரு டிரெஸ்ஸுக்கு பில் போடுற நல்ல பழக்கமெல்லாம் எனக்கில்ல. கடைக்குப் போனா, முதல்ல கண்ணுல படுற ரெண்டு டிரெஸ்ஸை பில் போட்டுட்டு வந்துட்டே இருப்பேன். இதுவரை என் அண்ணனோட அஞ்சு வயசுக் குட்டிப் பொண்ணு சுசீலாவைத் தவிர, வேற யாருக்கும் டிரெஸ் வாங்கிக் கொடுத்ததில்ல. இந்த வருஷம் வீட்டுல எல்லாருக்கும் வாங்கிக் கொடுத்து, அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப்போறேன்!''

ஸ்டார் பர்ச்சேஸ்!

மியா

''நான் மலையாளிங்கிறதால தீபாவளி கொண்டாடினது இல்ல. ஆனா, மத்தவங்களைப் பார்த்து எனக்கும் ஆசையா இருக்கும். டிரெடிஷனல் டிரெஸ் போட்டுட்டு, பட்டாசு வெடிக்கணும்ங்கிறது நீண்ட நாள் ஆசை. 'உன் உயரத்துக்கு புடவை கட்டினா அழகா இருப்பே!’னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வேற ஏத்திவிட்டிருக்காங்களே... அதனால தீபாவளிக்கு சில பல புடவைகள் வாங்கணும். பெட்டி பெட்டியா பட்டாசு வாங்கணும். முக்கியமா அக்கா பொண்ணு ஆன், தீபாவளி கிஃப்ட்டுனு ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கா. எல்லாத்தையும் வாங்கிக் கொடுக்கணும். சைடுல நம்ம பர்ச்சேஸையும் முடிச்சுக்கலாம்!''

ஜனனி ஐயர்

''எங்க வீட்டுல பாரம்பர்ய தீபாவளிக் கொண்டாட்டம் இருக்கும். அதனால தீபாவளிக்கு வெளி கமிட்மென்ட்ஸ் நோ! வீட்டுலதான் இருப்பேன். காலையில 4 மணிக்கெல்லாம் எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சு, ஸ்வீட் சாப்பிட ஆரம்பிச்சிடுவேன். நைட் ஆகுறதுக்குள்ள ஸ்வீட் டப்பாக்களை எல்லாம் காலியாக்குற பொறுப்பை எடுத்துக்குவேன். அம்மா செஞ்ச ஸ்வீட்ஸ் அவ்ளோ யம்மி! வருஷா வருசம் தீபாவளிக்கு தாவணி, புடவைதான் கட்டுவேன். இந்த வருஷம் டிசைனர் சல்வார் வாங்கலாம்னு இருக்கேன். 'ஒரு டிசைனர் ஹாஃப் சாரி!’னு ஆர்டர் கொடுத்துட்டா என் தங்கச்சி. நான்தான் வாங்கித் தரணுமாம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு