Published:Updated:

உணவும் உணர்வும் - அம்மாவின் அன்பு

உணவும் உணர்வும்
பிரீமியம் ஸ்டோரி
News
உணவும் உணர்வும்

அவள் விகடன் வாசகிகள் உணவு சமைக்க, சிறப்பு அழைப்பாளர்களாக வந்த செஃகள் உதவியாக இருக்க, மாணவர்கள் ஆடிக்களிக்க எங்கும் இன்ப மயம்.

சேமியா கீமா பிரியாணி, ரைத்தா, மேத்தி ரொட்டி, பனீர் பட்டர் மசாலா, பாயசம்... என்ன? சொல்லச் சொல்ல நாவில் சுவை ஊறுகிறதா? இந்தச் சுவைப் பட்டியலின் பின்னணி, சுவாரஸ்ய மானது. அவள் விகடன் வாசகிகள் கூடி நடத்திய கொண்டாட்டச் சமையலின் மெனுதான் இது.

உணவும் உணர்வும்
உணவும் உணர்வும்

‘அம்மாவின் அன்பு - அன்னம் படைத்து அன்பைப் பரிமாறுவோம்’ என்ற டைட்டில் டேக் லைனுடன் வாசகிகளுக்காக சந்தோஷ சமையல் நிகழ்ச்சி ஒன்றை அவள் விகடன் தொடங்கியிருக்கிறது. தாங்கள் கூடிச் சமைத்த உணவுகளை, அன்பை வேண்டுகின்ற நல் உள்ளங்களோடு பகிர்ந்து பாசம் பரிமாறுகிற நிகழ்ச்சிதான், அம்மாவின் அன்பு - சப்போர்டடு பை சேவரிட் சேமியா மற்றும் ஆஸ்ட்ரோ ஹியரிங் கேர். இந்த நிகழ்ச்சி, மயிலாப்பூர் சி.எஸ்.ஐ சிறப்புப் பள்ளியில் நடைபெற்றது; காதுகேளாத, வாய்பேச முடியாத மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளி, அது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அவள் விகடன் வாசகிகள் உணவு சமைக்க, சிறப்பு அழைப்பாளர்களாக வந்த செஃகள் உதவியாக இருக்க, மாணவர்கள் ஆடிக்களிக்க எங்கும் இன்ப மயம். மாணவர்கள் லிங்கேஷ், புனிதா, ஜினிதா இன்னும் பல மாணவர்கள் நம்மிடம் ஜாலியான சைகை மொழியில் உணர்வுகளை வெளிப்படுத்தினர். நடிகர் ஆதித்யா பாஸ்கர், நடிகை மோனிகா, சுட்டி அரவிந்த், விக்னேஷ் காந்த், மைம் கோபி என சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர், உற்சாகப் பிரவாகமாக!

அம்மா மகள், தோழிகள், செஃப் தம்பதி, மூத்த பெண்மணிகள் எனப் பலரும் இணைந்திட, கலவையாகக் கொண் டாட்டக் களை கூடியது. அடுப்பு கூட்டிச் சமைப்பதில் மட்டுமல்ல, சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொடுப்பது தொடங்கி, பிரியாணி கிண்டுவதுவரை அம்மாக்களின் கைப் பக்குவம் ருசியாகவும் மணமாகவும் மனம் நிறைத்திருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிலவற்றைச் செயற்கை யாக உருவாக்கவே இயலாது. அதில் அன்புக் குப் பிரதான இடம் உண்டு. வாசகிகள் கூடி வாசம் நிறைந்த உணவுகளைச் சமைத்ததிலும், மாணவர்கள் மகிழ்ச்சி பொங்கச் சாப்பிட்டதிலும், நிகழ்ச்சியை அவள் விகடன் முன்னெடுத்து இருப்பதிலும் அன்பைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?

மாணவர்களுக்கு ஆசை ஆசையாக ஊட்டிவிட்ட செஃப் தேவகுமார் தம்பதிக்கு மாணவர்களும் திரும்ப ஊட்டிவிட்ட உணர்வுமிகு தருணம், ‘அம்மாவின் அன்பு’க்கு அற்புத சாட்சி!

விக்னேஷ்காந்த்: ஓர் ஐடியா உலகத்தையே மாத்தும். ஆனா, இந்த ஐடியா எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கு. இந்த அம்மாக்கள் இன்னொரு பிள்ளையைத் தன் பிள்ளையா பார்க்கிறாங்க. பிள்ளைகளும் அம்மாக்களும் ஸ்பெஷல்தான். என்ன சமைக்கிறோம்னு இல்லாம, யாருக்குச் சமைக்கிறோம், எப்படிச் சமைக்கிறோம்னுதான் யோசிக்கணும்.

சுட்டி அரவிந்த்: எனக்கு அம்மாவைக்கிற பிரியாணி ரொம்பப் பிடிக்கும். எங்கே சாப்பிட்டாலும் அம்மா கையால சாப்பிடணும். இங்கே ஆச்சர்யம், மகிழ்ச்சி எல்லாமே நிரம்பியிருக்கு. விகடன் ஆரம்பிச்சு வெச்சுடுச்சுல, நாங்களும் இனி இதுமாதிரி பண்ணுவோம்.

அம்மாவின் அன்பு நிகழ்ச்சில்
அம்மாவின் அன்பு நிகழ்ச்சில்

மைம் கோபி: அம்மா நமக்குச் சொல்லாம செய்றது போல, நாமும் யாருக்கும் சொல்லாம அவங்களுக்குத் தேவையானதைச் செய்யணும். இவங்க இதைச் செய்ததுக்காக காலமெல்லாம் நன்றி சொல்வேன். எங்கம்மா வைக்கிற பழைய சோறும் ஊறுகாயும்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச உணவு. அப்புறம்... சுகாதாரம் பற்றிக் குழந்தைகளுக்கு அம்மாக்கள் சொல்லித் தரணும்.

நடிகை மோனிகா: இந்த நிகழ்ச்சியில கலந்துக் கிறதே பெருமையா இருக்கு. தன்முனைப்புதான் உணவை வீணடிக்கச் செய்யாம இருக்க ஒரே வழி.

செஃப் தேவகுமார்: இவ்ளோ நேரம் வேலை பார்த்தும் சோர்வே இல்லை. இந்த அம்மாக்களோட உற்சாகமும், குழந்தைகளுக்குச் செய்யறோம்கிற உணர்வும்தான் சோர்வைத் தூக்கிப் போட்டிருக்கு. எங்கம்மா சமைச்ச உருளைக்கிழங்குப் பொரியல், ரெண்டு பிளேட் தயிர் சாதத்தை உள்ளே அனுப்பிடும். வீணாகிற உணவுப் பொருள்களை மறுசுழற்சி செய்திடணும். எல்லோருக்கும் கொடுத்துச் சாப்பிடணும். More you give, More you get!

அம்மாவின் அன்பு நிகழ்ச்சில்
அம்மாவின் அன்பு நிகழ்ச்சில்

சேவரிட் மார்கெட்டிங் மேனேஜர் சுஹைல்:

கன்ஸ்யூமர்ஸுக்கு ஆக்டிவிட்டிகள் கொடுத்து அவர்களை ஈர்க்கிறது, பெரிய விஷயம். அதை நல்ல நோக்கத்துக்காகச் செய்யணும்னு அவள் விகடன் நினைச்சது பெருமையானது. இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் இதுபோன்ற பள்ளிகளுக் காகவும் இல்லங்களுக்காகவும் தனியா பட்ஜெட் ஒதுக்கணும்னு முடிவு பண்ணியிருக்கோம். அந்தளவுக்கு எங்கள் இதயத்தைத் தொட்டிருச்சு, இந்த நிகழ்ச்சி.

அம்மாவின் அன்பு
அம்மாவின் அன்பு

ஆஸ்ட்ரா ஹியரிங் கேர் நிர்வாகி:

நம்ம நாட்டுல 10 சதவிகிதம் பேர் ஏதோ ஒருவகையில் காது கேளாதவராகத்தான் இருக்காங்க. அவங்கள அப்படியே விட்டுற முடியாது. பயிற்சிகள் கொடுத்தா சரியாகிடுவாங்க. அதைச் செய்றதுக்கு நாம எல்லோரும் முன்வரணும். இந்த நிகழ்ச்சியில எல்லாமே ஸ்பெஷலா இருந்துச்சு. குழந்தைகள் தங்களோட குறைகள் எதையும் பொருட்படுத்திக்கல. உணர்வுபூர்வமா பல விஷயங்கள் நடந்துச்சு. செஃப் ஊட்டிவிட்டதும், குழந்தைங்க திரும்பவும் அவருக்கு ஊட்டிவிட்டதெல்லாம் சொல்லி வர்றதில்லை. சொல்லித் தரவும் முடியாது. என்னை ரொம்பவும் உணர்ச்சிவசப்பட வெச்ச நிகழ்ச்சி இது!