Published:Updated:

மகுடம் சூட்டப்பட்ட மகத்தான தமிழர்கள்!

‘பாண்டிகூட்’ குழுவினருக்கு விருது வழங்குதல்
பிரீமியம் ஸ்டோரி
‘பாண்டிகூட்’ குழுவினருக்கு விருது வழங்குதல்

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019

மகுடம் சூட்டப்பட்ட மகத்தான தமிழர்கள்!

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019

Published:Updated:
‘பாண்டிகூட்’ குழுவினருக்கு விருது வழங்குதல்
பிரீமியம் ஸ்டோரி
‘பாண்டிகூட்’ குழுவினருக்கு விருது வழங்குதல்

இதோ மீண்டும் ஒருமுறை களைகட்டியது ‘ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019’ விருது வழங்கும் விழா. ஜனவரி 24-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மனிதர்களுக்கு 2019-ம் ஆண்டுக்கான நம்பிக்கை விருதுகள் வழங்கப்பட்டன.

மகுடம் சூட்டப்பட்ட மகத்தான தமிழர்கள்!

கீழடி அகழாய்வுப் பணி தொடங்குவதற்குக் காரணமாக இருந்ததன் மூலம் உலகத் தமிழர்களுக்கு வரலாற்றுப் பெருமிதத்தைத் தேடித் தந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களான ஓய்வுபெற்ற வரலாற்று ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் கனிமொழி மதி ஆகிய இருவருக்கும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.

“கீழடியில் கண்டெடுக்கப்பட்டவற்றை அரசி டம் சொன்னவர் பாலசுப்பிரமணியன். கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவர் கனிமொழி மதி. அகழாய்வு நடைபெறுவதற்கு முயற்சி எடுத்தவர் உதயச்சந்திரன். இவர்கள் மட்டுமன்றி நீதித்துறையினர், ஊடகத்தினர், பொதுமக்கள் என்று கீழடி ஆய்வுக்கு பலரும் உதவியுள்ளனர். ஊர் கூடி தேர் இழுக்கும் வைபவம் இது. தொடர்ந்து இழுப்போம்” என்றார் நீதிபதி மகாதேவன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 35 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்திவரும் வழக்கறிஞர் பொ.ரத்தினத்துக்கு, பேராசிரியர் கல்விமணியும் மருத்துவர் கு.சிவராமனும் விருது வழங்கினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிந்துசமவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் குறித்து ஆய்வுசெய்து, ‘சிந்துசமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே’ என்ற கருத்தை நிரூபித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆர்.பாலகிருஷ்ணனுக்கு, நடிகர் சிவகுமாரும் வசந்த் அண்ட் கோ நிறுவனர் வசந்தகுமார் எம்.பி-யும் விருது வழங்கினர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரை தோப்பூர் ‘காட்டு’ ஆஸ்பத்திரியை அனைத்து வசதிகளுடன்கூடிய முன்மாதிரி மருத்துவமனையாக மாற்றிய மருத்துவர் காந்திமதி நாதனுக்கு விருது அளித்தார், மதுரை எம்.பி-யான சு.வெங்கடேசன். “நாடாளுமன்றத்தில் கருத்துரிமை இருக்கிறதா?” என்று சு.வெங்கடேசனிடம் தொகுப்பாளர் ராஜ்மோகன் கேட்டார். “அரசால் படுகொலை செய்யப்படும் மிக முக்கியமான சொற்கள் - கருத்துரிமை, ஜனநாயக உரிமை” என்றார் காட்டமாக.

வை.பாலசுப்பிரமணியன், கனிமொழி மதி ஆகியோருடன் நீதிபதி மகாதேவன், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்  - ஆர்.பாலகிருஷ்ணனுக்கு விருது வழங்கும் 
ஹெச்.வசந்தகுமார், சிவகுமார்
வை.பாலசுப்பிரமணியன், கனிமொழி மதி ஆகியோருடன் நீதிபதி மகாதேவன், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் - ஆர்.பாலகிருஷ்ணனுக்கு விருது வழங்கும் ஹெச்.வசந்தகுமார், சிவகுமார்

போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளை இலவசமாக வழங்கி, ஏராளமான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளை உருவாக்கி வரும் கோவையைச் சேர்ந்த பேராசிரியர் கனகராஜுக்கு, ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் விருது வழங்கினார்.

மனித மலத்தை மனிதர்களே அள்ளும் கொடுமைக்குத் தீர்வாக, கழிவுநீர்த் தொட்டிகளை எளிதாகச் சுத்தம் செய்யக்கூடிய பாண்டிகூட் (Bandicoot) என்ற இயந்திரத்தைக் கண்டுபிடித்து, உருவாக்கியுள்ள கேரள இளைஞர்கள் எட்டுப் பேருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகமும், தொழிலதிபர் சி.கே.ரங்கநாதனும் விருதை வழங்கினர். “ஏற்கெனவே தமிழகத்தின் முக்கியமான சில நகரங்களில் கழிவை அள்ளும் ரோபோக்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.

‘பாண்டிகூட்’ குழுவினருக்கு விருது வழங்கும் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சி.கே.ரங்கநாதன்
‘பாண்டிகூட்’ குழுவினருக்கு விருது வழங்கும் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சி.கே.ரங்கநாதன்

இவர்களுடைய கண்டுபிடிப்பும் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. விரைவில் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கத் தயார்” என்று அறிவித்தார் தலைமைச் செயலாளர். அவரைத் தொடர்ந்த சி.கே.ரங்கநாதன், ``கடலூர் மாவட்ட நகரங்களில் இந்தக் கருவியைப் பயன்படுத்து வதற்கு, எங்கள் நிறுவனத்தின் சார்பில் உதவ தயாராக இருக்கிறோம். ‘சி.ஐ.ஐ’ அமைப்பின் சார்பில் அகில இந்திய அளவிலும் இந்தக் கருவிகளைக் கொண்டுசேர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்கவும் நாங்கள் தயார்’’ என்று நம்பிக்கையூட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எழுத்தாளர் நக்கீரனுக்கு சிறந்த கட்டுரைத் தொகுப்புக்கான விருதை, ‘வாட்டர் மேன்’ என்றழைக்கப்படும் ராஜேந்திர சிங்கும் திரைப்பட இயக்குநர் கோபி நயினாரும் வழங்கினர். மூத்த எழுத்தாளர் பொன்னீலனுக்கு பெருந்தமிழர் விருதை, தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் வழங்கினர். “இந்த விருது, என் மானுடநேயப் பண்பாட்டுக்கு மதிப்பு தருவதாக உள்ளது” என்று நெகிழ்ந்தார் பொன்னீலன். “தமிழக முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடியாக விளங்கும் பொன்னீலனுக்கு பெருந்தமிழர் விருது வழங்கப்படுவது, இலக்கியத்துக்கே பெருமை தரக்கூடியது” என்றார் எஸ்.ராமகிருஷ்ணன்.

இவர்களுடன் இலக்கியம், விளையாட்டு, எழுத்து, ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மகத்தான தமிழர்களுக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்தது ஆனந்த விகடனின் மேடை.

மகுடம் சூட்டப்பட்ட மகத்தான தமிழர்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism