Published:Updated:

சிங்கப்பெண்களைக் கொண்டாடிய ‘அவள்’!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கலைச்செல்விக்கு ‘பெஸ்ட் மாம்’ விருது
கலைச்செல்விக்கு ‘பெஸ்ட் மாம்’ விருது

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் மரைன் பைலட் என்ற பெருமையைப் பெற்ற ரேஷ்மா நிலோஃபருக்கு ‘சாகச மங்கை’ விருது வழங்கினார் நடிகர் பரத்.

பிரீமியம் ஸ்டோரி

அரசியல், சினிமா, இலக்கியம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களை மீண்டும் கொண்டாடியது அவள் விகடன் விருதுகள் விழா. 2020, பிப்ரவரி 15 அன்று, சென்னை ஃபெதர்ஸ் எ ராதா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதனைப் பெண்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு, ‘மாண்புமிகு அதிகாரி’ விருதை திலகவதி ஐ.பி.எஸ், வனிதா ஐ.பி.எஸ் ஆகியோர் வழங்கினர். “இயற்கையைப் பாதுகாக்கும் எங்கள் நடவடிக்கைகளுக்கு நீலகிரி மாவட்ட மக்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளும் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார் இன்னசென்ட் திவ்யா.

மருத்துவர் சாந்தாவுக்கு, ‘தமிழன்னை’ விருது
மருத்துவர் சாந்தாவுக்கு, ‘தமிழன்னை’ விருது

தனது 93 ஆண்டுக்கால வாழ்க்கையில், 68 ஆண்டுகளை புற்றுநோய் நோயாளிகளை கவனிப்பதிலேயே செலவிட்ட மருத்துவர் சாந்தாவுக்கு, ‘தமிழன்னை’ விருது வழங்கி கௌரவப்படுத்தினர் மருத்துவரும் முன்னாள் அமைச்சருமான ஹெச்.வி.ஹண்டே, இதயநோய் மருத்துவர் கே.எம்.செரியன் மற்றும் மருத்துவர் மல்லிகா திருவதனன் ஆகியோர். “கடவுளின் மனித உருவம் மருத்துவர் சாந்தா. விரைவில் அவர் நோபல் பரிசைப் பெற வேண்டும்” என்று நெகிழ்ந்தார் ஹண்டே. மருத்துவர் சாந்தாவின் உயரிய பணிகளுக்கு உதவும் வகையில், கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு ஒரு லட்சம ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் விகடன் குழுமத்தின் மேலாண் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்.

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் மரைன் பைலட் என்ற பெருமையைப் பெற்ற ரேஷ்மா நிலோஃபருக்கு ‘சாகச மங்கை’ விருது வழங்கினார் நடிகர் பரத். ‘பசுமைப்பெண்’ விருது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தமிழ்ச்செல்விக்கு வழங்கப்பட்டது. நடிகைகள் சீதா, ரம்யா பாண்டியன் ஆகியோரிடமிருந்து விருதுபெற்ற தமிழ்ச்செல்வி, “விவசாயிகளும் மருத்துவர்களைப்போல் கொண்டாடப்பட வேண்டியவர்கள்” என்று கூற, மொத்த அரங்கமும் ஆமோதித்தது.

மருத்துவர் அனுரத்னாவுக்கு ‘சேவை தேவதை’ விருது - ரேஷ்மா நிலோஃபருக்கு ‘சாகச மங்கை’ விருது
மருத்துவர் அனுரத்னாவுக்கு ‘சேவை தேவதை’ விருது - ரேஷ்மா நிலோஃபருக்கு ‘சாகச மங்கை’ விருது

ராஜேந்திர சோழனின் வரலாற்றை மையமாகவைத்து நாவல் எழுதிய கவிஞர் அ.வெண்ணிலாவுக்கு ‘இலக்கிய ஆளுமை’ விருதை, இயக்குநர் வசந்தபாலன் மற்றும் எழுத்தாளரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான டாக்டர் மு.ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர். நரம்பு மற்றும் தசைக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு உதவிகள் செய்யும் ஸ்வர்கா ஃபவுண்டேஷனின் ஸ்வர்ணலதாவுக்கான ‘செயல் புயல்’ விருதை அவரின் கணவர் பெற்றுக்கொண்டார். ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு இந்த விருதை வழங்கினார்.

சென்னை முகப்பேர் புளியமர ஸ்கூலை, தன் கடும் முயற்சிகளால் முன்னேற்றிய ஆசிரியர் கிருஷ்ணவேணிக்கு ‘கல்வி தேவதை’ விருது வழங்கினார் நடிகை நதியா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘லிட்டில் சாம்பியன்’ விருது பெற்றார் பேட்மின்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா. பேசவும் கேட்கவும் இயலாத மாற்றுத்திறனாளியான ஜெர்லின், இப்போது வளர்ந்துவரும் சாதனையாளர். இவருக்கான விருதை நடிகர் சாந்தனு - கிகி தம்பதியர் வழங்கினர். அடுத்த ஆண்டு ஒலிம்பிக்கில் ஜெர்லின் விளையாட இருப்பதை, விழா மேடையில் பகிர்ந்துகொண்டார் அவரின் தந்தை.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அறிவியல் இயக்கப் பிரசாரம், மலம் அள்ளும் தொழிலாளர்களின் வாழ்க்கை மீட்புப் போராட்டம், ‘தாய்ச்சி’ தற்காப்புக்கலையில் பட்டயம் பெற்ற முதல் இந்தியப் பெண் எனப் பல்வேறு பரிமாணங்களைக்கொண்ட பேராசிரியர் மோகனாவுக்கு ‘சூப்பர் வுமன்’ விருதை நடிகைகள் ரேகா, அம்பிகா ஆகியோர் வழங்கினர்.

கலைச்செல்விக்கு ‘பெஸ்ட் மாம்’ விருது - நர்த்தகி நடராஜுக்கு ‘கலை நாயகி’ விருது
கலைச்செல்விக்கு ‘பெஸ்ட் மாம்’ விருது - நர்த்தகி நடராஜுக்கு ‘கலை நாயகி’ விருது
சிங்கப்பெண்களைக் கொண்டாடிய ‘அவள்’!

பெரிய திரை தொடங்கி, சின்னத்திரை வரை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மிளிர்ந்துகொண்டிருக்கும் நடிகை குஷ்புவுக்கு ‘எவர்கிரீன் நாயகி’ விருதை இயக்குநர்கள் எஸ்பி.முத்துராமனும் கஸ்தூரிராஜாவும் வழங்கினர். இவர்களுடன் கலைநாயகிக்கான விருது நர்த்தகி நடராஜுக்கும், சேவை தேவதை விருது மருத்துவர் அனுரத்னாவுக்கும், ‘பெஸ்ட் மாம்’ விருது பார்வைத்திறன் குறைபாடுள்ள பாடகி ஜோதிகலையின் அம்மா கலைச்செல்விக்கும், பிசினஸ் குயின் விருது மது சரணுக்கும், வைரல் ஸ்டார் விருது சகாய பிரிகிடாவுக்கும், யூத் ஸ்டார் விருது அஞ்சனா ஜெயப்ரகாஷுக்கும் வழங்கப்பட்டன.

சாதனைப் பெண்களின் மகிழ்ச்சியாலும் நெகிழ்ச்சியாலும் பெருமைகொண்டது அவள் விகடன் விருதுகள் மேடை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு