கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

அவள் விருதுகள்... ஆங்கர் அவதாரமெடுத்த விஜய் சேதுபதி!

 ‘மதுரை டிரான்ஸ் கிச்சன்’ குழுவினர், கனிமொழி...
பிரீமியம் ஸ்டோரி
News
‘மதுரை டிரான்ஸ் கிச்சன்’ குழுவினர், கனிமொழி...

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணிக் கதாநாயகியாக இடம்பிடித்து, இன்றளவிலும் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கும் மீனாவுக்கு ‘எவர்க்ரீன் நாயகி’ விருது.

பெண்மையைப் போற்றும் விதமாக கடந்த 4 ஆண்டுகளாக ‘அவள் விருதுகள்' வழங்கப்பட்டு வரும் நிலையில் 5-ம் ஆண்டு விருது நிகழ்வு நவம்பர் 18-ம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. அவள் விகடன் தனது வெள்ளி விழாவைக் கொண்டாடிவரும் வேளையில் விருது விழாவும் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்வை சின்னத்திரை பிரபலங்கள் நட்சத்திரா மற்றும் தீபக் தொகுத்து வழங்கினர். விழாவின் சில ஹைலைட்ஸ்...

* தமிழில் ‘டாக்டர்’ படம் மூலம் அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து படங்களில் நடித்து, ரசிகப்படையை உருவாக்கியிருக்கும் பிரியங்கா மோகனுக்கு ‘யூத் ஸ்டார்’ விருது. ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் நாயகன் விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவு ஆகியோர் விருதினை வழங்கினர்.

 ப்ரியங்கா மோகன், ராமசுப்பிரமணியன், செல்லா அய்யாவு, விஷ்ணு விஷால்...
ப்ரியங்கா மோகன், ராமசுப்பிரமணியன், செல்லா அய்யாவு, விஷ்ணு விஷால்...
 ரேணுகா ராமகிருஷ்ணன்,  பிரபா தேவன்...
ரேணுகா ராமகிருஷ்ணன், பிரபா தேவன்...
கன்யா பாபு, ஞானவேல்...
கன்யா பாபு, ஞானவேல்...

* வெள்ளிவிழா கொண்டாடும் அவள் விகடனுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு, விருதுக்கு நன்றி கூறிய பிரியங்காவிடம் சில கேள்விகளைத் தெறிக்கவிட்டனர் தொகுப்பாளர்கள்...

‘‘டாக்டர் படத்துல சிவகார்த்திகேயன் உங்களைப் பொண்ணு பார்க்க வர்றப்போ நிறைய கேள்விகள் கேட்டீங்க. இதுவே ரியல் லைஃப்பா இருந்தா, என்னவெல்லாம் கேட்பீங்க?”

“நம்பிக்கையானவரா இருப்பாங்களா, ரெஸ்பெக்ட் பண்ணுவாங்களான்னு பார்ப்பேன். கல்யாணத்துக்கப்புறம் நடிக்குறதுக்கு நோ சொல்லக்கூடாது'' என்று பதில் சொன்னார் பிரியங்கா.

இடைமறித்த விஷ்ணு விஷால், “ம்... கல்யாணத்துக்கு முன்னால எல்லாரும் ஆமான்னுதான் சொல்லுவாங்க” எனச் சொல்லவே, அரங்கில் சிரிப்பலை.

அடுத்தடுத்து அணிவகுத்த கேள்விகளுக்கு க்யூட் பதில்களாக வந்துவிழுந்தன பிரியங்கா மோகனிடமிருந்து.

* குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணிக் கதாநாயகியாக இடம்பிடித்து, இன்றளவிலும் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கும் மீனாவுக்கு ‘எவர்க்ரீன் நாயகி’ விருது. இயக்குநர் கே.பாக்கியராஜ், நடிகை அம்பிகா ஆகியோர் இணைந்து வழங்கினர்.“மீனா, மூணு படத்துல என் மகளா நடிச்சிருக்கா. கணக்கு சரியாப்பா” என்று சிரித்தபடியே கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார் அம்பிகா. “சினிமாத்துறையில 40 ஆண்டுகள் எப்படிப் போச்சுன்னே தெரியலை. அடுத்து அடுத்துன்னு ஓடிக்கிட்டிருந்ததால திரும்பிக்கூட பார்க்கல” என்ற மீனா, தன் கணவர் மறைவுக்குப் பிறகான நாள்கள் குறித்தும் பகிர்ந்தார். “இந்த இடைப்பட்ட நாள்களில் நான் எந்த நிகழ்ச்சிக்கும் போகல. அதிகமா யார்கிட்டயும் பேசாம இருந்தேன். இப்ப நைஸ் டு பி பேக்” என்றபோது, நெகிழ்ச்சியின் உச்சியில் நின்றிருந்தார் மீனா.

அம்பிகா, பிரியா  பவானி ஷங்கர்...
அம்பிகா, பிரியா பவானி ஷங்கர்...
வடிவுக்கரசி, நாகமணி, விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ்
வடிவுக்கரசி, நாகமணி, விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ்
 சீர்காழி சிவசிதம்பரம், வாணி ஜெயராம், குன்றக்குடி அடிகளார்
சீர்காழி சிவசிதம்பரம், வாணி ஜெயராம், குன்றக்குடி அடிகளார்

* அவ்வை சண்முகியில் மகளாக நடித்த ஆனி மற்றும் நெருங்கிய தோழியான கலா மாஸ்டர் ஆகியோர் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தது, மகள் நைனிகாவுடன் குழந்தைப்பருவ மீனாவை இணைத்து வரையப்பட்ட ஓவியம் ஒன்று மீனாவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது ஆகிய தருணங்கள் ஒவ்வொன்றும் மீனாவை மொத்தமாக மீட்டெடுத்தன. அதை மேடையிலேயே ஆமோதித்தார் மீனா.

* செய்தி வாசிப்பாளராகப் பயணத்தைத் தொடங்கி, சின்னத்திரையில் நுழைந்து, இப்போது பெரியதிரையில் தனக்கொரு இடத்தை உறுதிப்படுத்திக் கலக்கிக் கொண்டிருக்கும் பிரியா பவானி ஷங்கருக்கு ‘அவள் ஐகான்’ விருது. 80, 90களின் ‘ஐகான்' அம்பிகா, இந்த விருதை வழங்கி கௌரவித்தார்.

* நாடோடிப் பழங்குடிச் சமூகத்திலிருந்து படித்து, முதல் நபராக அரசுப் பணியைப் பெற்று சாதித்திருக்கும் இந்திரா காந்தி, இரண்டாவது நபராகச் சாதித்திருக்கும் சுனிதா இருவருக்கும் ‘சூப்பர் வுமன்' விருதுகளை வழங்கிக் கௌரவித்தார் நடிகர் விஜய் சேதுபதி.

“இவங்க ஒண்ணாவது படிக்கும்போது, 47 வயசு ஆணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் பார்த்திருக்காங்க. அப்பவே இவங்க தப்பிச்சு ஓடியிருக்காங்க. இவங்க கதை, ரொம்ப பயங்கரமா இருக்கு. அப்படி ஓடிப்போய் படிக்கற அளவுக்கு உங்களை உந்தினது எது?” என்று வனக்காப்பாளரான இந்திரா காந்தியிடம் விஜய் சேதுபதியே ஆங்கராக மாறிக் கேள்வி கேட்டார். “பிச்சை புகினும் கற்கை நன்றேன்னு சொல்லிருக்காங்களே'' என்றார் இந்திரா.

* மின்வாரியத்தில் உதவிப்பொறியாளராகப் பணியாற்றுகிற சுனிதா, தங்களது சமூகத்தில் இன்னமும் தொடரும் குழந்தைகள் திருமணத்தைப் பற்றிக் கூறியதோடு, அவர்கள் அனைவரும் கல்வி பெறவேண்டும் என்பதற்காக தானும் இந்திரா காந்தியும் இணைந்து எடுத்துவரும் முன்னெடுப்புகளைப் பற்றிப் பகிர்ந்தபோது, அரங்கம் கைதட்டல்களால் இருவரையும் பாராட்டியது.

 டாக்டர் தமிழிசை, பத்ம பத்மா சுப்ரமண்யம்...
டாக்டர் தமிழிசை, பத்ம பத்மா சுப்ரமண்யம்...
 ‘மதுரை டிரான்ஸ் கிச்சன்’ குழுவினர், கனிமொழி...
‘மதுரை டிரான்ஸ் கிச்சன்’ குழுவினர், கனிமொழி...

* “படிப்போட அருமை என்னன்னு இவங்களை மாதிரி மனுஷிகளைப் பார்க்குறப்பதான் புரியுது. இந்த மாதிரியான பழங்குடிச் சமூகத்திலிருந்து படிச்சு வர்றவங்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யணும். சாதிப்பாகுபாட்டைக் களையணும். சமூக மாற்றத்துக்கான உதாரணமாக இவங்க தெரியுறாங்க” என்று சமூகத்தின் மீதான கோபத்தை மேடையில் வெளிப்படுத்தினார் விஜய் சேதுபதி.

* ஐஸ்வர்யா ராஜேஷ் எனும் நடிகை, தமிழ்த்திரைவானில் உதயமாக பலவிதங்களில் உறுதுணையாக இருப்பவர், அவருடைய அம்மா நாகமணி. அவருக்கு ‘பெஸ்ட் மாம்' விருதை விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ், வடிவுக்கரசி இணைந்து வழங்கினர். ஆனந்தக்கண்ணீர் மேலோங்க, “இது என் பொண்ணோட பெருமை. அவ ஜெயிச்சதாலதான் நான் இந்த மேடையில நிக்கறேன்” என நெகிழ்ந்த நாகமணி, “விஜய் சேதுபதி எங்க குடும்பத்துலயே முக்கியமானவர். ‘ரம்மி' படத்துல நாயகியா ஐஸ்வர்யாவைத் தேர்ந்தெடுத்தாங்க. ஆனா, அவங்க சரியா வராதுன்னு சிலர் நிராகரிச்சாங்க. சேதுதான், ‘சரியா வரும்'னு சொல்லி வாய்ப்பை வாங்கிக்கொடுத்தார். இதை எப்பவும் மறக்கமுடியாது” என்று நன்றிப் பெருக்கெடுத்தார் நாகமணி.

ஷைனி வில்சன்.  சாந்தலா ரமேஷ்...
ஷைனி வில்சன். சாந்தலா ரமேஷ்...
அம்பிகா, மீனா, பாக்யராஜ்
அம்பிகா, மீனா, பாக்யராஜ்
ஷிவாங்கி, `பூர்வீகா' நிர்வாகி, செஃப் தாமு...
ஷிவாங்கி, `பூர்வீகா' நிர்வாகி, செஃப் தாமு...

* ‘பாடகி' என்பதைத் தாண்டி, ‘குக்கு வித் கோமாளி' என அடிக்கடி வைரலாகும் ஷிவாங்கிக்கு ‘வைரல் ஸ்டார்' விருதை ‘செஃப்’ தாமு வழங்கினார். “என் அப்பா தாமு சார்கிட்ட முதல்முறையா விருது வாங்குறேன். இதுமாதிரி சாதிச்சவங்க முன்னாடி நானும் நிக்குறது ஒரு மாதிரி குளுகுளுன்னு இருக்கு” என்று தனக்கேயுரிய குறும்புக்குரலில் பேசினார் ஷிவாங்கி.

* கலைநாயகி விருதினை பின்னணிப் பாடகி வாணி ஜெயராமுக்கு வழங்கினார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அந்த நிகழ்வைத் தானும் சேர்ந்து சிறப்பாக்கினார் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம்.

* சுட்டிக்குழந்தைகள் முதல் சீனியர் சாதனையாளர்கள் வரை இன்னும் பலருக்கும், பிரபலங்கள் பலரும் விருதுகளை வழங்கிக் கௌரவிக்க, விழா நெகிழ்வுடன் நிறைவடைந்தது.