Published:Updated:

மீண்டும் ஜாலி டே

ஜாலி டே
பிரீமியம் ஸ்டோரி
ஜாலி டே

அவள் விகடன் - ஜாலி டே! - வாசகிகள் திருவிழா! - அசத்தல் மதுரையில் ஆனந்தக் கண்ணீர்!

மீண்டும் ஜாலி டே

அவள் விகடன் - ஜாலி டே! - வாசகிகள் திருவிழா! - அசத்தல் மதுரையில் ஆனந்தக் கண்ணீர்!

Published:Updated:
ஜாலி டே
பிரீமியம் ஸ்டோரி
ஜாலி டே

வள் விகடன் வாசகிகளுக்காக நடத்தப்படும் `ஜாலி டே' திருவிழா வின் புதிய சீசன் மதுரையில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. ஜூன் 30 அன்று லஷ்மி சுந்தரம் ஹாலில் நடந்த நிகழ்ச்சிக்கு நமது ஸ்பான்சர்கள் மெடிமிக்ஸ் சோப், ஸ்ரீ ஜெயபிரபா ஜுவல்லர்ஸ் சிறப்பான ஆதரவு அளிக்க, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்திருந்த அரங்கில், கரைபுரண்டோடின உற்சாகமும் கொண்டாட்டமும்!

மீண்டும் ஜாலி டே

முன்னதாக, ஜூன் 29 அன்று, மதுரை ரியோ கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற முன்தேர்வுப் போட்டிகளில், 16 வயது லூட்டிகளிலிருந்து 80 வயது பாட்டிகள் வரை ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். அடுப்பில்லா சமையல், ஆடல், பாடல், நடிப்பு, நடனம், மெஹந்தி, ரங்கோலி, கிராஃப்ட், ஹேர்ஸ்டைல், செல்ஃபி, டப்ஸ்மாஷ் என அனைத்துப் போட்டி களிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மறுநாள், `ஜாலி டே' கொண்டாட்டத்தைப் பேராசிரியர் கு.ஞானசம்பந்தமும் அவர் மனைவி அமுதா ஞானசம்பந்தமும் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர். சின்னத்திரை செலிபிரிட்டிகள் சுட்டி அரவிந்த்தும் சித்ராவும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க, ஆரம்பமானது அன்லிமிடெட் ஆனந்தம்!

பேராசிரியர் ஞானசம்பந்தம், “இது பெண்ணரசி மீனாட்சி ஆளுற மண்ணு. சொக்கநாதரே இங்க வீட்டோடு மாப்பிள்ளைதான். மதுரையில ராணி மங்கம்மா அமைத்த சாலைகள் இன்றுவரை இருக்கு. பக்கத்துல சிவகங்கை மாவட்டம், வீரமங்கை வேலுநாச்சியார் ஆட்சிசெய்த பூமி'' என்று ஆளுமைப் பெண்களின் பெருமைகளைப் பட்டியலிட்டு பேச்சை ஆரம்பித்தவர், தன் கிளாஸிக் நகைச்சுவையால் அரங்கையே சிரிக்கவைத்தார். தன் மனைவி அமுதாவிடம், ``நான் நடிகைகளோடு நடிக்கிறதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?'' என்று குறும்பாகக் கேட்க, ``அப்பா, மாமனார் கேரக்டர்லதானே நடிக்கிறீங்க... நடிச்சிட்டுப்போங்க...'' என்று அமுதா கூலாகச் சொல்ல, ஒரே சிரிப்பலை! ஆடியன்ஸ் பக்கம் திரும்பிய ஞானசம்பந்தம், ``உங்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி. இப்போ நான் நயன்தாராவுக்கு அப்பாவா நடிச்சிட்டிருக்கேன்'' என்று சொல்லி கலகலப்பைக் கூட்டினார். தொடர்ந்தது ஸ்வேதாவின் பரதநாட்டியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீண்டும் ஜாலி டே

முன்தேர்வுப் போட்டிகளில் தேர்வாகியிருந்த வாசகிகள் ஃபைனல் ரவுண்டு போட்டிக்காக அதிரடிப் பாடலுக்கு நடனமாடுவது முதல் தேன்குரல் பாடல்களால் தாலாட்டுவது வரை மேடையை குத்தகைக்கு எடுத்து ஜமாய்த்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது உண்மையில் நம் நடுவர்களுக்குத்தான் சிரமமான டாஸ்க்காகவே அமைந்தது. சாக்லேட் பாய் அஸார் அரங்கில் என்ட்ரி கொடுத்த தருணம், இளம் பெண்களின் ஆர்ப்பாட்டம் தணிய நேரம் பிடித்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`அடுத்து வரப்போற ஹீரோ யார் தெரியுமா?' என்று அஸார் அடுத்த சர்ப்ரைஸுக்கு அரங்கத்தை தயாராக்கினார். மாஸாக என்ட்ரி கொடுத்தார் ரியோ. கைதட்டல் முதல் விசில்வரை அவருக்கான வரவேற்பு அதிரடி ரகம். மைக் பிடித்த ரியோ, “சேனல் முதல் சினிமா வரை எனக்கு மக்கள் கொடுக்கிற வரவேற்பு அவ்வளவு மகிழ்ச்சியாவும் நெகிழ்ச்சியாவும் இருக்கு. மக்களுக்குப் பிடிச்சவங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிறது விகடனின் தனிச்சிறப்பு'' என்றவர், தொடர்ந்து வாசகிகளின் கேள்விகளுக்கு கலகலப்பாகப் பதிலளித்தார்.

மீண்டும் ஜாலி டே

மினுமினுக்கும் `துபாய் டிரஸ்'ஸில் `வடிவேலு' பாலாஜி மேடையில் என்ட்ரி கொடுத்து, “ஹேய் ஷாலும்ம்ம்மா!” என்று தன் பாடி லேங்குவேஜ் அட்ராசிட்டிகளுடன் பாட்டிகள் முதல் கல்லூரிப் பெண்கள் வரை கலகலப்பாக்கினார். மேடையில் இருந்து இறங்கி ஒவ்வோர் இருக்கைக்கும் சென்று வாசகிகளுடன் ஜாலியும் கேலியுமாகக் கதை பேசினார். அவரை செல்ஃபி எடுக்க பெண்கள் சூழ்ந்துகொள்ள, அந்த ஆரவாரம் அடங்கி அரங்கம் செட்டில் ஆக பல நிமிடங்கள் ஆகின.

உணவு இடைவேளைக்குப் பிறகு, நம் ஸ்பான்சர்கள் `ஆன் தி ஸ்பாட்' போட்டிகள் நடத்தி வாசகிகளுக்கு பரிசுப்பொருள்களை அள்ளிக் கொடுத்தனர். `மெடிமிக்ஸ்' விளம்பரம் திரையில் ஒளிபரப்பப்பட்டு, அதிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பெண்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜெயபிரபா ஜுவல்லர்ஸ் சார்பாக, ஆரம் முதல் ஒட்டியாணம் வரை, 20 பவுன் முதல் 40 பவுன் வரையிலான தங்க நகைகள் வாசகிகளின் கைகளில் தரப்பட்டு, அவற்றின் எடையை சரியாகக் கணித்துச் சொன்னவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற முத்துலக்ஷ்மி பாட்டி, மிமிக்ரியில் அசத்திய கிருஷ்ணவேணி, நடிப்பில் அசரவைத்த தீபா ரவிக்குமார் அணி, மடிசார் கட்டிவந்து ‘கேட்டேளே அங்கே’ பாட்டுக்கு ஆட்டம் போட்டு நடனத்தில் முதல் பரிசை வென்ற ரூபமணி, `எலும்பா ரப்பரா' என்று அனைவரும் வியக்கும் வகையில் யோகா செய்து அசத்திய பாலாஸ்ரீ, டப்ஸ்மாஷில் அசத்திய அங்குஸ்ருதி உட்பட, வெற்றியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

மீண்டும் ஜாலி டே

‘ஹேர் ஸ்டைல்’, ‘அடுப்பில்லா சமையல்’, ரங்கோலிப் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்குவதற்கு முன், `உங்களுக்கெல்லாம் பரிசு கொடுக்க யார் வந்திருக்காங்க தெரியுமா?' என்று அஸாரும் சித்ராவும் கேட்டதும் பிளாக் அண்டு பிளாக்கில் ஸ்டைலாக என்ட்ரி கொடுத்தவர்... ஆரவ்!

மீண்டும் ஜாலி டே

ஆரவ் மேடைக்கு வந்ததும் வாசகிகளின் ஆரவாரம் பல டெசிபல்கள் அதிகரிக்க, “மதுரை மல்லியைப்போல மதுரைப் பெண்களும் அழகு'' என்று அவர் வாய்திறந்ததும் பெண்களின் மகிழ்ச்சிக் கூச்சல் இன்னும் கூடிப்போனது. `60+ பாட்டிகள் எல்லாம் வாங்க... ஆரவ் கூட டான்ஸ் ஆடலாம்' என்று சித்ரா மேடைக்கு அழைக்க, ஆர்வத்தோடு ஓடிவந்த பாட்டிகள் திருஷ்டி சுற்றி, ஆசீர்வதித்து, கட்டியணைத்து தங்கள் ஆரவ் பேரன் மீது அன்பைப் பொழிய, அதையெல்லாம் ஆனந்தமாக ஏற்றுக்கொண்டார் ஆரவ். `அட, பாட்டைப் போடுங்கப்பா...' என்று கேட்டு பாட்டிகள் டான்ஸ் ஆட ஆரம்பிக்க, செம ஸ்டைலிஷ்ஷாக அவர்களுடன் இணைந்து ஆடினார் ஆரவ். ``இந்த அன்பு என்னை இன்னும் பொறுப்பாக்குது'' என்று ஆரவ் மகிழ்ச்சியுடன் கூறினார். வெளிவரவிருக்கும் அவரின் `மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்' படத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் தெரிவித்தனர் வாசகிகள்.

நிகழ்ச்சியின் நிறைவு நொடிகள்... `அவள் விகடன்' நடத்திய அதிர்ஷ்ட போட்டியில் ஃப்ரிட்ஜ் வெல்லப்போகும் வாசகியைத் தேர்ந்தெடுக்கும் தருணம்... ‘உமாமகேஸ்வரி’ எனப் பெயரும் அவரின் பதிவு எண்ணும் அறிவிக்கப்பட்டதும் பரபரப்பும் பரவசமுமாக மேடைக்கு ஓடிவந்தார் உமாமகேஸ்வரி. “நான் மதுரை டி.வி.எஸ் நகரிலிருந்து வர்றேன். இதுவரை ஆறு முறை `ஜாலி டே'வுக்கு வந்திருக்கேன். விகடனின் எல்லா பத்திரிகைகளையும் வாசிக்கிற தீவிர வாசகி நான். எங்க வீட்டுல இருக்கிற ஃப்ரிட்ஜ் ரொம்பப் பழசாகிடுச்சு. புதுசு வாங்கணும்னு கேட்டுட்டே இருந்தேன். இப்போ கடவுள்தான் இந்தப் பரிசைக் கொடுத்திருக்கார். கடவுளுக்கு நன்றி சொல்றதா அவள் விகடனுக்கு நன்றி சொல்றதான்னே தெரியலை!” என்றார், ஆனந்தக் கண்ணீரோடு!

மகிழ்ச்சி பொங்க ஒரு நாளைக் கழித்து, பரிசுகளை வென்று, அந்த இனிய நினைவுகளோடு விடைபெற்றனர் நம் தோழிகள்!