பிரீமியம் ஸ்டோரி

ஜில் ஜில் கோயம்புத்தூர் எப்போதும் ஸ்பெஷல்தான். அங்கே `அவள் விகடன் ஜாலி டே' என்றால் கூடுதல் ஸ்பெஷல்தானே! இது பிரின்ஸ் ஜுவல்லரி வழங்கும் அவள் விகடன் ஜாலிடே... பவர்டு பை பிஎஸ்ஆர் சில்க் சாரீஸ் & எல்.ஜி பெருங்காயம்... ஹெல்த்தி & டேஸ்ட்டி ஸ்பான்சர் அரோமா அக்மார்க் நெய்.

கோவையில் ரவுடி பேபி கொண்டாட்டம்!

டிசம்பர் 21 அன்று சிருஷ்டி மஹாலில் நடைபெற்ற ஜாலி டே முன் தேர்விலேயே ஜாலி ரகளை செய்ய தொடங்கிவிட்டார்கள் வாசகிகள். அடுப்பில்லா சமையலில் தானிய பண்டங்கள் செய்து அசத்திய சுசீலா அம்மா வுக்கு 85 வயதாம். வாவ்!

பத்மாவதி அம்மாள் கல்ச்சுரல் சென்டரில் டிசம்பர் 22 காலை 10 மணிக்குத் தொடங்கியது ஜாலி டே கொண்டாட்டம். நிகழ்ச்சியை சின்னத்திரை சித்ரா தொகுத்து வழங்க, டைமிங் பாடல்களுடன் அசத்தினார் டி.ஜே சாம் பிரபா. அவ்வளவுதான் குட்டீஸ், டீன்ஸ், சீனியர்ஸ் என எல்லோரும் `ரவுடி பேபி'யாக களம் இறங்கி அரங்கையே அதிரவைத்தார்கள். 69 வயது ஜெயலட்சுமி அம்மாவின் நடனம் அழகு!

ஜாலி டே
ஜாலி டே
கோவையில் ரவுடி பேபி கொண்டாட்டம்!

இடையிடையே நடத்தப்பட்ட `ஆன் தி ஸ்பாட்' போட்டிகள் மூலம் வழங்கப்பட்ட பரிசுகள் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை இரட்டிப்பாக்கின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருநங்கைகளுக்கு நாள்தோறும் நடக்கும் இன்னல்கள், பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகள் போன்றவற்றை தங்கள் நடிப்பில் தத்ரூபமாகக் கொண்டுவந்து ஆடியன்ஸைக் கட்டிப்போட்டார்கள் வாசகிகள்.

ஜாலி டே
ஜாலி டே

தல, தளபதி, சூப்பர் ஸ்டார், உலக நாயகன், விஜய் சேதுபதி போன்ற பிரபலங்களை அச்சு அசலாக தன் மிமிக்ரி மூலம் மேடையில் நிற்க வைத்தார் 'கலக்கப் போவது யாரு' பாலா. சிறுமி அஸ்மிதா மற்றும் அவர் தாயார் இணைந்து 'குட் டச் பேட் டச்' விழிப்புணர்வை நாடகம் மூலமாக எடுத்துரைத்தது அருமை.

வாசகிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதுதானே 'அவள்' வழக்கம். அந்த வகையில் மேடையில் இன்ப அதிர்ச்சி கொடுத்து என்ட்ரியானார் `நாயகி' தொடரின் நாயகி வித்யா பிரதீப். அவரை கேள்வி மழையில் நனைத்த வாசகிகள் `ஆனந்தி ஆனந்தி' என்றழைத்து நெகிழவும் வைத்தார்கள்.

நிகழ்ச்சியின் நிறைவு நேரம் வந்ததுகூட தெரியாத அளவுக்கு மகிழ்ச்சி நிறைந்திருந்த தருணத்தில் என்ட்ரி கொடுத்தார் `பிக்பாஸ்’ கவின். பம்பர் பரிசு வழங்கும் இறுதி நிமிட திக் திக் மொமென்டில் கரகோஷங்களுக்கு இடையே `சுப்ரஜா' என்ற பெயர் அறிவிக்கப்பட, துள்ளிக் குதித்து மேடைக்கு வந்தார் சுப்ரஜா. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க வந்த கவினுக்கும் பல பரிசுகளை வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்தனர் இளம்பெண்கள். நெகிழ்ச்சி, மகிழ்ச்சியாக இனிதே நிறைவடைந்தது கோவை ஜாலி டே!

கோவையில் ரவுடி பேபி கொண்டாட்டம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு