Published:Updated:

ஆறு பதில்களில் அறுசுவை!

யம்மி விருதுகள்-2019
பிரீமியம் ஸ்டோரி
யம்மி விருதுகள்-2019

இரண்டாவது ஆண்டாகக் கோலாகலமாக அரங்கேறிய, அவள் விகடன் கிச்சனின் ‘யம்மி விருதுகள்-2019’ நிகழ்வுகளின் சுவாரஸ்ய தருணங்கள் இவை.

ஆறு பதில்களில் அறுசுவை!

இரண்டாவது ஆண்டாகக் கோலாகலமாக அரங்கேறிய, அவள் விகடன் கிச்சனின் ‘யம்மி விருதுகள்-2019’ நிகழ்வுகளின் சுவாரஸ்ய தருணங்கள் இவை.

Published:Updated:
யம்மி விருதுகள்-2019
பிரீமியம் ஸ்டோரி
யம்மி விருதுகள்-2019

சிறந்த தீம் ரெஸ்டாரன்ட்டுக்கான விருதைப் பெற்ற ‘டிவிஸ்டி டெல்ஸ்’ உணவகத்தின் உரிமையாளர்கள் ரேகா மற்றும் விக்ரம் ஆகியோருக்கு விருதை அளித்தவர்கள் பிக்பாஸ் பிரபலங்கள் அபிராமி, மோகன் வைத்யா. சிறந்த உணவு அலங்கார நிபுணருக்கான விருதைப் பெற்ற வசந்தா தினகருக்கு, அவர் மகனும் சின்னத்திரை பிரபலமுமான தீபக் விருதைக் கொடுத்தது சர்ப்ரைஸ் மொமன்ட். விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் நீயா நானா கோபிநாத், ஈரோடு மகேஷ், செஃப் தாமு, இதய மருத்துவர் சொக்கலிங்கம், ‘நல்லெண்ணெய்’ சித்ரா, நடிகர் ரியோ ஆகிய ஆறு பேரும் பங்கேற்ற மினி ‘டாக் ஷோ’வை நடத்தினார் அர்ச்சனா. ‘அம்மா சமையல், மனைவி சமையல் இரண்டில் எது பெஸ்ட்?’ என்ற அர்ச்சனாவின் கேள்விக்கு ஆறுபேரின் பதில்களும் அறுசுவைகள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆறு பதில்களில் அறுசுவை!

ருச்சி மேஜிக் பிக்கிள்ஸ் ஏழாம் சுவை வழங்கும் அவள் விகடன் கிச்சன் யம்மி செஃப் விருதைப் பெற்ற ‘மெனு ராணி’ செல்லம், “அவள் விகடனுக்கும் எனக்கும் 22 ஆண்டுகளாக உறவு நீடிக்கிறது. அதனால்தான் இந்த விருதைப் பெறுவதற்காக அமெரிக்காவிலிருந்து வந்தேன்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

சிறந்த மெஸ்ஸுக்கான விருதைத் தொழுதூர் அக்கா கடைக்கு அளித்த கோபிநாத், “அடையாளப்படுத்த வேண்டியவர்களைத் தேடித் தேடி அடையாளப்படுத்துகிறது விகடன்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறுதியாக மேடையேறிய நகைச்சுவை நடிகர் சதீஷ். “வாய்ப்பு தேடி சென்னையில அலைஞ்ச காலத்துல கையில காசு இருக்காது. அப்பெல்லாம் காலையில சாப்பாடே கிடையாது. நேரா 12 மணிக்கு ஒரு மெஸ்ல போயி சாப்பிடுவோம். ஊறுகாய்ல பிசைஞ்சு ஒரு ரவுண்டு. கூட்டுல பிசைஞ்சு ஒரு ரவுண்டு, பொரியல்ல பிசைஞ்சு ஒரு ரவுண்டுன்னு ஏழெட்டு ரவுண்டு ஓடும். கடைக்காரருக்கும் தெரியும், இந்தப் பசங்க கஷ்டப்படுறாங்கன்னு. அதனால வயிறு நிறையச் சோறு போட்டுருவாரு. அப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கோம் சாப்பாட்டுக்கு. அதனால யாரும் சாப்பாட்டை வீணாக்காதீங்க” என்று அர்த்தம் நிறைந்த வேண்டு

கோளையும் முன்வைத்தார்.

எஸ்கேஎம் பெஸ்ட் எக் வொயிட் க்யூப் யம்மி ஆப் விருது ஸ்விகிக்கு வழங்கப்பட்டது. ஆம்பூர் ஸ்டார் பிரியாணி வழங்கும் டாப் டிரெண்ட்செட்டர் விருது சாய் கிங்ஸுக்குக் கிடைத்தது. பசியின் ருசியறிந்த பார்வையாளர்களின் உற்சாகக் கைத்தட்டல்களில் களைகட்டியது விருது விழா.

ஆறு பதில்களில் அறுசுவை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism