Published:Updated:

தமிழகத்தின் சுவைக்கரங்களுக்கு மகுடம் சூட்டும் திருவிழா! - அவள் விகடன் கிச்சன் `யம்மி விருதுகள்'

தமிழகத்தின் சுவைக்கரங்களுக்கு மகுடம் சூட்டும் அவள் விகடன் கிச்சனின் யம்மி விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று (22-09-2019) நடைபெறுகிறது.

Vikatan Yummy Awards
Vikatan Yummy Awards

அவள் விகடன் மற்றும் ருச்சி இணைந்து வழங்கும் `YUMMY AWARDS' இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா, காமெடி நடிகர் சதீஷ் போன்ற பல திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், கோபிநாத், அர்ச்சனா, ஈரோடு மகேஷ், ரியோ, நீலிமா ராணி, மணிமேகலை, அமித் பார்கவ் மற்றும் ஜி தமிழ் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நிகழ்ச்சி களைகட்டவிருக்கிறது. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் வெற்றியாளர்கள் வரவிருக்கிறார்கள்.

நிகழ்ச்சியின் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, விகடன் இணையதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களை பார்க்கவும்.

`YUMMY AWARDS' நிகழ்ச்சி சரியாக மாலை 6 மணிக்கு தொடங்கியுள்ளது.

தமிழகத்தின் சுவைக்கரங்களுக்கு மகுடம் சூட்டும் திருவிழா! - அவள் விகடன் கிச்சன் `யம்மி விருதுகள்'