ரெசிப்பிஸ்
Published:Updated:

மனம் மகிழ ஒரு மாபெரும் விருந்து!

யம்மி விருதுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
யம்மி விருதுகள்

தமிழகத்தின் சுவைக் கரங்களுக்கு மகுடம் சூட்டிய திருவிழா ஹைலைட்ஸ்

மனம் மகிழ ஒரு மாபெரும் விருந்து!

உலகில் நன்றியையும் அங்கீகாரத்தை யும் எதிர்பார்த்துச் செய்யப்படாத விஷயங்களில் ஒன்று, சமையல். பசியில் இருப்பவர்களுக்குப் பக்குவமாகச் சமைத்து அன்போடு பரிமாறும் கரங்களுக்கு விருதளிக்கும் அவள் கிச்சன் ‘யம்மி விருதுகள்’, அந்த விதியை மாற்றி எழுதுபவை. 2019-ம் ஆண்டுக்கான ‘யம்மி விருதுகள்’ விழா செப்டம்பர் 22 அன்று, சென்னை ஃபெதர்ஸ் ஹோட்டலில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

மெனுராணி செல்லத்துக்கு...
மெனுராணி செல்லத்துக்கு...
`சாய் கிங்ஸ்’ஸுக்கு...
`சாய் கிங்ஸ்’ஸுக்கு...

ருச்சி மேஜிக் பிக்கிள்ஸ் - ஏழாம் சுவை, SKM Best Egg White Cube மற்றும் ஆம்பூர் ஸ்டார் பிரியாணி நிறுவனத்தினர் விழாவை இணைந்து வழங்கினர். சிறந்த செஃப் முதல் பெஸ்ட் பிரியாணி வரை ஏராளமான பிரிவுகளில் சமையற்கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பல சுவாரஸ்யத் தருணங்களுடன் அரங்கேறிய நிகழ்ச்சியை கலகலப்புடன் தொகுத்து வழங்கினார் அர்ச்சனா.

வசந்தா தின்கருக்கு..., `வாசன் கபே’க்கு...
வசந்தா தின்கருக்கு..., `வாசன் கபே’க்கு...
`யுபிஎம்’ உணவகத்துக்கு..., டாக்டர் செஃப் தாமுவுடன் 
தமிழ்நாடு மாஸ்டர் செஃப் காயத்ரி
`யுபிஎம்’ உணவகத்துக்கு..., டாக்டர் செஃப் தாமுவுடன் தமிழ்நாடு மாஸ்டர் செஃப் காயத்ரி

‘சிறந்த சைவ உணவக’த்துக்கான விருதோடு தொடங்கியது ‘யம்மி விருதுகள்’. திருவாரூர் வாசன் கபே உரிமையாளர் முருகானந்தத்துக்கு ‘சிறந்த சைவ உணவகம்’ விருதை வழங்கினார், `ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை’ இயக்குநரும் பரத நாட்டியக் கலைஞருமான கவிதா ராமு ஐ.ஏ.எஸ்.

‘சிறந்த தீம் உணவகம்’ விருதை, ‘ட்விஸ்டி டெயில்ஸ்’ உணவகம் தட்டிச்சென்றது. ‘ட்விஸ்டி டெயில்ஸி’ன் உரிமையாளர்கள் ரேகா, விக்ரமோடு இணைந்து அவர்களின் க்யூட் நாய்க் குட்டிகளும் விருதைப் பெற்றுக் கொண்டது செம சுவாரஸ்யம்.

`ட்விஸ்டி டெயில்ஸ்’ உணவகத்துக்கு..., `அக்கா கடை மெஸ்’ஸுக்கு...
`ட்விஸ்டி டெயில்ஸ்’ உணவகத்துக்கு..., `அக்கா கடை மெஸ்’ஸுக்கு...

அடுத்த விருதுக்கு இடையில் அபிராமிக்கு, குட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டது. திரையில் காட்டப்படும் கண்களைக்கொண்டு, அந்தப் பிரபலங்கள் யாரெனக் கண்டுபிடிக்க வேண்டும். அத்தனையையும் சரியாகச் சொல்லி கைதட்டல்களை அள்ளினார் அபிராமி.

அடுத்ததாக, ‘சிறந்த பாரம்பர்ய உணவகம்’ விருதை ஹைவேஸ் பயணிகளுக்கான ‘99 கிலோமீட்டர் காபி ஸ்டாப்’ உணவகம் பெற்றது. இயக்குநர்கள் ஜெனிபர் சாலமன் மற்றும் ஜெயா சாலமனுக்கு ஈரோடு மகேஷ், புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம் மற்றும் சௌபாக்யா வெட் கிரைண்டர் நிறுவனர் வரதராஜன் ஆகியோர் விருதை வழங்கினார்கள்.

நடிகை சாக்‌ஷி மற்றும் ருச்சி ஊறுகாய் நிறுவனத்தைச் சேர்ந்த வெற்றிவேல், ‘சிறந்த இன்னோவேஷன்’ விருதை ‘இட்லி’ இனியவனுக்கு வழங்கினார்கள்.

`அக்கா கடை மெஸ்’ஸுக்கு..., `இட்லி’ இனியவனுக்கு...,
`தொன்னை பிரியாணி ஹவுஸ்’ஸுக்கு...
`அக்கா கடை மெஸ்’ஸுக்கு..., `இட்லி’ இனியவனுக்கு..., `தொன்னை பிரியாணி ஹவுஸ்’ஸுக்கு...

உணவை வயிற்றுக்கு முன் கண்களுக்கு விருந்தளிக்கும் ‘சிறந்த உணவு அலங்கார நிபுண’ருக்கான விருதை வசந்தா தின்கர் பெற்றார். இவருக்கு விருதளித்துப் பெருமைகொண்டார், இவரின் மகன், பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் தீபக். அவருடன் அழகுக்கலை நிபுணர் வசுந்தராவும் இணைந்து விருதளித்தார். “பெரும்பாலான பெண்கள் முடங்கிடுற 45 வயசுலதான், நான் ‘ஃபுட் ஸ்டைலிங்’ துறைக்குள்ளேயே நுழைந்தேன். இடையில் என்னைத் தளர்த்தப் பார்த்த புற்றுநோயையும் வென்று, பதினாறு வருஷத்துல ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபுட் ஸ்டைலிங் செஞ்சிருக்கேன்’’ என்று பூஸ்ட் அப் வார்த்தைகள் பகிர்ந்தார் வசந்தா.

விதவிதமான உணவு வகைகளை அன்போடு பரிமாறும் தொழுதூர், அக்கா கடை, ‘சிறந்த மெஸ்’ விருது பெற்றது. அதை `நீயா? நானா?’ கோபிநாத், பொன்ப்யூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சேர்மன் பொன்னுசாமி மற்றும் அவர் மனைவி மனோரஞ்சிதம் வழங்கினர். ‘`எப்பவும் சாப்பாடு போதுமான்னு கேட்க மாட்டேன், இன்னும் வேணுமான்னுதான் கேட்பேன்” என்றார் வசந்தி அக்கா வாஞ்சையுடன்.

செப்புச் சாமான்கள் போன்ற குட்டிப் பொருள்களைக்கொண்டு வெளிப்புறச் சமையல் படப்பிடிப்புகளை நடத்தி இணையதளத்தில் வெற்றிபெற்றிருக்கும் முதல் இந்திய சேனலான ‘தி டைனி ஃபுட்ஸ்’, ‘சிறந்த இணையதள செஃப்’ விருதைப் பெற்றது. இதை நடத்தும் ராம் - வளர்மதி தம்பதிக்கான விருதை ‘மீட் அண்டு ஈட்’ உணவகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரங்கநாதன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் மமதி சாரி மற்றும் ‘வானிலை’ மோனிகா வழங்கினார்கள்.

‘தி டைனி ஃபுட்ஸ்’ சேனலுக்கு..., மெனுராணி செல்லத்துடன் அவள் விகடன் சமையற்கலைஞர்கள்...
‘தி டைனி ஃபுட்ஸ்’ சேனலுக்கு..., மெனுராணி செல்லத்துடன் அவள் விகடன் சமையற்கலைஞர்கள்...

விருதுகளுக்கு இடையே சுவாரஸ்யமான உணவுக் கலந்துரையாடலான ‘ஃபுட் டாக்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தொகுப்பாளர் கோபிநாத், ஈரோடு மகேஷ், இதயநோய் மருத்துவ நிபுணர் சொக்கலிங்கம், ‘நல்லெண்ணெய்’ சித்ரா, செஃப் தாமு மற்றும் நடிகர் ரியோ ஆகியோர் உரையாடினர்.

டயட் பற்றிய கேள்விக்கு நல்லெண்ணெய் சித்ரா, “என்னைப் பொறுத்தவரைக்கும் டயட் நல்ல விஷயம்தான். செரிமான உறுப்புகளுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் அவசியம்தானே” என்று ஷார்ட் அண்டு ஸ்வீட்டாகப் பேசினார்.

ஆர்கானிக் உணவுகள் பற்றிப் பேசிய ரியோ, “சின்ன வயசுல சளி பிடிச்சா, சுக்கு, மிளகு எல்லாம் தட்டி தொண்டைக்குள்ள தள்ளிவிடுவாங்க. இப்போ என்னென்னவோ செஞ்சு பார்க்குறேன், அவ்வளவு சீக்கிரத்துல குணமாக மாட்டேங்குது. ஆர்கானிக் உணவுகள் இந்தக் காலகட்டத்துக்கு ரொம்பவே அவசியம். ஆனா, அதை இப்போ வியாபாரமா மாத்திட்டாங்க” என்றார்.

`ஸ்விகி’க்கு..., `அறுசுவை அரசி’ வெற்றியாளர்கள்
`ஸ்விகி’க்கு..., `அறுசுவை அரசி’ வெற்றியாளர்கள்

கலகலப்பான ஃபுட் டாக்கைத் தொடர்ந்து, ‘சிறந்த அசைவ உணவகம்’ விருது ஈரோடு மாவட்டம் பெருந்துறை யிலுள்ள யுபிஎம் உணவகத்துக்கு வழங்கப் பட்டது. இந்த உணவகத்தின் உரிமையாளர் கருணைவேல் மற்றும் அவரின் மனைவிக்கு, ‘செம்பருத்தி’ சீரியல் புகழ் ஷபானா மற்றும் ‘ஊர்வம்பு’ லக்ஷ்மி விருதளித்தனர். தொடர்ந்து, ஷபானா கண்களைக் கட்டிக்கொள்ள, லக்ஷ்மி `ருச்சி மேஜிக் பிக்கிள்ஸ் ஏழாம் சுவை’ ஊறுகாயை அவருக்கு ஊட்டிவிட, அதன் ஃப்ளேவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஒரு மினி டாஸ்க் கொடுக்கப்பட்டது. எலுமிச்சை, பூண்டு என சரியாகச் சொல்லி பரிசுகளை வென்றாச்சு!

டயட்டீஷியன் பி.கிருஷ்ணமூர்த்திக்கு ‘சிறந்த டயட்டீஷியன் விருது’ வழங்கப் பட்டது. சின்னத்திரை நடிகர் ஸ்ரீ விருது வழங்கினார். “உணவே மருந்து. எவ்வளவு சாப்பிடணுமோ அவ்வளவே சாப்பிட வேண்டும்” என்று அறிவுறுத்தினார் கிருஷ்ண மூர்த்தி.

அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் சுடச்சுட சுவையான பிரியாணி பரிமாறும் சென்னை, ‘தொன்னை பிரியாணி’ உணவகம், ‘சிறந்த பிரியாணி’க்கான விருது பெற்றது. செஃப் தாமு, சின்னத்திரை நடிகை ரேமா, நடிகர் சாய்சக்தி ஆகியோர் விருதளித்தனர். “எங்க வீட்டுல 200 மாடுகள் வெச்சிருந்தோம். இப்போ சிந்துஜா, வனஜா, கிரிஜா, முட்டுற மாடுன்னு நாலு மாடுகள் மட்டும்தான் நிக்குது. இதுங்க கொடுத்த பால்தான் எங்களுக்கு வாழ்வாதாரமா இருந்துச்சு’’ என்று நெகிழ்ந்தார் உரிமையாளர் ஜெயேந்திரன்.

உணவுத்துறையையே மாற்றியமைக்கும் புரட்சியைச் செய்த ‘ஸ்விகி’க்கு SKM Best Egg White Cube வழங்கும் ‘யம்மி ஆப்’ விருது கிடைத்தது. சின்னத்திரை நட்சத்திரங்களான அமித் பார்கவ் மற்றும் நீலிமா ராணியிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டார்கள், ஸ்விகியின் விற்பனை அதிகாரிகள்.

சமீபத்தில் SKM நிறுவனம் நடத்திய, முட்டையின் வெள்ளை கியூப் பயன்படுத்தி உணவு வகைகளைத் தயார் செய்யும் ‘அறுசுவை அரசி’ சமையல் போட்டியில் சமையற்கலைஞர் லதாமணி ராஜ்குமார் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தார். வெற்றிபெற்ற சரஸ்வதி, பிரேமா மற்றும் தனலட்சுமி அருண் ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

`ருச்சி மேஜிக் பிக்கிள்ஸ் ஏழாம் சுவை’ வழங்கும் அவள் விகடன் கிச்சன் யம்மி செஃப் விருது 70 ப்ளஸ் வயதிலும் சுறுசுறுப்பாக அசத்தும் ‘மெனுராணி’ செல்லத்துக்கு அளிக்கப்பட்டது. தொகுப்பாளினி மகேஸ்வரி, நடிகர் பவித்ரன், செஃப் தேவ் ஆகியோர் செல்லத்துக்கு விருதை வழங்கினார்கள். செல்லத்தின் முன்னாள் மாணவிகளான நடிகை ஸ்ரீப்ரியா ஒலி மூலமும், தொகுப்பாளினி பிரியதர்ஷினி காணொலி மூலமும் குருவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். சமையற்கலையில் செல்லத்துக்கு இது 50-வது வருடம்!

அர்ச்சனா, டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்திக்கு..., டாக்டர் சொக்கலிங்கம், செஃப் தாமு, ரியோ, சித்ரா, ஈரோடு மகேஷ், கோபிநாத்
அர்ச்சனா, டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்திக்கு..., டாக்டர் சொக்கலிங்கம், செஃப் தாமு, ரியோ, சித்ரா, ஈரோடு மகேஷ், கோபிநாத்

ஆம்பூர் ஸ்டார் பிரியாணி வழங்கும் ‘டாப் ட்ரெண்ட்செட்டர் விருது’ சாய் கிங்ஸுக்குக் கிடைத்தது. அதன் உரிமையாளர்களும் நண்பர்களுமான ஜெஹபர் சாதிக், பாலாஜி சடகோபனுக்கு நடிகர் சதீஷ், நடிகைகள் ரம்யா பாண்டியன், சாந்தி வில்லியம்ஸ், `நம்ம வீடு வசந்த பவன்’ ரவி, `அடையாறு ஆனந்த பவன்’ சீனிவாச ராஜா ஆகியோர் விருதை வழங்கினார்கள்.

மனம் மகிழ ஒரு மாபெரும் விருந்து!

அருமையான அறுசுவை விருந்தோடு மனத்தையும் வயிற்றையும் இனிதே நிறைத்து, `அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள்’ விழா நிறைந்தது.