Published:Updated:

தேனீ வளர்த்தால் வருமானம் ‘கொட்டும்’!

தேனீ வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
தேனீ வளர்ப்பு

கொண்டாட்டம்

தேனீ வளர்த்தால் வருமானம் ‘கொட்டும்’!

கொண்டாட்டம்

Published:Updated:
தேனீ வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
தேனீ வளர்ப்பு

எஸ்.சந்திரமௌலி

ழங்குடி இன மக்களின் மேம்பாட்டுக்காக இயற்கையுடன் இணைந்த சிறப்புத் திட்டங்களைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தி வருகிறது, நபார்டு வங்கி. அத்திட்டங்களில் தேனீ வளர்ப்பும் ஒன்று. விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்காகவும் பழங்குடி மக்களின் வருவாயை அதிகரிப்பதற்காகவும் தேனீ வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில், உலக தேனீ தினத்தைச் சென்னையில் கொண்டாடியது, தமிழ்நாடு மண்டல நபார்டு வங்கி.

தேனீ வளர்த்தால் வருமானம் ‘கொட்டும்’!

இந்நிகழ்ச்சியில், பல்வேறு மாவட்டங்களில் பழங்குடியின மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடியினர் கலந்துகொண்டு, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு மண்டல நபார்டு தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன், உலக தேனீ தினக் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தையும், விவசாய உற்பத்தியில் தேனீக்கள் ஆற்றிவரும் பங்களிப்பு குறித்தும் பேசினார். பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ராஜேஸ்வர ராவ், தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகள்குறித்து விவரித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், “தேனீக்கள் மூலமாகத் தேன் கிடைப்பதும், மகரந்தச் சேர்க்கை மூலமாகப் பயிர்களில் உற்பத்தி அதிகரிப்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், தேனீக்களிடமிருந்து பல மதிப்பு மிகுந்த பொருள்களும் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றில் நாம் இன்னமும் அதிக கவனம் செலுத்தினால் கூடுதலாகச் சம்பாதிக்கலாம். வேலை வாய்ப்புகளைப் பெருக்கலாம்.

தேனை, ‘தங்கத் திரவம்’ என்று சொல்வார்கள் மக்கள். அதன் நிறத்துக்காக மட்டுமல்ல. அதன் மூலமாகக் கிடைக்கும் அளவில்லாத பயன்களுக்காகவும்தான் இப்படி அழைக்கிறார்கள். தேனீக்கள், தேன், ராயல் ஜெல்லி, தேன் மெழுகு, தேன் விஷம் எனப் பல மருத்துவ குணம் கொண்ட பொருள்களைக் கொடுக்கின்றன. ராயல் ஜெல்லி என்ற உணவைத்தான், ராணித் தேனீ தன் வாழ்நாள் முழுவதும் சாப்பிடுகிறது. ராயல் ஜெல்லி, பவுடர் வடிவிலும், கேப்சூல் வடிவிலும் சர்வதேச சந்தையில் மிக அதிக விலையில் விற்கப்படுகிறது. ஆனால், அதன் உற்பத்தி இன்னமும் இந்தியாவில் சூடுபிடிக்கவில்லை. தேனீக்களிடமிருந்து கிடைக்கும் இன்னொரு பொருள் ‘பீ போலன்’ (Bee Pollen). இதில் புரோட்டீன், அமீனோ அமிலம், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை அபரிமிதமாக உள்ளன. எடுக்கப்படும் நிலப்பகுதியைப் பொறுத்து ஒரு கிலோ பீ போலன், 2,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதை நம் ஊர்களிலும் தயாரித்து, சர்வதேச அளவில் சந்தைப்படுத்த முடியும்.

நிகழ்வில்...
நிகழ்வில்...

தேனீக்கள் மூலமாகக் கிடைக்கும் மெழுகு, அழகு சாதனப் பொருள்கள், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் பொள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நல்ல கிராக்கி இருக்கிறது. வேலைக்காரத் தேனீக்களிடமிருந்து எடுக்கப்படும் விஷத்துக்குப் பல மருத்துவ குணங்கள் உண்டு. தோல் வியாதிகளுக்கும் முதுகு வலிக்கும் இது நிவாரணம் அளிக்கிறது.

இந்திய அளவில், அதிக அளவில் தேன் உற்பத்தி செய்யும் மாநிலம், உத்தரப் பிரதேசம். அங்கே 2017-18-ம் ஆண்டில் 17,200 டன் அளவு தேன் உற்பத்தி செய்யப்பட்டது. இரண்டாவது இடம் மேற்கு வங்காளம் (16,000 டன்). மூன்றாவது இடம் பஞ்சாப் (15,200 டன்).

தேசிய தேன் கழகத் தகவலின்படி இந்தியாவில் தேன் உற்பத்தி, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2006-07-ம் ஆண்டில் 51,000 டன் அளவிலிருந்த தேன் உற்பத்தி, 2018-19-ம் ஆண்டில் 1,15,000 டன் அளவாக அதிகரித்துள்ளது. துருக்கி நாட்டில் மக்கள் சராசரியாக ஆண்டுக்கு 1.31 கிலோ அளவு தேன் உட்கொள்கிறார்கள். ஆனால், இந்தியாவிலோ, தேனை மருந்தாகத்தான் மக்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாக, இந்தியர்கள் சராசரியாக ஆண்டுக்கு 20 கிராம் அளவுக்கே தேனை உட்கொள்கிறார்கள். உலகில் அதிகமாகத் தேன் உற்பத்தி செய்யும் நாடு சீனா. துருக்கி, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்துதான் இந்தியா இருக்கிறது.

சர்வதேச அளவில் பல பகுதிகளிலும் தேனீக்கள் குறைந்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், விவசாயத்தில் மிக அதிகமாகப் பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்துவதுதான்.

மேலும் வனங்கள், காடுகளை அழிப்பதும் முக்கிய காரணம். தேனீ வளர்ப்பை, விவசாயத்தின் ஒரு துணைத் தொழிலாக அங்கீகரித்து வங்கிகள் கடனுதவி வழங்க முன்வர வேண்டும். தேனீக்களுக்குக் காப்பீட்டுத் திட்டங்களும் கொண்டுவரப்பட வேண்டும்” என இனிப்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.