Published:Updated:

கொலு தீம், நைவேத்தியம், ரிட்டர்ன் கிஃப்ட், ஷாப்பிங்... பிரபலங்களின் நவராத்திரி கொண்டாட்டம்!

 நவராத்திரி கொண்டாட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
நவராத்திரி கொண்டாட்டம்!

சரஸ்வதிக்கு நன்றி சொல்லும் விதமா, என் வீட்டுல இருக்கும் இசைக்கருவிகள், இசைக்குறிப்பு புத்தகங்களை வெச்சு ஒன்பதாவது நாள்ல வழிபடுவேன்.

கொலு தீம், நைவேத்தியம், ரிட்டர்ன் கிஃப்ட், ஷாப்பிங்... பிரபலங்களின் நவராத்திரி கொண்டாட்டம்!

சரஸ்வதிக்கு நன்றி சொல்லும் விதமா, என் வீட்டுல இருக்கும் இசைக்கருவிகள், இசைக்குறிப்பு புத்தகங்களை வெச்சு ஒன்பதாவது நாள்ல வழிபடுவேன்.

Published:Updated:
 நவராத்திரி கொண்டாட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
நவராத்திரி கொண்டாட்டம்!

பாரம்பர்யத்தைக் காப்பதிலும் மக்களின் மனங்களைச் சங்கமிக்கச் செய்வதிலும் பண்டிகைகளின் பங்கு முக்கியமானது. அதில், நவராத்திரிக்குத் தனிச்சிறப்பு உண்டு. இந்த ஒன்பது நாள்கள் கொண்டாட்டத்தைப் பிரபலங்கள் தங்களின் வீடுகளில் எப்படியெல்லாம் களைகட்டச் செய்கிறார்கள் என தெரிந்துகொள்ளச் சிலரிடம் பேசினோம்.

கொலு தீம், நைவேத்தியம், ரிட்டர்ன் கிஃப்ட், ஷாப்பிங்... பிரபலங்களின் நவராத்திரி கொண்டாட்டம்!

வருடந்தோறும் புது பொம்மைகள்!

அம்மு (சின்னத்திரை நடிகை)

“என்கிட்ட 1500க்கும் மேற்பட்ட பொம்மைகள் இருக்கு. அதையெல்லாம் அடுக்கவே போதுமான இடம் இல்ல. ஒவ்வொரு வருஷமும் புதுசா சில பொம்மைகளை வாங் குறதோட கொலு ஷாப்பிங்கை நிறுத்திப்பேன். இதுவரை ஒவ்வொரு நவராத்திரிக்கும் ஒன்பது படிக்கட்டுகள்ல மட்டுமே கொலு வைச்சிட்டிருந்தேன். இந்த வருஷம் மூணா பிரிச்சு, பக்கவாட்டுலயும் நிறைய பொம்மைகளை அடுக்கலாம்னு ப்ளான் பண்ணிருக்கேன். இருக்குற எல்லா பொம்மைகளையும் அடுக்காம, பொம்மைகளைத் தேர்வு பண்ணி அடுக்கணும்னு யோசிச்சிருக்கேன். அதனால் கொலு பொம்மைகளுக்கு ஒரு ஃபோகஸ் கிடைக்கும். பொம்மைகளை இறக்குறது, துடைக்கிறது, கலர் பண்றது, ஃப்ரெண்ட்ஸை இன்வைட் பண்றதுனு நவராத்திரி நெருங்கிட்டா நான் ரொம்ப பிஸி ஆயிடுவேன். இப்போ மினியேச்சர் பொம்மைகள் கலெக்‌ட் பண்ணிட்டு இருக்கேன். அடுத்தடுத்த வருஷங்கள்ல நிச்சயம் மினியேச்சர் கொலு வைக்கிற ப்ளானும் இருக்கு.”

கொலு தீம், நைவேத்தியம், ரிட்டர்ன் கிஃப்ட், ஷாப்பிங்... பிரபலங்களின் நவராத்திரி கொண்டாட்டம்!

ஒன்பது நாள்களும் ஸ்பெஷல் நைவேத்தியம்!

அருணா சாய்ராம் (கர்னாடக இசைப் பாடகி)

“துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு தலா மூணு நாள்கள் சிறப்பு வழிபாடு செய்யறதுதான் நவ ராத்திரியின் சிறப்பம்சம். இந்த ஒன்பது நாள்களிலும் எங்க வீட்டுல வழிபாடு தடபுடலா இருக்கும். அம்பாளுக்குச் சிறப்பு அலங்காரம் செஞ்சு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், அக்காரவடிசல், சுண்டல், அவல், வடைனு தினம் ஒரு நைவேத்தியத்தைப் படைச்சு வழிபடுவோம். முத்துசுவாமி தீட்சிதரின் ‘நவாவரணக் கீர்த்தனை’கள் ரொம்பவே பிர சித்தம். நவராத்திரி பூஜையில அந்தக் கீர்த்தனைகளைப் பாடி அம்பாளுக்குப் பூஜை பண்ணுவேன்.

சரஸ்வதிக்கு நன்றி சொல்லும் விதமா, என் வீட்டுல இருக்கும் இசைக்கருவிகள், இசைக்குறிப்பு புத்தகங்களை வெச்சு ஒன்பதாவது நாள்ல வழிபடுவேன். பத்தாவது நாள் விஜயதசமியை ‘வித்யாரம்பம்’னு சொல்லுவோம். அன்றைய தினம், என் வளர்ச்சிக்குக் காரணமா இருந்த ஆசான் ஒருவரைச் சந்திச்சு, குருதட்சணை கொடுத்து ஆசீர்வாதம் வாங்குவேன். பிறகு, அவர்கிட்ட ஏதாச்சும் ஒரு புது விஷயத்தைக் கத்துப்பேன். இந்த வழக்கத்தை என் நாலு வயசுலேருந்து கடைப்பிடிக்கிறதோடு, நவராத்திரி யையும் மகிழ்ச்சியோடு கொண்டாடுறேன்!”

கொலு தீம், நைவேத்தியம், ரிட்டர்ன் கிஃப்ட், ஷாப்பிங்... பிரபலங்களின் நவராத்திரி கொண்டாட்டம்!

ஹோம் மேடு ரிட்டன் கிஃப்ட்ஸ்!

ப்ரீத்தா ராகவ் (சின்னத்திரை நடிகை)

“எங்க வீட்டு கொலுவுல ரிட்டன் கிஃப்ட்டுகள் எப்போதும் ஸ்பெஷல். பார்த்துப் பார்த்து தேர்வு பண்ணுவேன். நான் என்னோட சோஷியல் மீடியால பெண் தொழில் முனை வோர்களை இலவசமாக புரொமோட் பண்றேன். அவங்க எனக்கு மெசேஜ் அனுப்பி தொடர்பு கொண்டா போதும். அவங்க புரொஃபைல் செக் பண்ணிட்டு, அவங்க பொருள் களை நான் விளம்பரப்படுத்தித் தர்றேன். அதனால நிறைய தொழில்முனைவோர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் என்னோட தொடர்பில் இருக்காங்க. என்னோட கொலுவுக்கான ரிட்டன் கிஃப்ட்களையும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அல்லது பெண் தொழில்முனைவோர் சங்கத்துலேருந்துதான் வாங்குவேன்.

இந்த வருஷ நவராத்திரிக்கு, சணலால தயாரிக்கப்பட்ட மினி ஹேண்ட் பேக்ஸை தேர்வு பண்ணிருக்கேன். அந்தப் பைகளை கைத்தறி துணிகளால அலங்கரிக்கச் சொல்லி யிருக்கேன். ஆரோக்கியம் தரும் லெமன் கிராஸ் செடிகளையும் அதோட சேர்த்துக் கொடுக்குற திட்டமிருக்கு. இயற்கை சார்ந்த பொருள்களை பரிசா கொடுக்கும்போது மிகப்பெரிய மன திருப்தி கிடைக்குது.''

கொலு தீம், நைவேத்தியம், ரிட்டர்ன் கிஃப்ட், ஷாப்பிங்... பிரபலங்களின் நவராத்திரி கொண்டாட்டம்!

சிம்பிளான தீமில் கொலு பொம்மைகள்!

ரூபிணி (நடிகை)

“என் சின்ன வயசுல ஒவ்வொரு வருஷமும் நவராத்திரி யைத் திருவிழா மாதிரி எங்கம்மா கொண்டாடுவாங்க. எனக்குக் கல்யாணமானதும், கொலு வைக்க அவங்க பயன்படுத்திய பொம்மைகளை எனக்குக் கொடுத்தாங்க. அதையெல்லாம் பத்திரப்படுத்தி, கொலு வைக்க இப்ப வரைக்கும் நான் பயன்படுத்துறேன். எங்க வீட்டுல 3 - 5 அடுக்குகள்ல கொலு பொம்மைகள் வைப்போம். கல்வி, சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள், வித்தியாசமான வடிவங்கள்ல கிடைச்ச கடவுள் சிலைகள்னு ஒவ்வொரு வருஷமும் வெவ்வேறு தீம்ல கொலு வைப்பேன். சிம்பிளாவும், அதேசமயம் பார்க்க ஈர்ப்பா இருக்கிற மாதிரியும் பார்த்துப்பேன். பொம்மைகள், நவராத்திரி கொண்டாட்டத்துக்கான பொருள்களை வாங்கவும் தனி ஷாப்பிங் போவேன்.

நான் மும்பையில வசிக்கிறேன். தமிழ்நாட்டுக்கும் இந்த ஊர் நவராத்திரி கொண்டாட்டத்துக்கும் சில வித்தி யாசங்கள் இருக்கும். ஒன்பது நாள்களும் துர்கைக்கு மட்டும் நாங்க வழிபாடு செய்வோம். மண் பாத்திரத்துல நவதானியங்கள்ல முளைப்பாரி செஞ்சு, இதேபோல வருஷம் முழுக்க எல்லோருக்கும் வளங்கள் செழிக் கணும்னு வீட்டுல பூஜை செய்வோம். பக்கத்து வீட்டுக் காரங்க, தோழிகள், சொந்தங்கள் பலரும் எங்க வீட்டு பூஜையில கலந்துப்பாங்க. விநாயகர் சதுர்த்தி மாதிரியே, பல இடங்கள்ல துர்கை சிலையை வெச்சு கூட்டு வழிபாடு பண்ணுவோம். அதுல, கச்சேரி, டான்ஸ்னு ஒன்பது நாளும் திருவிழா மயமா இருக்கும். நானும் தவறாம கலந்துகிட்டு, கோலாட்டம் ஆடுவேன்.”