Published:Updated:

கிறிஸ்துமஸ் சீஸன்... மெக்ஸிகன் உணவு... யம்மி யம்மி!

மெக்ஸிகன் உணவு
பிரீமியம் ஸ்டோரி
News
மெக்ஸிகன் உணவு

அனுபவம் மிக்க மூத்த செஃப் திருப்பதியிடம் புரிட்டோஸ் டிஷ் செய்முறை பற்றி கேட்டோம்.

கிறிஸ்துமஸ் சீஸன் தொடங்கியதையொட்டி சென்னை ஓ.எம்.ஆர் ஹாலிடேஇன் ஸ்டார் ரெஸ்டாரன்ட் ‘தி லாஞ்ச்’ மெக்ஸிகன் ஸ்டைல் உணவுத் திருவிழாவை நடத்தியது. நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெற்ற இந்த ‘மெர்ரி இன் மெக்ஸிகோ’ திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம்.

மெக்ஸிகன் உணவு
மெக்ஸிகன் உணவு

பார் ஏரியாவில் நைட் பார்ட்டிக்காக கலர்ஃபுல் டிஜே ரெடியாகிக்கொண்டிருந்தது. லாஞ்சில் விதவிதமான மெக்ஸிகன் உணவு வகைகள். இரவு எட்டு மணிக்கு ‘கேக் மிக்ஸிங்’. கேக் தயாரிப்பின் முதற்கட்டம் இது. ஒரு மாதத்துக்கு முன்பாகவே, கேக்குக்குத் தேவையான பொருள்கள் ஒயினில் ஊறவைக்கப்படும். வந்திருந்த வெளிமாநிலத்தினர், வெளிநாட்டினர் என அனைவரு மாகக் களமிறங்கி, பெரிய பெரிய கிஸ்மிஸ், முந்திரி, பாதாம் பாக்ஸ்களில் விலையுயர்ந்த ஒயின்களை ஊற்றி, கலகலவென பேசிச் சிரித்தபடி கலவையைக் கிளறினார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டின்னரில் புரிட்டோஸ், கசடியா,அல்போன்டிகாஸ், டக்கோஸ், என்சிலாட்ஸ், மெக்ஸ் கேசரோல் என எக்கச்சக்க மெக்ஸிகன் ரெசிப்பிகள். அசைவப் பிரியர்களும், சைவ அன்பர்களும் தேடித் தேர்வுசெய்து ருசிக்கத் தொடங்கினர்.

புரிட்டோஸ், அல்போண்டிகா சூப்
புரிட்டோஸ், அல்போண்டிகா சூப்

“நம்ம ஊர் சமையல் மூலமா வெளிநாடுகளில் நமது கலாசாரத்தை உணர்த்துற மாதிரி, மெக்ஸிகன் நாட்டோட கலாசாரத்தை நம் நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் ஏற்பாடுதான் இது” என்றார் பார் நிர்வாகி ஸ்ரீ. வந்திருந்த விருந்தினர்களோடு ஸ்வீட் செல்ஃபிகளும் ஸ்பைஸி அரட்டைகளுமாகச் சுழன்றபடியே இருந்த ஒருங்கிணைப்பாளர் ராதிகாவிடம் பேசினோம். “வழக்கமான கேக் மிக்ஸிங்கில், இந்த மெக்ஸிகன் உணவுத் திருவிழா இன்னும் சுவாரஸ்யம் சேர்க்கும். உணவு, சமையற்கலைஞர்கள், விருந்தினர்கள், நண்பர்கள் எல்லோரையும் ஒருகுடையின் கீழ் கொண்டுவர முடிஞ்சதுக்குக் காரணம், இந்த ஈவன்ட் ஐடியாதான்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனுபவம் மிக்க மூத்த செஃப் திருப்பதியிடம் புரிட்டோஸ் டிஷ் செய்முறை பற்றி கேட்டோம். “நம் அண்ணாச்சி கடையில கிடைக்கிற காய்கறிகளை வெச்சே புரிட்டோஸ் செய்யலாம். ஹெவி க்ரீம் அல்லது அமுல் க்ரீமில் உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்க்க, புளிப்பு க்ரீம் கிடைக்கும். கடைகள்ல டர்டிலா ரொட்டி வாங்கி, சோள மாவு சேர்த்து மொத்தமாகக் கலக்கணும். உருண்டை பிடிச்சு சப்பாத்தி வட்டம் செய்யலாம். வெண்ணெய் தடவி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, அவகாடோ பழம் எல்லாம் சேர்த்துக்கணும். அவகாடோவுக்குப் பதிலா வாழைக்காயும் சேர்க்கலாம். இப்போ, இன்னொரு லேயர் வெண்ணெய் தடவி ஸ்டஃப் செய்து மூடிடலாம். ரோல் செய்து காதுகளை மடிச்சு ஸ்டஃபிங்கை மூடணும். ஸ்டஃப் செய்த முனையை ஈரம்தொட்டு மூடி, வேகவெச்ச சாதத்தை லேயராக கவர் செய்துவிட்டால் ஸ்டஃபிங் வெளியே வராது. மெக்ஸிகன் அரிசிக்குப் பதிலா பாஸ்மதி, பொன்னி அரிசிகூடச் சேர்க்கலாம். ஸ்டஃபிங்கில் மொச்சைப்பயறு மாதிரி பயறு வகைகளுக்கும் இடம்தரலாம். ருசி இன்னும் கொஞ்சம் தூக்கலா இருக்கும். வாணலியில் வெண்ணெய் சூடானதும் பொன்னிறமாகப் பொரியவிட்டு எடுத்தா புரிட்டோஸ் ரெடி. கட் செய்து வெண்ணெய், கெட்சப், சாஸ்களில் தொட்டுச் சாப்பிடலாம்” என்ற திருப்பதி...

திருப்பதி, ஸ்ரீ
திருப்பதி, ஸ்ரீ

‘`கசடியாவும் இதே செய்முறைதான். ரோல் பண்ணிய கசடியாவை அரை வட்ட லேயரா வெச்சு, கொஞ்சம் குட மிளகாய் வதக்கிப் போட்டு, பயறுகளை அதிகம் சேர்த்து வெச்சா அது கசடியா. இந்த ரெண்டு டிஷ்களை நான்வெஜ்லயும் பண்ணலாம். நல்லா வேகவைத்த சிக்கனை ஸ்டஃப் பண்ணி வைக்கலாம்” என்றார்.

‘`அல்போண்டிகா சூப் ரெசிப்பியும் ஈஸிதான்...’’ என்று ஆரம்பித்த திருப்பதி, ‘`இந்த சூப் தயார் பண்ண நாலு ஸ்டெப்ஸ்தான். வெந்த சிக்கன், முட்டைக் கரு, சோள மாவு, மைதா, செலரித்தண்டு எல்லாம் சேர்த்துக் கறி உருண்டை பிடிச்சுக்கணும். கடாயில எண்ணெய்விட்டு சூடானதும் மல்லித்தழை, உப்பு, மிளகு சேர்த்து வதக்கணும். அதுல, தயார் பண்ணி வெச்ச கறி உருண்டைகளை இட்டு லேசா வறுத்து எடுத்து வெச்சுக்கணும். ஆலிவ் ஆயிலை வாணலியில் ஊற்றிச் சூடாக்கி, தக்காளி, வெங்காயம், பூண்டு, உப்பு, மிளகு எல்லாம் சேர்த்து வதக்கணும். இன்னொரு கடாயில எண்ணெய் ஊற்றி கேரட், உருளை, தக்காளி மிக்ஸ் பண்ணி, கொஞ்சம் தேவையான அளவுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடணும். இப்போ ரெண்டையும் கலந்து அரைத்து எடுத்து வெச்சுக்கணும். இந்த மிக்ஸர்ல கறி உருண்டையைச் சேர்த்துச் சுடவெச்சா, அல்போண்டிகா சூப் மணக்கும்’’ என்ற திருப்பதி,

மெக்ஸிகன் உணவு
மெக்ஸிகன் உணவு

‘`மெக்ஸிகன் உணவுகளில் தக்காளியே பிரதானம். எனவே, அதன் சுவையை நம்மூர் காய்கறிகளிலேயே கொண்டு வந்துவிடலாம். மெக்ஸிகன் ரெசிப்பிகள் செய்ய உங்க கிச்சன் ரெடியா?’’ என்கிறார்.