நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து கரூரில் ‘கனவு... முதலீடு... முன்னேற்றம்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்டின் தமிழ்நாடு மண்டலத் தலைவர் ஜீவன் கோஷி தரியன், ‘‘ரியல் எஸ்டேட்டும் தங்கமும் கடந்த காலத்தில் ஓரளவு வருமானம் தந்தாலும் இனியும் அப்படித் தரும் என எதிர்பார்க்க முடியாது. பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்துக்கு, மியூச்சுவல் ஃபண்டை தாராளமாகப் பரிசீலிக்கலாம்’’ என்றார்.

அடுத்து பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், “பெரும்பாலான சிறுமுதலீட்டாளர்கள் செய்யும் பெரிய தவறு, சந்தை இறங்கும்போது முதலீட்டிலிருந்து வெளி யேறுவது. சந்தை இறக்கமானது கூடுதல் முதலீட் டிற்கான சரியான வாய்ப்பு என்பதைப் புரிந்து கொண்டால், அந்தத் தவற்றைச் செய்யமாட் டார்கள். சந்தை இறக்கத்தில்தான் ஃபண்டுகளின் என்.ஏ.வி குறைவாக இருக்கும். அப்போதுதான் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் முதலீட்டாளர் களின் பல்வேறு சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளித்தார்கள். கரூர் மக்கள், தொழிலில் ஆர்வம் காட்டுவதைப் போலவே, முதலீட்டிலும் ஆர்வம் காட்டினார்கள்.