நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சார்பில் சென்னை அடையாறு மற்றும் குரோம்பேட்டையில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புஉணர்வு கூட்டங்கள் நடந்தன. ‘முதலீட்டு மந்திரங்கள்’ என்ற தலைப்பில் நடந்த இந்த இரு கூட்டங்களிலும் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் பேசினார்கள்.

இந்தக் கூட்டத்தில் முதலாவதாகப் பேசிய சுவாமிநாதன் கருணாநிதி நிதித் திட்டமிடல், காப்பீடு பற்றி விவரித்தார். ‘‘உடலைப் பாதுகாக்க வைத்திருக்க நாம் பயிற்சி செய்வதைப்போல் பணத்தைப் பாதுகாக்க, அதனைப் பெருக்க நிதித் திட்டமிடல் செய்வது மிக அவசியம். சம்பளம் போக, இரண்டாவது வருமானத்துக்குத் திட்டமிடுவது மிக முக்கியம். இந்த இரண்டாவது வருமானத்தை முதலீடு மூலம் சுலபமாகப் பெறமுடியும்.

பலரும் முதலீட்டை எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இளம்வயதில் முதலீட்டை ஆரம்பித்தால், தொகுப்பு நிதி அதிகமாக இருக்கும். இளம்வயதைத் தவறவிட்ட வர்கள் அதனைப் பற்றிக் கவலைப்படத் தேவை யில்லை. எப்போது முடியுமோ, அப்போது முதலீட்டை ஆரம்பித்து, அடுத்துவரும் ஆண்டு களில் முதலீட்டுத் தொகையை அதிகரித்தால், சுலபமாக இலக்கை அடைந்துவிட முடியும்” என்றார் சுவாமிநாதன்.

பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன் பேசினார். “குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம், சுற்றுலா போன்றவற்றை நனவாக்க நிதித் திட்டமிடல் உதவும். பணவீக்க விகிதம், வருமான வரி, அதிகரிக்கும் ஆயுள் எதிர்பார்ப்பு, மாறிவரும் குடும்ப அமைப்பு, அதிகரிக்கும் புதிய தேவைகள் போன்றவற்றைச் சமாளிக்கச் சரியான நிதித் திட்டமிடல் உதவும். நம்மில் பலரும் ஓய்வுக் காலத்துக்கு முதலீடு செய்யத் தவறிவிடுகிறோம். பிறகு, கடைசி காலத்தைக் கழிக்க பிள்ளைகள் உறவினர்களை நம்பி இருக்கவேண்டியிருக்கிறது. இதைத் தவிர்க்க ஓய்வுக்காலத்துக்கென தனியே முதலீடு செய்வது மிக முக்கியம். இளம்வயதிலேயே இந்த முதலீட்டை ஆரம்பித்தால், மாதம் ஒரு சிறு தொகையை முதலீடு செய்தால் போதும்’’ என்று அவர் சொன்னவுடன், இளைஞர்கள் அந்தத் தகவலை மறக்காமல் குறித்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் நிறைவில் முதலீட்டாளர் களின் கேள்விகளுக்கு வ.நாகப்பனும் சுவாமிநாதனும் பதில் சொன்னார்கள். இந்தக் கூட்டங்களில் பெண்கள் அதிக அளவில் திரண்டு வந்திருந்தது குறிப்பிடத்தகுந்த விஷயம். பங்குச் சந்தை, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மீது இருந்த பயம் நீங்க இந்தக் கூட்டம் உதவியது.