பிரீமியம் ஸ்டோரி

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சார்பில், சென்னை புதிய வண்ணாரப்பேட்டை மற்றும் அம்பத்தூரில் ‘மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வுக் கூட்டம்’ நடந்தது. ‘முதலீட்டு மந்திரங்கள்’ என்ற தலைப்பில் நடந்த இந்த இரு கூட்டங்களிலும் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி பேசினார்கள்.

நல்ல முதலீட்டுக்கான நான்கு தகுதிகள்!

சென்னை நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலரும் குடும்பம் சகிதமாக வந்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய சுவாமிநாதன் கருணாநிதி, “கடந்த 30 வருடங்களில் இந்தியப் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தைத் தாண்டி சுமார் 15-16% வருமானம் கொடுத்திருக்கிறது. இதைவிட அதிக வருமானத்தை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்திருக்கின்றன” என்றவர், நல்ல முதலீட்டுக்கான நான்கு தகுதிகள் பற்றி விளக்கினார். மூலதனத்துக்குப் பாதுகாப்பு, எளிதில் பணமாக்குதல், நல்ல வருமானம், வருமானத்துக்கு வரி குறைவாக இருப்பது ஆகியவைதான் அந்த நான்கு தகுதிகள்.

நல்ல முதலீட்டுக்கான நான்கு தகுதிகள்!

வ.நாகப்பன் பேசும்போது, எது உண்மையான வருமானம் என்பதை விளக்கிப் பேசினார். பண வீக்கம், வருமான வரி எப்படி முதலீட்டு மீதான வருமானத்தைப் பாதிக்கிறது என்பதை விளக்கிச் சொன்னார். மேலும், ஓய்வுக்காலத்துக்கு எவ்வளவு தொகை வேண்டும். புதிய தேவைகள், வருமான வரி, பணவீக்கம் இவற்றைச் சேர்த்து எப்படி ஓய்வுக்கால தொகுப்பு நிதியைக் கணக்கிடுவது என்பதை விளக்கிச் சொன்னார் வ.நாகப்பன்.

இறுதியாக, முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த பல்வேறு சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நல்ல முதலீட்டுக்கான நான்கு தகுதிகள்!

“மீண்டும் பொருளாதார நெருக்கடி வரும் போலிருக்கிறதே... இதனால், மியூச்சுவல் ஃபண்ட் வருமானம் பாதிக்கப்படுமா” என்று ஒரு முதலீட்டாளர் கேட்டார். இதற்குப் பதில் அளித்த சுவாமிநாதன், “நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் காலத்தில் இப்படிப் பொருளாதார நெருக்கடி வந்தால் நல்லதுதான். அதிக யூனிட்கள் கிடைக்கும். அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்றால் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தாமல் தொடர்ந்து மேற்கொண்டு வர வேண்டும்” என்றார்.

நல்ல முதலீட்டுக்கான நான்கு தகுதிகள்!

ஃபண்ட் முதலீட்டை ஆய்வு செய்வது குறித்து முதலீட்டாளர் ஒருவர் கேட்டார். அதற்குப் பதில் அளித்த வ.நாகப்பன், “மூன்று மாதம், ஆறு மாதம், 12 மாதம் என இடையிடையே முதலீட்டின் வருமானத்தைக் கவனித்து வரவேண்டும். ஆனால், வருடம் ஒரு முறை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு