நூற்றாண்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் `நாணயம் விகடன்’ வார இதழ், 2017-ம் ஆண்டு முதல் தமிழகத்தின் தலைசிறந்த தொழிலதிபர்களையும், தொழில் நிறுவனங்களையும் அடையாளம்கண்டு, ஒன்பது பிரிவுகளில் ‘நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகளை’ வழங்கிவருகிறது. மூன்றாவது ஆண்டாக, இந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் நடந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், `ரியல் எஸ்டேட் துறையில் இன்றைய நிலை’ என்ற தலைப்பில் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில், சார்ட்டர்டு ஃபைனான்ஷியல் அனலிஸ்ட் மற்றும் முன்னணி ரியல் எஸ்டேட் கட்டுரையாளரான மீரா சிவா, எஸ்.பி.ஆர் குழும நிறுவனத்தின் இயக்குநர் நவீன் ரங்கா, ரெரா சட்டம் குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் வழக்கறிஞர் விஜயகுமார், சென்னை ரியல் எஸ்டேட் முகவர்கள் அசோசியேஷன் தலைவர் அமித் தாமோதர் ஆகியோர் கலந்துகொண்டனர். ரியல் எஸ்டேட் தொடர்பான பல அம்சங்கள் இந்தக் கலந்துரையாடலில் அலசி ஆராயப்பட்டது.

அடுத்ததாக, விகடன் குழுமத்தின் தலைவர் பா.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார். “தொழில்துறை வளர்ச்சியில் தமிழகத்துக்கு தனியிடம் இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த இடத்தைத் தவறவிடாமல் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதும், தொழில் துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகத் திகழச் செய்வதுமாக பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.

2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நாணயம் விகடன் அப்போது தமிழின் புதிய முயற்சி. தனிநபர் நிதி மேலாண்மையை மேம்படுத்த, வழிநடத்த உறுதுணையாக நிற்கிறது. நிதி மேலாண்மை என்பதைத் தாண்டி தங்கள் தொழிலில் கவனத்தோடும் சமூக சிந்தனையோடும் இயங்கி, பல்வேறு சாதனைகளைப் படைத்த ஒன்பது தொழில் நட்சத்திரங்களை இன்று கௌரவிப்பதில் அளவில்லாத ஆனந்தம் கொள்கிறது ஆனந்த விகடன்!” என்றார்.

நிகழ்ச்சியில் அடுத்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் வாழ்த்துச் செய்தி வீடியோ ஒளிபரப்பானது. அந்தச் செய்தியில் “நாணயம் விகடன், தமிழகத்தின் தலைசிறந்த தொழில்முனை வோர்களையும், தொழில் நிறுவனங்களையும் தேர்ந்தெடுத்து மூன்றாவது ஆண்டாக பிசினஸ் ஸ்டார் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த இதழ் இன்னும் சிறப்பாக வளர மனமார்ந்த வாழ்த்துகள்’’ என்று கூறினார்.

விழாவுக்குத் தலைமையேற்ற கேம்ஸ் (CAMS) நிறுவனர் வி.சங்கர் சிறப்புரை ஆற்றினார். அவர் “விகடன் குழுமம், பல ஆண்டுகளாக தொழில்முனை வோர்களை அங்கீகரித்து, உத்வேகமளிப்பது பாராட்டுக்குரியது. நம் அரசு, `ஐந்து ட்ரில்லியன் டாலர்’ பொருளாதாரம் குறித்து சிந்தித்து வருகிறது. அந்த இலக்கை அடைவதற்கு கோடிக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு தரவேண்டும். அது தொழில்முனைவோர்களால்தான் முடியும். எனவே, அவர்களுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்பட வேண்டும்” என்றார்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில், ‘ஸ்டார்ட்அப் சாம்பியன் விருதை’ கிஸ்ஃப்ளோ மற்றும் ஆரஞ்ச்ஸ்கேப் சி.இ.ஓ & நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் பெற்றார். அந்த விருதை அஸ்பைர் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் தலைவர் அண்ட் சி.இ.ஓ கெளரிசங்கர் சுப்ரமணியன் வழங்கினார். கடலூரைச் சேர்ந்த சுரேஷ் சம்பந்தம், 1990-ம் ஆண்டு ப்ளஸ் டூ முடித்துவிட்டு, அதீத ஆர்வத்தில் அவரே கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டார். பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து அந்த அனுபவத்தைவைத்து ‘ஆரஞ்ச்ஸ்கேப்’ என்ற நிறுவனத்தை சென்னையில் தொடங்கினார். 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்;

160 நாடுகளில் 10,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ரூ.700 கோடி மதிப்புள்ள நிறுவனமாக ஆரஞ்ச் ஸ்கேப்பை உயர்த்தி இருக்கிறார் சுரேஷ் சம்பந்தம்.

`ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?’ கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் சம்பந்தம், ‘‘தொழில்முனைவோரின் வெற்றி என்பது மாரத்தான் வெற்றி போன்றது. அது தனி மனிதரின் வெற்றியல்ல, கால்பந்தாட்ட அணியின் வெற்றியைப்போல அது ஒரு குழுவின் வெற்றி. தொழிலில் இறங்கும் முன்னர் தங்களுக்கான வாடிக்கையாளர்கள் யார், சந்தை எப்படி உள்ளது என்று அறிந்துகொள்வது மிக முக்கியம். இதற்கு சில ஆயிரங்களில் இருந்து அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவாகும். சந்தையை நன்கு அறிந்த பின்னர், தொழிலில் இறங்கினால் வெற்றி பெறுவது எளிது’’ என்றார்.

பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்டுக்கு ‘பிசினஸ் மென்ட்டார் (இன்ஸ்டிடியூஷன்) அவார்டு’ வழங்கப்பட்டது. விருதை டி.வி.எஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.தினேஷ் வழங்கினார். பள்ளிப் படிப்பைத் தொடர முடியாதவர்கள் சுயமாக ஒரு தொழிலைத் தொடங்கி நடத்தத் தேவையான உதவிகளை செய்ய 1992-ம் ஆண்டு `பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்’டைத் தொடங்கினார். இன்று இந்த நிறுவனத்தில் 4,800 மென்ட்டார்கள் இருக்கிறார்கள். இந்த நிறுவனம் 6,500-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களை உருவாக்கியிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் 2,50,000 வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன.

இந்த விருதைப் பெற்ற லட்சுமி வெங்கடேசன், “20 ஆண்டுகளுக்கு முன்னர் வங்கிக் கடன் வேண்டும் என்று கேட்டு தஞ்சாவூர் பொம்மைகள் செய்யத் தெரிந்த ஒரு பெண் எங்களை அணுகினார். அவருக்கு வங்கிக் கடன் ஆலோசனைகளை வழங்கினோம்; அவருக்கு ஒரு மென்ட்டாரையும் நியமித்தோம். முதலில் `மென்ட்டார் வேண்டாம்’ என்று மறுத்தார். அவருக்குப் புரியவைத்தோம். அந்த மென்ட்டார், அவருக்கு டிரைபல் மாஸ்க் செய்வதற்கான ஆலோசனையை வழங்கினார்; அதற்கு வடகிழக்கு மாநிலங்களில் விற்பனை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தார். இப்போது அந்தப் பெண், பிரான்ஸில் நடக்கும் கண்காட்சியில் கலந்துகொள்ளும் அளவுக்கு தொழிலில் முன்னேறியிருக்கிறார். `மென்ட்டாரின் வழிகாட்டுதலால்தான் உயர்வு கிடைத்தது’ என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார். எந்தத் தொழிலாக இருந்தாலும் தொழில் முனைவோருக்கு மென்ட்டாரின் ஆலோசனை அவசியம்” என்றார்.

சமூக அக்கறையுடன்கூடிய தொழில் செய்யும் நிறுவனங்கள் வர்த்தகரீதியில் லாபம் ஈட்டும் வரை பலவகைகளிலும் பாதுகாக்கப்பட வேண்டியவையாக உள்ளன. அந்தப் பணியைச் செய்துவரும் வில்குரோ-வின் ஃபவுண்டர் மற்றும் சி.இ.ஓ பால் பேசிலுக்கு ‘சோஷியல் கான்சியஸ்னெஸ் விருது’ அளிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக, அந்த நிறுவனத்தின் ஸ்ட்ராட்டஜி அண்ட் குளோபல் எக்ஸ்பேன்ஷன் மேலாளர் ராகினி பிள்ளை விருதைப் பெற்றுக்கொண்டார். மேனகா கார்ட்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.சங்கரலிங்கம் விருதை வழங்கினார்.

`வெற்றியும் தோல்வியும் பிசினஸில் சகஜம்; தோல்விக்கு பயந்தால் மீண்டும் வெற்றியே காண முடியாது!’ என்பதை எடுத்துச்சொல்லும் `பீனிக்ஸ் ஆந்த்ரபிரனார் விருது’ குரூம் இந்தியா சலூன் & ஸ்பா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் சி.கே.குமரவேலுக்கும், இணை நிறுவனர் வீணா குமரவேலுக்கும் அளிக்கப்பட்டது. விருதை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.முரளி மற்றும் ஜெம் ஹாஸ்பிடல்ஸ் சி.இ.ஓ டாக்டர் எஸ்.அசோகன் இணைந்து வழங்கினார்கள்.

விருதைப் பெற்றுக்கொண்ட குமரவேல், “விகடன் குழுமத்தின் விருதை வாங்க வேண்டும் என்ற ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. `தோல்வியிலிருந்து மீள வேண்டும்’ என்று நினைப்பவர்கள் முதலில் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பின்னர் தோல்வியால் கிடைத்த மனவருத்தத்தை நீக்கிவிட்டு, `நான் தோற்கவில்லை, என் முயற்சிகள்தான் தோற்றன’ என்று நினைக்க வேண்டும். அடுத்து, உங்களை நீங்களே நம்ப வேண்டும். இறுதியாக, `எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என்ற சிந்தனையுடன் தொடர்ந்து உழைக்க வேண்டும்” என்றார்.

இன்றைய இளைஞர்களும் விரும்பும் வகையில் காலத்துக்கேற்ற மாற்றங்களோடு வேட்டியை விற்பனைக்குக் கொண்டுவந்து புதுமை படைத்திருக்கும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் நிறுவனருமான கே.ஆர்.நாகராஜனுக்கு ‘பிசினஸ் இன்னோவேஷன் அவார்டு’ அளிக்கப்பட்டது. இந்த விருதை சி.ஐ.ஐ தமிழ்நாடு அமைப்பின் தலைவரும், டாஃபே நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.எஃப்.ஓவான எஸ்.சந்திரமோகனும் வழங்கினர்.

விருதைப் பெற்றுக்கொண்ட கே.ஆர்.நாகராஜன், “ஆனந்த விகடன் குழுமம் பல பத்திரிகைகளை நடத்துவதைப் பார்த்துத்தான் நாங்களும் குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு, பெரியவர்களுக்கு என ஒவ்வொருவருக்குமான வேட்டி டிசைன்களை உருவாக்கியிருக்கிறோம். இந்த அரங்கில் நானும் மேனகா கார்ட்ஸ் நிர்வாக இயக்குநரும் மட்டும்தான் வேட்டி அணிந்து வந்திருக்கிறோம். எனவே, வேட்டிக்கான வேலை இன்னும் இருக்கிறது என்றே நினைக்கிறேன்” என்று நகைச்சுவையாகக் கூறினார்.

உலகில் வேறு எங்குமே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பனீர் தொழிற்சாலையை ஈரோட்டில் நடத்திவருகிறார் ‘மில்க்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் சதிஷ்குமார். வெறும் பனீருடன் நின்றுவிடாமல், தயிர், பட்டர் எனப் பல்வேறு பால் பொருள்களைத் தயாரித்து விற்றுவருகிறார். 35,000-க்கும் மேற்பட்ட கறவையாளர்களிடமிருந்து பாலைப் பெற்று, 110-க்கும் அதிகமான பால் பொருள்களைத் தயாரித்து விற்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் ரூ.14 கோடியாக இருந்த இதன் வர்த்தகம் இன்று ரூ.500 கோடியைத் தாண்டி வளர்த்திருக்கிறது. அவருக்கு ‘ரைஸிங் ஸ்டார் ஆந்த்ரப்ரனார்’ விருது வழங்கப்பட்டது. விருதை டான்ஃபாஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், எம்.எம்.ஏ சென்னை அமைப்பின் சீனியர் வைஸ்பிரசிடென்ட்டுமான பி.ரவிச்சந்திரன் மற்றும் சாந்தி கியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் எல்.ராம்குமார் இணைந்து வழங்கினர்.

விருதைப் பெற்றுக்கொண்ட சதிஷ்குமார், “குழந்தைகள் பிறந்ததுமே அவர்கள் டாக்டராக வேண்டும், வக்கீலாக வேண்டும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி வளர்க்கிறார்கள். அவர்களுக்கு வேறெந்தப் பொறுப்பையும் கொடுப்பதில்லை. அப்படி எந்தப் பொறுப்பும் தரவில்லையென்றால், அவர்களுக்கு மன தைரியமே இருக்காது. என்னைப் பொறுத்தவரை, `எதையும் என்னால் செய்ய முடியும்’ என்று நம்பினேன். அப்படித் தொழில் செய்ததால்தான் என்னால் வெற்றி பெற முடிந்திருக்கிறது” என்றார்.

எந்தத் தொழிலானாலும் அதன் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டால்தான் வெற்றி பெற முடியும். அவற்றைச் சொல்லிக் கொடுத்து பலரையும் வெற்றி பெறச் செய்திருப்பவர் இன்டெலக்ட் டிசைன் எரினா நிறுவனத்தின் சேர்மனும், மேனேஜிங் டைரக்டருமான அருண் ஜெயின். தன்னைப்போல் பலரையும் முன்னேற்ற வேண்டும் என்கிற லட்சியத்துடன் செயல்படும் அவருக்கு `பிசினஸ் மென்ட்டார் அவார்டு’ வழங்கப்பட்டது. விருதை லைஃப்செல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் எஸ்.அபயகுமார் வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்ட அருண் ஜெயின், “வாடிக்கையாளர்களிடம் சொன்னபடி, சொன்ன நேரத்தில், சொன்ன தரத்தில் டெலிவரி செய்தோம். அதுதான் எங்கள் வெற்றிக்கான சூத்திரம். ஒரு பொருளைத் தயாரிக்கும்போது பலரும் 98 சதவிகிதத்தை நல்ல முறையில் செய்துவிடுவார்கள். 2% குறித்து கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால், நாங்கள் 100% நல்ல தரத்தோடு உருவாக்க வேண்டும் என்று பாடுபட்டோம்; ஜெயித்தோம்’’ என்றார்.

திருசெங்கோட்டுக்கும் ஈரோட்டுக்கும் இடையே இருக்கும் கொக்கராயன்பேட்டை புதூரில் பிறந்தவர் பொன்னுசுவாமி. கோவையில் கெமிக்கல் படிப்பை முடித்து, சென்னையில் மாதம் 150 ரூபாய் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்தார். பிறகு சொந்தமாகத் தொழில் தொடங்கினார். திருச்சியிலிருந்து கெமிக்கல்களை வாங்கி, தமிழகம் முழுக்க விற்பனை செய்யத் தொடங்கியவர், ஈரோட்டில் தன் முதல் கிளையைத் தொடங்கினார். பத்தே ஆண்டுகளில் ஒரு கிளை, பத்து கிளைகளாக விரிந்தது.

வெறும் 36,000 ரூபாயில் தொடங்கிய ‘பொன் ப்யூர்’ நிறுவனம், இப்போது ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய்க்கு டேர்ன்ஓவர் செய்துவருகிறது. `பொன் ப்யூர்’ பொன்னுசுவாமிக்கு `செல்ஃப்மேடு ஆந்த்ரப்ரனார் விருது’ வழங்கப்பட்டது. விருதை கேம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் வி.சங்கரும் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசனும் இணைந்து வழங்கினர்.

விருதைப் பெற்றுக்கொண்ட பொன்னுசுவாமி, “நான் 1,000 ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கினேன். தற்போது 1 லட்சம் ரூபாயில் ஒருவரால் தொழில் தொடங்க முடியும். என் காலத்தில் இல்லாத செல்போன், இன்டெர்நெட் வசதிகள் தற்போது இருக்கின்றன. இவற்றின் மூலம் இருந்த இடத்திலிருந்தபடியே உலகம் முழுக்க வாடிக்கையாளர்களைப் பிடிக்க முடியும்.

நம் தயாரிப்பை முறையாக டெலிவரி செய்ய வேண்டும். தரத்தை அதிகரித்துத் தரவேண்டும். இரண்டும் இருந்தாலே போதும், வெற்றி பெற்றுவிடலாம். எந்தச் செயலையும் நேர்மறை எண்ணத்துடன் அணுக வேண்டும். அப்படி அணு கினால் அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும்’’ என்றார்.

1900-ம் ஆண்டு, திவான் பகதூர் ஏ.எம்.முருகப்ப செட்டியாரால் தொடங்கப் பட்ட நிறுவனம், இன்றைக்குப் பல நிறுவனங்களாக வளர்ந்து `முருகப்பா குழும’மாக உயர்ந்திருக்கிறது. 50,000 தொழிலாளர்கள், 28 பிசினஸ் நிறுவனங்கள் என 37,000 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கும் முருகப்பா குழுமத்தின் தலைவர் எம்.எம்.முருகப்பனுக்கு `லைஃப் டைம் அச்சீவ்மென்ட் அவார்டு’ வழங்கப்பட்டது.

வெளிநாடு சென்றிருக்கும் அவரால் இந்த விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அவர் சார்பாக, முருகப்பா குழுமத்தின் ஹெச்.ஆர் அண்ட் லீட் டைரக்டர் ரமேஷ் கே.பி.மேனன் விருதைப் பெற்றுக்கொண்டார். விருதை கேம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் வி.சங்கரும் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசனும் இணைந்து வழங்கினர்.

இந்த விருதைப் பெற்றுக்கொண்ட ரமேஷ் கே.பி.மேனன், ‘‘120 ஆண்டுகள் பெருமை வாய்ந்த நிறுவனத்தின் சார்பாக விருது வாங்குவது பெருமையாக இருக்கிறது’’என்றார்.

சுருக்கமாக, தொழில்முனைவோர்களைக் கொண்டாடும்விதமாக இருந்தது `நாணயம் விகடனின் பிசினஸ் ஸ்டார் அவார்டு - 2019’ நிகழ்வு!