Published:Updated:

சரித்திரம் படைத்த தொழில்முனைவோர்... கௌரவித்த நாணயம் விகடன்!

பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்

பொருளாதாரம் சீராக இருக்க, மூலதனச் செலவினங்களை அதிகரிப்பது உள்ளிட்ட அவசியமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

சரித்திரம் படைத்த தொழில்முனைவோர்... கௌரவித்த நாணயம் விகடன்!

பொருளாதாரம் சீராக இருக்க, மூலதனச் செலவினங்களை அதிகரிப்பது உள்ளிட்ட அவசியமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

Published:Updated:
பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்

உழைப்பாலும் திறமையாலும் தொழில் துறையில் சாதித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் தொழில் நிறுவனங் களுக்கும் ‘பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்’ விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி கௌரவிக் கிறது நாணயம் விகடன். ஐந்தாம் ஆண்டாக, கடந்த 18-ம் தேதி சென்னையில் இந்த விருது நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தொடக்க உரை நிகழ்த்திய அனந்த நாகேஸ்வரனின் புள்ளிவிவரப் பேச்சு, கூட்டத்தைக் கட்டிப் போட்டது. தொடர்ந்து, அனந்த நாகேஸ்வரனுடன் விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் கேள்விக்கணை நிகழ்ச்சியை நடத்தினார்.

அனந்த நாகேஸ்வரனுடன் பா.சீனிவாசன்
அனந்த நாகேஸ்வரனுடன் பா.சீனிவாசன்

கூட்டத்திலிருந்தும் கேள்விகள் பாய்ந்தன. அனைத்தையும் எதிர்கொண்ட அனந்த நாகேஸ்வரன்... “இக்கட்டான சூழலிலும் இந்தியப் பொருளாதாரம் கட்டுக்குள்தான் இருக்கிறது. பொருளாதாரம் சீராக இருக்க, மூலதனச் செலவினங்களை அதிகரிப்பது உள்ளிட்ட அவசியமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. கொரோனாவின் அடுத்த அலையால், பெரிய சிக்கல்கள் எதுவும் வரவில்லையெனில், இந்தியப் பொருளாதாரம் அடுத்து வரும் ஆண்டுகளில் சீரான வளர்ச்சி காணும் வாய்ப்புகள் இருக்கின்றன. அது சரியாக நடந்தால், 2030-க்குள் உலகின் ‘டாப் 3’ சக்தி வாய்ந்த பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா முன்னேறும்” என்று உறுதியுடன் கூறினார்.

இதைத் தொடர்ந்து, எட்டுப் பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அப்போலோ குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டிக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’, தன் தந்தையின் சார்பாக விருதை, டாக்டர் அனந்த நாகேஸ்வரனிடமிருந்து பெற்றுக் கொண்டார் அப்போலோ குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி.

விவசாயத் தொழில்முனைவோர்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கிவரும் ‘சமுன்னதி’ நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் சி.இ.ஓ-வான எஸ்.ஜி.அனில்குமாருக்கு ‘ஸ்டார்ட்அப் சாம்பியன்’ விருதை வழங்கினார், எல்.ஐ.சி நிறுவனத்தின் தென்மண்டல மேலாளர் பி.தர்.

தொழில்துறை வளர்ச்சிக்குப் பலவிதத்திலும் பங்காற்றிவரும் சி.ஐ.ஐ (கன்ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் இண்டஸ்ட்ரி - தமிழ்நாடு) அமைப்புக்கு, ‘பிசினஸ் மென்டார் (இன்ஸ்டிடியூஷன்)’ விருது வழங்கப்பட்டது. சி.ஐ.ஐ தலைவர் சத்யகம் ஆர்யா உள்ளிட்ட குழுவினர், கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் எம்.எம்.முருகப்பனிடமிருந்து இந்த விருதைப் பெற்றனர்.

சரித்திரம் படைத்த தொழில்முனைவோர்... கௌரவித்த நாணயம் விகடன்!

தடைகளைத் தாண்டி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் எம்.சி.ஆர் நிறுவனத்தின் எம்.சி.ராபின்-எம்.சி.ரிக்ஸன் சகோதரர்களுக்கு, ‘கவின்கேர்’ குழுமத் தலைவர் சி.கே.ரங்கநாதன், ‘ஃபீனிக்ஸ் விருது’ வழங்கிப் பாராட்டினார்.

எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரியின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.சீனிவாசனுக்கு, ‘செல்ஃப்மேட் ஆன்ட்ரப்ரனர்’ விருதை வழங்கிப் பாராட்டினார் ‘பொன் பியூர் கெமிக்கல்ஸ்’ நிறுவனத் தலைவர் பொன்னுசாமி.

திருப்பூரிலுள்ள கிளாசிக் போலோ நிறுவனத்துக்கு ‘சோஷியல் கான்சியஸ்னஸ் பிசினஸ்’ விருது வழங்கப்பட்டது. ‘பிரின்ஸ் ஜுவல்லரி’ நிறுவனத் தலைவர் பிரின்ஸ் ஜோஸ் மற்றும் ‘பூம் கார்ஸ்’ நிறுவனத் தலைவர் ஹாஜி அலி ஆகியோர் இணைந்து வழங்கிய விருதை, கிளாசிக் போலோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.ஆர்.சிவராம் பெற்றுக்கொண்டார்.

இனிப்பு உலகில் புரட்சியை ஏற்படுத்திய ‘கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளி மகாதேவனுக்கு, ‘பிசினஸ் இன்னோவேஷன்’ விருது வழங்கப்பட்டது. ‘மேட்ரிமோனி.காம்‘ நிறுவன சி.இ.ஓ-வான முருகவேல் ஜானகிராமன், ஜி.ஆர்.டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஜி.ஆர்.அனந்த பத்மநாபன் ஆகியோர் இணைந்து இந்த விருதை வழங்கினர்.

‘டி.வி.எஸ் கேப்பிடல் ஃபண்ட்ஸ்’ நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் கோபால் நிவாசனுக்கு ‘பிசினஸ் மென்டார்’ விருதை வழங்கினார், தமிழகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் பாவனா, “தமிழக முதல்வர் கூறியிருக்கும் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார உற்பத்தி இலக்கு சாத்தியமா?’’ என்று, சமயம் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பினார். அதை அநாயாசமாக எதிர்கொண்டு, “தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் பட்ஜெட்டிலேயே பார்த்திருப்பீர்கள்... 14 சதவிகித வளர்ச்சியை (Growth Rate). இதை இன்னும் சில வருடங்களுக்குத் தொடர்ந்தாலோ, இதை அதிகப்படுத்த முடிந்தாலோ நிச்சயமாக ஒரு டிரில்லியன் டாலர் எக்கனாமி என்பது சாத்தியமான ஒன்றுதான்” என்று அழுத்தமாகச் சொன்னார் அமைச்சர்.