Published:Updated:

தொழில்முனைவோரின் வெற்றி, தனிநபரின் வெற்றியல்ல!

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள்

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள்

தொழில்முனைவோரின் வெற்றி, தனிநபரின் வெற்றியல்ல!

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள்

Published:Updated:
நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள்

டித்து முடித்து, நிறுவனப் பணியில் சேர்ந்து செட்டிலாகும் சராசரி வாழ்க்கையிலிருந்து வேறுபட்டு, ஒரு தொழிலைத் தொடங்கி கடுமையான உழைப்பைச் செலுத்தி வெற்றி பெறுவது என்பது சவாலானது. இன்று பெரிய தொழிலதிபர்களாக விளங்கும் பலரும், தொடக்கத்தில் சிரமப்பட்டு முன்னேறியவர்களே! அப்படிப்பட்ட சாதனையாளர்களை ஆண்டு தோறும் தேர்ந்தெடுத்து அழைத்துப் பாராட்டி, விருது வழங்கி உற்சாகப்படுத்திவருகிறது நாணயம் விகடன். இம்மாதம் 5-ம் தேதி, மூன்றாம் ஆண்டு ‘பிசினஸ் ஸ்டார் விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்தி முடித்தது நாணயம் விகடன்.

ரியல் எஸ்டேட் துறையின் தற்போதைய நிலைகுறித்து, சார்ட்டர்டு ஃபைனான்ஷியல் அனலிஸ்ட் மீரா சிவா, எஸ்.பி.ஆர் குழும இயக்குநர் நவீன் ரங்கா, வழக்கறிஞர் விஜயகுமார், சென்னை ரியல் எஸ்டேட் முகவர்கள் அசோசியேஷன் தலைவர் அமித் தாமோதர் ஆகியோரின் கலந்துரையாடலுடன் விழா தொடங்கியது.

எல்.ராம்குமார், பி.ரவிச்சந்திரன், சதிஷ்குமார் , எஸ்.சந்திரமோகன், கே.ஆர்.நாகராஜன்
எல்.ராம்குமார், பி.ரவிச்சந்திரன், சதிஷ்குமார் , எஸ்.சந்திரமோகன், கே.ஆர்.நாகராஜன்

விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவின் தலைமை விருந்தினரான தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தல் காரணமாகப் பங்கேற்கவில்லை. தன்னுடைய வாழ்த்துச் செய்தியை வீடியோவாக அனுப்பிவைத்திருந்தார். அது அங்கே ஒளிபரப்பப்பட்டது. கேம்ஸ் (CAMS) நிறுவனர் வி.சங்கர், நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். ‘‘நம் அரசாங்கம், ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் குறித்து சிந்திக்கிறது. அந்த இலக்கை அடைய கோடிக்கணக்கானோருக்கு வேலை கொடுக்க வேண்டும். அது தொழில் முனைவோர்களால்தான் சாத்தியம்” என்று இளம் தலைமுறைக்கு நம்பிக்கையளித்தார் வி.சங்கர்.

விருது பெற்றவர்களுடன் விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்
விருது பெற்றவர்களுடன் விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆரஞ்சுஸ்கேப், கிஸ்ஃப்ளோ நிறுவனங்களின் நிறுவனரான சுரேஷ் சம்பந்தத்துக்கு ‘ஸ்டார்ட்-அப் சாம்பியன் விருது’ வழங்கப்பட்டது. இந்த விருதை ஊழியர்களோடு மேடைக்கு வந்து பெற்ற சுரேஷ் சம்பந்தம், ‘‘தொழில் முனைவோர்களின் வெற்றி என்பது மாரத்தானில் பெறும் தனிநபரின் வெற்றியல்ல; கால் பந்தாட்டத்தில் பெறும் குழு வெற்றியைப் போன்றது’’ என்றார்.

ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர் களுக்கு தொழில் தொடங்க வழிகாட்டிய பாரதிய யுவசக்தி டிரெஸ்டின் தலைவர் லட்சுமி வெங்கடேசனுக்கு ‘பிசினஸ் மென்ட்டார் விருது’ வழங்கப்பட்டது. வில்குரோ நிறுவனர் பால் பேஷலுக்கான `சோஷியல் கான்ஷியஸ்னஸ் விருதை, வில்குரோவின் ஸ்ட்ராட்டெஜி - குளோபல் எக்ஸ்பேன்ஷன் மேலாளர் ராகினி பிள்ளை பெற்றுக்கொண்டார்.

தொழில்முனைவோரின் வெற்றி,
தனிநபரின் வெற்றியல்ல!

குரூம் இந்தியா சலூன் ஸ்பா பிரைவேட் லிமிடெட் நிறுவனர் சி.கே.குமரவேல், இணை நிறுவனரான வீணா குமரவேல் இருவருக்கும் ‘பீனிக்ஸ் தொழில்முனைவோர் விருது’ வழங்கப் பட்டது. ‘‘தோல்வியிலிருந்து மீளவேண்டுமானால், முதலில் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். தோல்வியால் கிடைத்த வருத்தத்தை நீக்கிவிட்டு, தொடர்ந்து உழைத்தால் மீண்டுவிடலாம்’’ என்றார் குமரவேல் உற்சாகமாக.

ராம்ராஜ் காட்டன் நிறுவன நிர்வாக இயக்குநர் கே.ஆர்.நாகராஜனுக்கு ‘பிசினஸ் இன்னோவேஷன் விருது’ வழங்கப்பட்டது. ‘‘இந்த அரங்கில் நானும் மேனகா கார்ட்ஸ் நிர்வாக இயக்குநர் சங்கரலிங்கமும் மட்டும்தான் வேட்டி கட்டி வந்திருக்கி றோம். வேட்டிக்கான தேவை இன்னும் இருக்கிறது’’ என்று கலகலப்பூட்டினார் நாகராஜன்.

மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிர்வாக இயக்குநர் சதிஷ்குமாருக்கு ‘ரைஸிங் ஸ்டார் விருது’ வழங்கப்பட்டது. ‘இன்டெலக்ட் டிசைன் எரினா’ நிறுவனத்தின் சேர்மன் அருண் ஜெயினுக்கு ‘பிசினஸ் மென்ட்டார்’ விருது வழங்கப்பட்டது.

வெறும் 36,000 ரூபாயில் தொடங்கி இன்று ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் டர்ன்ஓவர் செய்யும் `பொன் ப்யூர்’ நிறுவனர் பொன்னுசுவாமிக்கு ‘செல்ஃப்மேட் ஆந்த்ரபிரனார்’ விருது வழங்கப்பட்டது. முருகப்பா குழுமத்தின் தலைவர் எம்.எம்.முருகப்பனுக்கு ‘லைஃப் டைம் அச்சீவ்மென்ட் விருது’ வழங்கப்பட்டது. அவர் சார்பில், அந்தக் குழுமத்தின் ஹெச்.ஆர் டைரக்டர் ரமேஷ் கே.பி.மேனன் விருதைப் பெற்றுக்கொண்டார்.

விருதுபெற்ற தொழிலதிபர்களுக்கு வாழ்த்துகள்!

தொழில்முனைவோரின் வெற்றி,
தனிநபரின் வெற்றியல்ல!