Published:Updated:

`அப்துல் கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை'... வெங்கையா நாயுடு வெளியிட்ட புத்தகத்தின் சிறப்புகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்துல் கலாம் குறித்த புத்தகம் வெளியீடு
அப்துல் கலாம் குறித்த புத்தகம் வெளியீடு ( விகடன் )

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் குறித்த 'அப்துல் கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை' என்ற நூலை சென்னையில் நடைபெற்ற விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகம்மது முத்து மீரா மரைக்காயரின் மகள் நசீமா மரைக்காயரும், தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் கலாமுடன் பணிபுரிந்ததில் தொடங்கி, அவரது இறுதி காலம் வரை நண்பராகத் திகழ்ந்த டாக்டர் ஒய்.எஸ்.ராஜனும் இணைந்து கலாம் குறித்த, 'அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை' என்ற புத்தகத்தினை எழுதியிருந்தனர். அப்துல் கலாம் தனது குடும்பத்தினர் மீது கொண்டிருந்த அன்பு, அவரது மூதாதையர்களின் வாழ்வியல் நெறிமுறைகள், சிறுவயது சம்பவங்கள் ஆகியவற்றுடன், இஸ்ரோவில் அவர் பணிபுரிந்தபோது சாதித்த பணிகள், சந்தித்த சோதனைகள் குறித்தும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்துல் கலாம் புத்தக வெளியீட்டு விழாவில் வெங்கையா நாயுடு.
அப்துல் கலாம் புத்தக வெளியீட்டு விழாவில் வெங்கையா நாயுடு.
விகடன்

சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில், இந்தப் புத்தகத்தை வெளியிட்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ''ஒரு நூல் மக்களைச் சென்றடைய சிறந்த வழி, அது அவர்களின் தாய்மொழியில் இருக்க வேண்டும். அப்துல் கலாம் உண்மையில் இந்த நாட்டின் பெரு மகன். புத்தகத்தின் தலைப்பு அப்துல் கலாம் நினைவுகள் ஒருபோதும் இறக்காது என்பது சிறப்பானது. அப்துல் கலாம் ஒரு சிறந்த நிர்வாகி, கல்வியாளர் மற்றும் மக்கள் ஜனாதிபதியாக இருந்தார். அவர் தனது வாழ்க்கையில் முற்றிலும் எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.

தேசத்தைப் பற்றிய அவரது எளிமை மற்றும் விருப்பத்தைக் கண்டு நான் வியப்படைந்தேன். அவர் எப்போதும் தனது வாழ்க்கையில் ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார். ஒரு நல்ல வாழ்க்கை வாழ, ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை அதுதான்.

புத்தக வெளியீட்டு விழா.
புத்தக வெளியீட்டு விழா.
விகடன்

விவசாயம் போன்ற அனைத்து துறைகளிலும் வளர்ச்சி விகிதத்தை விரைவாகக் கண்டறிய இது ஒரு சிறந்த வழி. இளைஞர்கள் அதில் முன்னணியில் இருக்க வேண்டும். இளைஞர்கள் வேலை தேடுபவர்களைக் காட்டிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக உருவாக வேண்டும். இதற்கான கல்வி முறை மாற்றத்தை நான் வலியுறுத்தி வருகிறேன். ஒரு பள்ளி கைவினை வகுப்பு, தோட்டக்கலை வகுப்பு போன்றவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இப்போது புதிய கல்விக் கொள்கை அதையே பரிந்துரைக்கிறது. நீங்கள் குழந்தையைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் திறன்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. கலாம் மாணவர்களுடன் பழகுவதற்கான ஆர்வம் கொண்டவர். கலாம் தொழில்நுட்பத்தை நம்பினார். நமது சொந்த விஞ்ஞானிகள் இவ்வளவு சிறிய காலத்தில் தடுப்பூசி உருவாக்க முன் வந்துள்ளனர். தடுப்பூசி போடுவதில் அரசாங்கத்தையும் விஞ்ஞானிகளையும் நாம் பாராட்ட வேண்டும்'' என்றார்.

கலாம் புகைப்படம் வெளியீடு.
கலாம் புகைப்படம் வெளியீடு.
விகடன்

இந்த விழாவில் அப்துல் கலாம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், கலாமின் அண்ணன் மகளுமான நஜீமாமரைக்காயர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு