Published:Updated:

கல்வி, தொழில், சமூகம்... 14 விருதுகள்!

பின்னாக்கிள் விருதுகள்
பிரீமியம் ஸ்டோரி
பின்னாக்கிள் விருதுகள்

பின்னாக்கிள் விருதுகள்

கல்வி, தொழில், சமூகம்... 14 விருதுகள்!

பின்னாக்கிள் விருதுகள்

Published:Updated:
பின்னாக்கிள் விருதுகள்
பிரீமியம் ஸ்டோரி
பின்னாக்கிள் விருதுகள்

“அரசியலுக்குள் நுழைந்ததும், என் முதல் அரசியல் பேட்டி விகடனில்தான் வெளியானது. விகடன் காலை ஆறு மணிக்குத்தான் வரும். ஆனால், நான்கு மணிக்கே எழுந்து, என்னுடைய முதல் பேட்டியைப் படிக்கக் காத்திருந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது’’ என்று விகடனுடனான தன் நட்பை விவரிக்கும்போது, புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனின் குரலில் அத்தனை மகிழ்ச்சி!

கல்வி, தொழில், சமூகம் என்று பலதுறைகளிலும் உன்னதச் செயல் புரிந்தவர்களை அங்கீகரிக்கும் வகையிலான பின்னாக்கிள் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கையோடு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கிக் கௌரவித்தார் தமிழிசை.

கல்வி, தொழில், சமூகம்... 14 விருதுகள்!

விருதுகளைப் பெற்றுக்கொண்ட 14 நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இதோ...

சிறந்த ஆபரணங்கள் வடிவமைப்பு மற்றும் விற்பனை நிறுவனம் - சல்லானி ஜுவல்லரி - ஜெயந்திலால் சல்லானி. சிறந்த இளைய பல்கலைக்கழக வேந்தர் - ப்ரிஸ்ட் பல்கலைக்கழகம் - நாகேஸ்வரன். சிறந்த மொபைல் ரீடெய்லர் மற்றும் வாடிக்கையாளர் சேவை - பூர்விகா மொபைல்ஸ். சிறந்த இளம் தொழில்முனைவோர் - எஸ்.பி.கே குழுமம் - ஏ.எஸ் பிரபு. சிறந்த தொழில்முனைவோர் கட்டுமானத்துறை - ஏ.ஆர்.எஸ்.கே பாலி மார்பிள் ஷீட் - ஏ.எஸ்.ரியாஸ். சிறந்த தொழிலதிபர் - தகவல் தொழில்நுட்பம் - கேசவர்தனன் (K7 Computing). சிறந்த கட்டுமான நிறுவனம் - DAC டெவலப்பர்ஸ் - சதீஷ்குமார். சிறந்த டிராவல் நிறுவனம் - GT Holidays - கார்த்திக் மணிகண்டன் மற்றும் யாமினி. சிறந்த கிராமப்புறக் கல்வி மேம்பாடு மற்றும் சேவை-ஆற்றல் ஃபவுண்டேஷன் - ஆற்றல் அசோக். சிறந்த ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் - Maya Export Training - எஸ்.ஆர்.அசோக். சிறந்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி நிறுவனம் அறம் ஐ.ஏ.எஸ் அகாடமி. சிறந்த சேவை தொழில்நுட்பம் மற்றும் புதுமை - ECI Systems - செந்தில்குமார் தேவதாஸ். சிறந்த சமூகச்செயற்பாட்டாளர் - குழந்தை பிரான்சிஸ் (IVDP). சிறந்த ஃபிட்னஸ் பயிற்சியாளர்- பரமகுரு- பரமகுரு ஃபிட்னஸ் நிறுவனம்.