Published:Updated:

"மறக்க முடியாத பாராட்டு,கண்களைத் திறந்துவிட்டவர்" யாரைச் சொல்கிறார் சந்தோஷ் நாராயணன் #VikatanStudentScheme

விகடன் டீம்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் முகாம், முதல் நாள் நிகழ்ச்சித் தொகுப்பு!

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்
19 Jul 2019 8 PM
"சமூகத்தை சமநிலையாக்குவது உங்கள் விரல்களில்தான் இருக்கிறது!"
மாணவப் பத்திரிகையாளர்களுக்கு சந்தோஷ் நாராயணன் அறிவுரை

"ம்யூட் மோடில் இருந்த என்னை அன் ம்யூட் செய்து என் கண்ணைத் திறந்துவிட்டது மாரி செல்வராஜ்தான். என் ஆல்பத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் என்னை அழைத்து பாராட்டியதுதான் என் வாழ்நாளில் மறக்க முடியாத பாராட்டு. உலகம் ரொம்பவே வேகமா இயங்கிட்டு இருக்கு. ஆனா, என்னுடைய குறிக்கோள் ஒண்ணே ஒண்ணுதான்... ஜாலியா இருக்கணும். அடுத்த தலைமுறையையும் ஜாலியா இருக்க ஏற்பாடு செஞ்சுகொடுத்துட்டு பை சொல்லிட்டு கிளம்பிடனும்." - மாணவப் பத்திரிகையாளர்களிடம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பகிர்ந்த 'ஜாலி' ஃபார்முலா.

19 Jul 2019 7 PM

மாணவர்களுடன் கலந்துரையாடும் சீமான்

"கங்கைக் கரையில் மீத்தேன் இல்லையா...

வட இந்தியாவில் மலைகள் இல்லையா...

ஏன் தமிழகத்தில் மட்டும் நியுட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படுகிறது. ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏன் தமிழகத்தைக் குறிவைக்க வேண்டும்?

கூடங்குளம், ஹைட்ரோ கார்பன், தூத்துக்குடி, ஸ்டெர்லைட், மீத்தேன், நியுட்ரினோ என அத்தனை பிரச்னைகள் தமிழகத்தைச் சூழ்வதற்குக் காரணம் என்ன?

அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம், தமிழகத்திற்கு ஒரு தலைவன் இல்லை என்பதால்தான்!"

19 Jul 2019 7 PM

எந்தவித சங்கீத ஞானமும் இல்லாம திருநெல்வேலியில இருந்து சென்னைக்கு வந்தேன். ஒரு இசையமைப்பாளரா என்ன செய்யணும்னு முதல்ல தெரியல. அதனால் அசிஸ்டன்ட் சவுண்ட் இஞ்சினியரா வேல பாத்தேன். அப்போ நிறைய பேர்கிட்ட வாய்ப்பு கேட்டேன். கர்நாடகம், வெஸ்டர்ன், இந்துஸ்தானின்னு என்ன மாதிரியான சங்கீதம் தெரியும்னுதான் எல்லாரும் கேட்டாங்க. அப்போதான் லண்டன் ட்ரினிட்டி மியூசிக் காலேஜ்ல ஒரு மூனு மாசம் கோர்ஸ் பண்ணுனேன். அதப்பத்தி இங்க யாருக்கும் தெரியல. அத வச்சு நிறையபேர ஏமாத்தித்தான் இங்க மியூசிக் டைரக்டரானேன்.

"நம்பிக்கையோட முழு பலமே ஒரு விஷயத்த முழுசா நம்புறதுல்லதான் இருக்கு" அப்படின்னு ஒரு வசனம் பிச்சைக்காரன் படத்துல வரும். அது மாதிரிதான் நான் என்னைக்கோ எனக்கு நல்லா நடிக்க வரும்னு நம்பிட்டேன் போல.

"சவுண்ட் இஞ்சினியர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர்ன்னு நிறைய தேடல் இருக்குன்னு சொல்றீங்க. இந்த தேடல் எப்போவாவது தேர்தல்ல போட்டியிடுறதுல போய் முடியுமா?"

"தெரியலையேபா... ஆனா அப்படி போய் முடிஞ்சா ஏதும் தப்பா?"

19 Jul 2019 6 PM

தமிழிசை சௌந்தர்ராஜனுடன் மாணவர்கள் சந்திப்பு!

ராஜ் தொலைக்காட்சியில் நீங்களும் பேச்சாளராகலாம் என்கிற ஒரு நிகழ்ச்சியை தொடக்க காலத்தில் பாரதிய ஜனதாவில் இணைவதற்கு முன்பு தொகுத்து வழங்கினேன். நான் நன்றாகப் பேச அந்த நிகழ்ச்சி உதவியாக இருந்தது. ஆனால், பாரதிய ஜனதாவில் சேர்ந்ததால் பிறகு விலகிக் கொண்டேன்.

நான் அரசுப்பள்ளியில் படித்தேன். சர்ச் பார்க்கில் படித்தவர்கள் தமிழ் தமிழ் என்று ஏன் பேசுகிறார்கள்.
தமிழிசை சௌந்தர்ராஜன்
19 Jul 2019 4 PM
"Be Yourself" இது தான் ஊடகத்தில் நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரே தாரக மந்திரம்.
மிர்ச்சி 'ஷா & விஜய்'
மிர்ச்சி 'ஷா & விஜய்'

தற்போது, தமிழ் சினிமாவில் வாய்ஸ் மாடுலேஷனில் கொடிகட்டிப் பறக்கிறார் விஜய் சேதுபதி. வாய்ப்பு கிடைக்காமல் தவித்த காலத்தில் கார்ட்டூன், அனிமேஷன் திரைப்படங்கள் போன்றவற்றில் டப்பிங் கொடுத்த பயிற்சிதான் இன்று அவருக்குக் கைகொடுக்கிறது. அந்தப் பயிற்சியால்தான் இன்று அவரால் தன் குரலில் அத்தனை வித்தியாசங்களைக் காட்ட முடிகிறது. அதனால், நமக்குக் கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்துங்கள். பின்னாட்களில் அது நிச்சயம் பயன்படும்.

19 Jul 2019 12 PM
ஒரு பத்திரிகையாளரின் அடையாளம், அவர் கேட்கும் கேள்விகள் தான். உங்கள் அடையாளத்துக்காக உழையுங்கள்!
ஷபீர் அகமது
19 Jul 2019 12 PM
விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி முகாமில் 'ஊடகத்தின் கடமை' என்ற தலைப்பில் திரு. ஷபீர் அகமது மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

மாணவர்களுடன் கலந்துரையாடுவதும், ஊடகத்துறையில் என்னுடைய அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வது விருது விழாக்களை விட சிறப்பு. நான் விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் பயிற்சி பெற முடியாதது எனக்கு வருத்தம் தான். ஆனால், அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது, அதற்கு முதலில் வாழ்த்துகள். ஊடகத்துறை சாராத கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஊடகத்துறை அறிமுகமும் பயிற்சியும் கிடைக்கும் இடம் இது.

ஒரு பத்திரிகையாளனுக்கு ஆர்வமே முழு முதல் தகுதியாக இருக்க வேண்டும். ஆர்வத்துடன் பொறுமையும் தேடலும் முக்கியமான தகுதிகள். உங்கள் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
ஷபீர் அகமது
"நான் எழுதுகின்ற ஒவ்வொரு எழுத்தும் மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்!" என்ற உறுதியோடு எழுதுங்கள்.
ஷபீர் அகமது

இன்று ஒரு பத்திரிகையாளனுக்கு வேலை இரு மடங்காகி இருக்கிறது. ஒரு சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை சொல்வதுடன், அந்த செய்தி தொடர்பாக பரப்பட்ட Mis Information-களை களைய வேண்டியதும் பத்திரிகையாளரின் கடமையாகி இருக்கிறது. கூடுதலாக உழைப்போம்!

19 Jul 2019 9 AM

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் முதல் நாள் பயிற்சி முகாம், எஸ்.எஸ்.வாசன் அவர்களின் ஆவணப்படம் திரையிடலுடன் நிகழ்ச்சி துவங்கியது.