Published:Updated:

"லவ்ல ஜெயிக்கிறதுக்கும், லைஃப்ல ஜெயிக்கிறதுக்கும் சம்பந்தமில்லை!" தனுஷ்

விகடன் டீம்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் முகாம், இரண்டாம் நாள் நிகழ்ச்சித் தொகுப்பு!

தனுஷ்
தனுஷ்
20 Jul 2019 6 PM

நடிகர் , பொயட்டு, தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ், தற்போது நம் விகடன் மாணவர்கள் பயிலரங்கத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். சில கேள்வி பதில்கள் இதோ...

"லவ்ல ஜெயிக்கிறதுக்கும், லைஃப்ல ஜெயிக்கிறதுக்கும் சம்பந்தமில்லை!" தனுஷ்

"லவ்ல ஜெயிக்கிறதுக்கும், லைஃப்ல ஜெயிக்கிறதுக்கும் சம்பந்தமில்லை!" தனுஷ்

லவ் பெயிலியர், லைஃப்ல பாதிக்குமா ?

கண்டிப்பா லவ்ல ஜெய்க்கறதுக்கும் , லைஃப்ல ஜெய்க்கறதுக்கும் சம்பந்தமில்லை.

ரஜினியோட எந்த படங்கள ரீமேக் பண்ணனும் ஆசை?

நெற்றிக்கண், தில்லு முல்லு ரெண்டும் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். எனக்கு செட் ஆகற படம். இதுல நடிக்கணும்னு ஆசை

எந்தப் புத்தகத்தைப் படமாக பண்ண ஆசை ?

சமீபத்தில் படித்ததில் வேள்பாரி மிகவும் பிடித்தது. பாரி கதாபாத்திரமாக நடிக்க விருப்பம்.

20 Jul 2019 4 PM

நான் விகடனின் அவுட்ஸ்டேண்டிங் மாணவ பத்திரிகையாளன் : எஸ்.ரா

"லவ்ல ஜெயிக்கிறதுக்கும், லைஃப்ல ஜெயிக்கிறதுக்கும் சம்பந்தமில்லை!" தனுஷ்

வாசிப்பது குறித்து தனது பார்வையை வழக்கம்போல் சுவாரஸ்யமாய் எடுத்துரைத்தார் எஸ்.ரா .

நான் இல்லாமலே என் சொற்கள் உங்களை வந்து சேர உதவுவதுதான் புத்தகம். படிப்பது எல்லோருக்கும் எப்போதும் தேவை. பத்திரிகையாளன் அரசியலைப் பற்றியோ நிகழ்வுகளைப் பற்றியோ மட்டும் எழுத வேண்டும் என்றில்லை. பண்பாடு சார்ந்து இலக்கியம் சார்ந்தும் எழுதலாம். அப்படி எழுதிதான் நான் அவுட்ஸ்டாண்டிங் பெற்றேன்.

20 Jul 2019 2 PM

நான் அரசியலுக்கு ஏற்கெனவே வந்துட்டேன்! : விக்னேஷ்காந்த்

"லவ்ல ஜெயிக்கிறதுக்கும், லைஃப்ல ஜெயிக்கிறதுக்கும் சம்பந்தமில்லை!" தனுஷ்

நீங்க அரசியலுக்கு வந்தா என்ன பண்ணுவீங்க? ஒரு வார்த்தையில சொல்லுங்க. ?

மாற்றம் வரும். நீங்க என்ன நினைக்கிறோங்களோ அந்த மாற்றம் வரும். ~பாரத்

அவங்க அவங்க அவங்க வேலைய பாத்தா போதும். ~ ஆனந்தி

தனி நபர் ஒழுக்கம். சிங்கப்பூர் உருவாக அதுதான் காரணம். அதுதான் இப்ப வேணும். ~ராஜ்மோகன்

அரசியலுக்கு ஏற்கனவே வந்துட்டேன். அன்றாட வாழ்க்கையே அரசியல்தான? ~ விக்னேஷ்காந்த்

20 Jul 2019 1 PM

ட்ரால்களைச் சமாளிப்பது எப்படி?

"லவ்ல ஜெயிக்கிறதுக்கும், லைஃப்ல ஜெயிக்கிறதுக்கும் சம்பந்தமில்லை!" தனுஷ்

டிவில சான்ஸ் கிடைக்கல. யூடியூப்ல நாங்களே சேனல் ஆரம்பிச்சோம். ஜாலிய ஒரு விஷயத்த பண்ணி அதுல மெசேஜ் சொல்றதுதான் ஈஸியா ரீச் ஆகும்.

என்ன திட்டறவங்க, ஏதாவது புதுசா திட்றாங்களான்னு பார்ப்பேன். அத சீரியஸாவெல்லாம் எடுத்துக்கறது இல்ல.

20 Jul 2019 12 PM

விஜயகாந்த் வெளியிடை... டைம் டிராவல் ஹக்... என்னப்பா நடக்குது இங்கே?!

இரண்டாம் நாள் நிகழ்வின் முதல் பகுதியாக டிரெண்டிங் ப்ரோ நடந்து வருகிறது. RJ ஆனந்தி, RJ விக்னேஷ்காந்த், Finally பாரத், விக்னேஷ்காந்த் நால்வரும் மிகவும் ஜாலியாக இதில் கலந்துகொண்டனர். 'தூக்கி அடிச்சுடுவேன் பார்த்துக்க' என்னும் விஜயகாந்தின் வசனத்தை பேசி அசத்தினார் விக்னேஷ்காந்த். ' டைம் டிராவல் வாய்ப்புக் கிடைத்தால், யாரை சந்திப்பீர்கள் ' என்னும் கேள்விக்கு ஸ்டீஃபன் ஹாக்கிங் என பதிலளித்தார் ஆனந்தி. அவர் அதற்காக சொன்ன பதிலில் அவரின் வாசிப்பனுபவம் ஆச்சர்யப்பட வைத்தது.