Published:Updated:

மருத்துவர் சாந்தா முதல் விவசாயி தமிழ்ச்செல்வி வரை... சாதனைப் பெண்களுக்கு மரியாதை!

அவமானங்களை நடனத்தால் வென்று திருநங்கைகளின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் நர்த்தகி நடராஜுக்கு 'கலைநாயகி' விருது வழங்க பாடகி நித்யஸ்ரீ மகாதேவனும், நடிகை அர்ச்சனாவும் மேடையேறினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சினிமா, இலக்கியம், விவசாயம், வர்த்தகம் எனப் பல்வேறு துறைகளில் உயரம்தொட்ட சாதனைப்பெண்களை மேடையேற்றி அங்கீகரிக்கும் 'அவள் விருதுகள்' விழா மூன்றாம் ஆண்டாக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக நடந்துமுடிந்தது. இந்தக் கொண்டாட்ட விழாவின் சில துளிகள்...

* முதல் விருதாக 'மாண்புமிகு அதிகாரி' விருதைப் பெற்றுக்கொண்டார் இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ். சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துவரும் இவருக்கு ஐபிஎஸ் அதிகாரிகளான திலகவதியும் வனிதாவும் விருதை வழங்கினர்.

* தனது 93 ஆண்டுக்கால வாழ்க்கையில், 68 ஆண்டுகளை புற்றுநோய் நோயாளிகளை கவனிப்பதிலேயே செலவிட்ட மருத்துவர் சாந்தாவுக்கு, 'தமிழன்னை' விருது வழங்கி கௌரவப்படுத்தினர் மருத்துவரும் முன்னாள் அமைச்சருமான ஹெச்.வி.ஹண்டே, இதயநோய் மருத்துவர் கே.எம்.செரியன் மற்றும் மருத்துவர் மல்லிகா திருவதனன் ஆகியோர். "கடவுளின் மனித உருவம் மருத்துவர் சாந்தா. விரைவில் அவர் நோபல் பரிசைப் பெற வேண்டும்" என்று நெகிழ்ந்தார் ஹண்டே. மருத்துவர் சாந்தாவின் உயரிய பணிகளுக்கு உதவும் வகையில், கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் விகடன் குழுமத்தின் மேலாண் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்.

மருத்துவர் சாந்தா முதல் விவசாயி தமிழ்ச்செல்வி வரை... சாதனைப் பெண்களுக்கு மரியாதை!

* சாகச மங்கைக்கான விருதை நடிகர் பரத்திடமிருந்து பெற்றுக்கொண்டார் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் மரைன் பைலட்டான ரேஷ்மா நிலோஃபர். "உங்கள் குழந்தைகளை ஆண், பெண் என்று பிரித்துப்பார்க்காமல் அவர்களுக்குப் பிடித்த துறையில் சிறகடித்துப் பறக்கவிடுங்கள்" என, பெற்றோர் செய்யவேண்டிய சிறிய சாகசத்தைச் சொல்லிவிட்டுச் சென்றார் ரேஷ்மா.

* நியூரோ-மஸ்குலர் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்துவரும் ஸ்வர்ணலதாவுக்கான 'செயல் புயல்' விருதை அவர் கணவரிடம், நீதியரசர் சந்துரு வழங்கினார்.

* குயின் தொடரில் இளம்வயது சக்தி சேஷாத்ரியாகவே வாழ்ந்து தனது கரியரின் ஆரம்பத்திலேயே சிக்ஸர் அடித்திருந்தார் அஞ்சனா ஜெயபிரகாஷ். இவருக்கான 'யூத் ஸ்டார்' விருதை 'வெண்ணிற ஆடை' நிர்மலா மற்றும் இயக்குநர் பிரசாத் முருகேசன் வழங்கினர்.

* க்யூட் எக்ஸ்பிரஷன்களால் நெட்டிசன் மனங்களைக் கொள்ளையடித்த 'பவி டீச்சர்' சகாய பிரிகிடாதான் இந்த வருட 'வைரல் ஸ்டார்.' 'நக்கலைட்ஸ்' புகழ் தனம், 'மிஸ் இந்தியா' வென்ற அனு கீர்த்தி வாஸ் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர் விருதை வழங்கினர்.

மருத்துவர் சாந்தா முதல் விவசாயி தமிழ்ச்செல்வி வரை... சாதனைப் பெண்களுக்கு மரியாதை!

* அவமானங்களை நடனத்தால் வென்று திருநங்கைகளின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் நர்த்தகி நடராஜுக்கு 'கலைநாயகி' விருது வழங்க பாடகி நித்யஸ்ரீ மகாதேவனும், நடிகை அர்ச்சனாவும் மேடையேறினர்.

* 'பெஸ்ட் மாம்' விருதை வழங்க அனிருத்தின் அம்மா லட்சுமி ரவிச்சந்தரும் தனுஷின் பெற்றோர் விஜயலட்சுமி - கஸ்தூரி ராஜாவும் மேடையேறினர்.

* 'பிசினஸ் குயின்' விருதை மது சரண் பெற்றார். பியூட்டி சலூன், ஸ்கின் கேர், ஹேர் கேர் நிலையங்கள், உணவகங்கள், டே கேர் ஸ்கூல் என 10 நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திவரும் இவருக்கு கலைப்புலி எஸ்.தாணு மற்றும் நடிகை தீபா வெங்கட் விருது வழங்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* பசுமைப் பெண் விருதை நடிகை சீதா மற்றும் ரம்யா பாண்டியனிடமிருந்து பெற்றார் விவசாயி தமிழ்ச்செல்வி. இந்த 'வாழை நாயகி'க்கு விருதுடன் வாழைப் பூக்களினாலான கிரீடமும் அணிவிக்கப்பட்டது.

* 'இலக்கிய ஆளுமை' விருதை இயக்குநர் வசந்தபாலன் மற்றும் எழுத்தாளரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான மு.ராஜேந்திரன் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டார் கவிஞர் அ.வெண்ணிலா.

மருத்துவர் சாந்தா முதல் விவசாயி தமிழ்ச்செல்வி வரை... சாதனைப் பெண்களுக்கு மரியாதை!

* 'கல்வி தேவதை' விருதை ஆசிரியர் கிருஷ்ணவேணிக்கு வழங்கினார் நதியா. தன் முயற்சிகளால் முகப்பேர் புளியமர ஸ்கூலுக்குப் புதிய அடையாளம் கொடுத்தவர் கிருஷ்ணவேணி.

* விளிம்புநிலை மற்றும் பழங்குடிச் சமூக மக்களின் நலனுக்காக உழைக்கும் மக்கள் மருத்துவர் அனுரத்னா 'சேவை தேவதை' விருதை மருத்துவர்கள் ஜீவானந்தம் மற்றும் கமலா செல்வராஜ் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

* பேட்மின்டனில் சாதித்துக்கொண்டிருக்கும் இளம் வீராங்கனையான ஜெர்லின் அனிகாவுக்கு 'லிட்டில் சாம்பியன்' விருது வழங்கப்பட்டது. பேச்சு மற்றும் செவித்திறன் சவால் உடைய இவர் தன் தந்தையுடன் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார். விருதை நடிகர் சாந்தனு மற்றும் கிகி தம்பதியர் வழங்கினர்.

* 'சூப்பர் வுமன்' விருதை நடிகைகள் அம்பிகா மற்றும் ரேகாவிடமிருந்து பெற்றுக்கொண்டார் பேராசிரியர் மோகனா. தனது 72-வது வயதிலும் சராசரியாக மாதம் 12,000 கி.மீ தூரம் பயணித்துக் கொண்டிருக்கும் மோகனா புற்றுநோயையும் வென்றவர்.

* 'எவர்கிரீன் நாயகி' விருதை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மற்றும் இயக்குநர் கஸ்தூரி ராஜாவிடமிருந்து பெற்றுக்கொண்டார் குஷ்பு.

- மகிழ்ச்சியாலும் நெகிழ்ச்சியாலும் பெருமைகொண்டது அவள் விகடன் விருதுகள் மேடை. இந்தச் சாதனைப் பெண்கள் குறித்தும், அவர்களின் சாதித்தவை பற்றியும் அவள் விகடன் இதழில் விரிவாக வாசிக்க > அவள் விருதுகள்: சாதனைப் பெண்களின் சங்கமம் https://www.vikatan.com/events/functions/aval-vikatan-awards-2019-march-3

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு