Published:Updated:

நத்திங்... மொபைல் மார்க்கெட்டில் ஒண்ணும் இல்லாம ஆகிடுமா!

Nothing Mobile
பிரீமியம் ஸ்டோரி
Nothing Mobile

டிஜிட்டல் உலகம்

நத்திங்... மொபைல் மார்க்கெட்டில் ஒண்ணும் இல்லாம ஆகிடுமா!

டிஜிட்டல் உலகம்

Published:Updated:
Nothing Mobile
பிரீமியம் ஸ்டோரி
Nothing Mobile

ஒருவழியாக அந்த சந்திரமுகி பங்களா பாம்பு அதன் மாளிகையிலிருந்து வெளியேறிவிட்டது. ஆம், ஒரு நிறுவனம் அதன் முதல் மொபைலை வெளியிடுவதையே உலகம் முழுக்கப் பேசுபொருள் ஆக்கமுடியும் என நிரூபித்திருக்கிறது நத்திங் நிறுவனம். எல்லா நிறுவனங்களின் பெயர்களுக்குப் பின்னாலும், பல நூறு காரணங்கள் இருக்கும். ஹாலிவுட்டில்கூட அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் என்று உண்டு. அட என்னடா இது ஹாலிவுட்டில் நம்மூர் பெயர் , ஆச்சர்யமாக இருக்கிறதே என்று தோன்றும். ஆனால், `ஒண்ணுமில்லை’ என்பதை எப்படி ஒரு நிறுவனத்துக்குப் பெயராக வைக்க முடியும். ஆனாலும், நத்திங் என்பதையே பெயராக வைத்து கேட்ஜெட்களை வெளியிட்டு வருகிறார் அதன் நிறுவனரான கார்ல் பே. மூடக்கூடிய நிலையில் இருந்த எசென்ஷியல்ஸ் நிறுவனத்தை மொத்தமாய் வாங்கி, தற்போது அதை `ஒண்ணுமில்லாமல்’ ஆக்கியிருக்கிறார் கார்ல் பே. கார்ல் பேயைப் போலவே, எசென்ஷியல்ஸுக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அதை உருவாக்கியது நாம் எல்லோரும் அனுதினமும் நம் மொபைல்களில் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டின் இணை இயக்குநரான ஆண்டி ரூபின்.

சீனாவில் பிறந்து ஸ்வீடனில் வசிக்கும் கார்ல் பே-தான் நத்திங் நிறுவனத்தை ஆரம்பித்தவர். பீட் லௌவுடன் இணைந்து ஒன் ப்ளஸ் நிறுவனத்தை ஆரம்பித்ததும் இவரே. 2020-ல் ஒன்ப்ளஸ்ஸில் இருந்து வெளியேறி லண்டனில் இந்தப் புதிய நிறுவனத்தை தொடங்குகிறார். எல்லா மொபைல்களையும் பார்த்தோம். ஆனால், தங்களுக்குப் பிடித்ததுபோல ஒரு மொபைல்கூட இல்லை; அதனால்தான் ஒன்ப்ளஸ்ஸை ஆரம்பித்தோம் என 2013-ல் பேட்டியளித்த கார்ல் பே, புதிதாக இன்னொரு நிறுவனம் ஆரம்பிக்கிறார் என்னும்போது எல்லோருக்குமே அதன்மீது ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த ஆர்வத்தை மேலும் அதிகரிக்க வைத்தனர் டெக் உலகின் முன்னணி ஜாம்பவான்கள். ஐபாடைக் கண்டுபிடித்த டோனி ஃபேடல், ட்விட்ச் இணை இயக்குநரான கெவின் லின், ரெட்டிட் சிஐஓவான ஸ்டீவ் ஹவ்மேன், யூடியூபர் கேஸி நெய்ஸ்டேட் என பலர் நத்திங் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். அட அவ்வளவு ஏன், நம்மூர் கிரிக்கெட்டர் யுவராஜ் சிங், பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் எனப் பலர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள்.

நத்திங்... 
மொபைல் மார்க்கெட்டில் ஒண்ணும் இல்லாம ஆகிடுமா!

சரி; ஜூலையில் நடந்த அவர்களின் முதல் மொபைல் லாஞ்ச் குறித்து இனி பார்ப்போம். `விக்ரம்’ பட கமல் பாணியில் பலகட்ட ப்ரோமோஷன்களில் இறங்கினார் கார்ல் பே. இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடான TWS ஹெட்செட்டே இன்னும் மார்க்கெட்டில் சக்கைப் போடு போடுகிறது. எல்லா நிறுவனங்களும் ஹெட்செட்டில் என்ன புதிதாகச் செய்யலாம் என யோசித்துக்கொண்டிருக்க, நத்திங் நிறுவனம் டிரான்ஸ்பரண்ட் டிசைனில் TWS பாக்ஸை வெளியிட்டு போட்டியாளர்களை அசரடித்தது. மொபைலை வெளியிடுவதற்கு முன்பே, அதன் பின்பக்கத்துக்குத் தனியாக ப்ரோமோஷனில் இறங்கியது நத்திங். ஏனெனில், அதுதான் நத்திங்கின் டிரம்ப் கார்டு. கிலிஃப் இண்டர்ஃபேஸ் என்னும் புதிய உத்தியை அதில் கொண்டு வந்தது நத்திங். உங்களுக்கு வரும் அலைபேசி அழைப்புகளுக்கு ஏற்ப, பின்பக்க கிலிஃப் இண்டர்ஃபேஸில் பல்வேறு வேறுபாடுகளில் ஒளிக்கலவை வெளியாகும். அதேபோல், மொபைலை எடுத்துப் ஸ்கீரினைப் பார்க்காமலே பின் பக்கத்தில் இருக்கும் கிலிஃப் இண்டிகேட்டரை வைத்து மொபைல் எவ்வளவு சார்ஜ் ஆகியிருக்கிறது என்பதையும் கண்டறிய முடியும். சரி, இதன் மூலம் என்ன பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது என யூகிக்கிறீர்களா? உங்கள் கேள்வியில் எல்லா தர்க்கமும் இருக்கிறது. ஆனால், ஏற்கெனவே மார்க்கெட்டில் கொட்டிக் கிடக்கும் மொபைகளுக்கு நடுவே, தன் நிறுவன மொபைலை வேறுபடுத்திக் காட்ட, இந்த உத்தி கார்ல் பேவுக்குப் பெரும் உதவியாக அமைந்தது.

நத்திங்... 
மொபைல் மார்க்கெட்டில் ஒண்ணும் இல்லாம ஆகிடுமா!
நத்திங்... 
மொபைல் மார்க்கெட்டில் ஒண்ணும் இல்லாம ஆகிடுமா!

ஆப்பிள் உட்பட எல்லா மொபைல்களும், அதிக எண்ணிகையில் ரியர் கேமராக்களை அடுக்கிக் கொண்டு போக, அதில் எந்தப் பயனும் இல்லை என தடாலடியாக அறிவித்தார் கார்ல் பே. இரண்டு இரண்டு ரியர் கேமராக்கள் - அதில் ஒன்று சாம்சங் சென்சார், இன்னொன்று சோனி சென்சார். இரண்டும் 50 மெகாபிக்ஸல். ஒன்ப்ளஸ் வந்த போது, இன்வைட் மோடில்தான் மொபைல்களை வெளியிட்டது. அதாவது ஒரு புதிய நிறுவனம், தங்களின் டிமாண்டைத் தக்க வைத்துக் கொள்ள, மார்க்கெட்டில் இப்படியான இன்வைட் உத்தியைக் கையாளும். அதைப்போலவே நத்திங்கின் phone1 மொபைலையும் வாங்குவதற்கும் இன்வைட், ப்ரீஆர்டர் என ஹைப் குறையாமல் பார்த்துக் கொண்டது நத்திங். பில்ட்அப்கள் அதிகம் இருந்தாலும் மார்க்கெட்டின் டாப் கிரேடு சிப்செட்டோ, ஸ்பெக்ஸோ இந்த மொபைலில் இல்லை என்பதுதான் பலரை ஷாக் அடிக்க வைத்தது. அந்த செக்மென்ட்டை டார்கெட் செய்வது எங்களின் தற்போதைய நோக்கமில்லை என அதற்கும் விளக்கமளித்தனர்.

நத்திங் பற்றிப் பேசும்போதெல்லாம், ஒன்பிளஸ்ஸின் பெயரும் மீண்டும் மீண்டும் எழுதப்படுவதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. நத்திங் மொபைலை கூகுளில் தேடினால் நமக்கு சர்ச்சில் முதலில் காட்டுவது ஒன்ப்ளஸ், சாம்சங் போன்ற போட்டி மொபைல்கள்தான். `யாரோ பதற்றமாக இருக்கிறார்கள்’ என அதையும் நக்கல் அடித்தார் கார்ல் .

கிட்டத்தட்ட ஆண்ட்ராய்டில் ஒரு ஐபோன் அனுபவத்தைத் தரும் முனைப்பில் நத்திங் phone1ஐ வடிவமைத்திருக்கிறார்கள். ஆனால், புதிய நிறுவனம் என்கிற கேள்வியும், சார்ஜர்கூடக் கொடுக்காமல் போங்கு செய்ததையும் எத்தனை பேர் வரவேற்பார்கள் எனத் தெரியவில்லை. அதற்கான பதில் அடுத்த காலாண்டு விற்பனை முடிவில் தான் தெரியும்.