Published:Updated:

டெலிகிராமில் இருக்கும் டெலிட் வசதி!- வருகிறது வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

பிரைவேட் சேட்களில் பயனாளர்கள் எவ்வளவு காலத்தில் அனுப்பப்பட்ட மெசேஜ்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்

ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, அனுப்பப்பட்ட மெசேஜ்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே அழிந்து போகும் வசதிகளுடன் கூடிய வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் கூடிய விரைவில் வெளியிடப்படுகிறது. ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் நிறுவனம் ஒன்று இந்தப் புதிய வாட்ஸ் அப் வடிவமைப்பில் ஈடுபட்டிருக்கிறது. முறையான வடிவமைப்புக்குப் பிறகு, பயன்பாடுகளின் புதுப்பிப்பைக் கண்காணிக்கும் ரசிகர் வலைதளமான WABetaInfo இல் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்

இந்த அம்சங்கள் ஒரே நேரத்தில் பீட்டா வெர்ஷன் 2.19.348 இல் வெளியிடப்படுகின்றன. கூகுள் பிளே பீட்டா நிரலுக்காக தங்கள் பெயரைப் பதிவு செய்த பயனாளர்கள் சமீபத்திய பதிப்பையும் பதிவிறக்கம் செய்யலாம். அதற்குப்பதிலாக Apk miror பிளாட்பார்மில் கிடைக்கும் apk விலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் appஐ முறையாக அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த புதுவெர்ஷனை மேம்படுத்துவதற்கான பணிகள் இன்னும் நடந்துகொண்டிருப்பதால் அனைத்து ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களும் இதன் புதுப்பிப்பு அறிவிப்பை கூகுள் பிளே ஸ்டோரில் காண முடியாது.

வலைதளத்தில் கூறப்பட்டுள்ள படி , மெசேஜ்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே மறைந்து போகும் செயல்முறை முதலில் வாட்ஸ் அப் குரூப்களில், குரூப் அட்மின்களின் உதவியுடன் செயல்படுத்தப்படும். அதன் பிறகு நம்முடைய பிரைவேட் சேட் பக்கங்களிலும் செயல்படுத்தப்படும்.

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்

பிரைவேட் சேட்களில் பயனாளர்கள் எவ்வளவு காலத்தில் அனுப்பப்பட்ட மெசேஜ்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதற்கு ஒரு மணி நேரம், ஒரு நாள், ஒரு வாரம், ஒருமாதம், ஒரு வருடம் என ஐந்து ஆப்சன்கள் வழங்கப்பட்டிருக்கும். இதில் நாம் ஒருமணி நேரத்தை தேர்ந்தெடுத்தால், ஒரு மணி நேரத்தில் அனுப்பிய மெசேஜ்கள் தானாகவே மறைந்து போகும்.

ஏற்கெனவே உள்ள டெலிட் பார் எவ்ரிஒன் ஆப்சனில் நாம் டெலிட் செய்த பிறகு,," this message was deleted "என்று வாட்ஸ்அப் பக்கத்தில் காட்டும். ஆனால், இந்தப் புது வெர்ஷனில் அனுப்பப்பட்ட தகவல் முழுவதுமாக மறைந்து விடும். செய்திகள் இல்லாததும் போலவே தோன்றும். ஏற்கெனவே ஸ்னேப்சேட், டெலிகிராம் போன்ற ஆப்களில் இந்த அம்சம் பயன்பாட்டில் உள்ளது. வாட்ஸ்அப் இந்த விஷயத்தில் கொஞ்சம் தாமதமாகத்தான் களத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.