நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

எஸ்.ஐ.பி-யில் போட்ட பணத்தை இதுவரை எடுக்கவில்லை!

நானும் எஸ்.ஐ.பியும்!
பிரீமியம் ஸ்டோரி
News
நானும் எஸ்.ஐ.பியும்!

நானும் எஸ்.ஐ.பியும்!

லக்குகளை நிர்ணயம் செய்துகொண்டு முதலீடு செய்வதே, குறிப்பிட்ட இலக்குகளைத் தடுமாற்றம் இல்லாமல் அடைய வேண்டும் என்பதற்காகத்தான். இந்த விதிமுறையை மீறாமல், தன் இலக்குகளுக்காகச் செய்துவரும் எஸ்.ஐ.பி முதலீட்டை, பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து செய்து வருகிறார் சென்னையை அடுத்த திருவேற்காட்டைச் சேர்ந்த கே.ராஜகோபாலன்.

தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் 42 வயதாகும் இவர், 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறார். தற்போது பங்குச் சந்தை இறக்கம் கண்டுள்ள நிலையிலும் இவரின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சராசரியாக ஆண்டுக்கு 12% வருமானம் தந்துகொண்டிருக்கிறது.

எஸ்.ஐ.பி-யில் போட்ட பணத்தை இதுவரை எடுக்கவில்லை!

‘‘அலுவலகத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி ரூ.5 லட்சத்துக்கு எடுத்துத் தந்திருக்கிறார்கள். இதேபோல், அலுவலகத்தில் ரூ.35 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறார்கள். இத்துடன் நான் தனியாக ரூ.50 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளேன். முதன்முதலில் மியூச்சுவல் ஃபண்டில் வருமானவரியை மிச்சப்படுத்தும் நோக்கத்துடன் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்தேன். அதுவும் நாணயம் விகடன் படித்துத்தான் இந்த முதலீட்டை மேற்கொண்டேன். இரண்டு ஆண்டுகளுக்குமுன் எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.7,000 முதலீடு செய்து வந்தேன். தற்போதைய நிலையில் மாதம் 10,000 ரூபாய் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன்.

முதலீடு மீதான ரிஸ்க்கைக் குறைக்க தலா ரூ.2,500 வீதம் நான்கு ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். ரிஸ்க்கை மேலும் குறைக்க லார்ஜ்கேப் ஈக்விட்டி ஃபண்ட், மிட் கேப் ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட் எனப் பிரித்து முதலீடு செய்து வருகிறேன்.

எஸ்.ஐ.பி-யில் போட்ட பணத்தை இதுவரை எடுக்கவில்லை!

என் மகள் (ஏழாம் வகுப்பு) மற்றும் மகனின் (இரண்டாம் வகுப்பு) மேற்படிப்பு மற்றும் திருமணத்துக்காக இந்த முதலீடுகளை மேற்கொண்டு வருகிறேன். சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த முதலீடுகளை இன்னும் அதிகரிக்கத் திட்ட மிட்டுள்ளேன்.

இதுவரையில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்த பணத்தை எடுக்கவில்லை. இவற்றை மிக நீண்ட கால முதலீடுகளாக வைத்திருக்கி றேன். இப்போது நான் முதலீடு செய்துள்ள மியூச்சுவல் ஃபண்டுகள் சராசரியாக 12% வருமானம் கொடுத்து வருகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை இந்த முதலீடுகளை ஆய்வு செய்து வருகிறேன்” என்றார்.

முதலீட்டைத் தொடர வேண்டும் என்கிற பாடத்தை இவரிடமிருந்து கற்கலாம்!

உங்களின் எஸ்.ஐ.பி முதலீட்டு அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயிலுக்கு அனுப்பிவைக்கலாம்.