Published:Updated:

பயணங்களே கல்வி, அனுபவங்களே ஆசான்!

பயணங்களே கல்வி, அனுபவங்களே ஆசான்!
பிரீமியம் ஸ்டோரி
News
பயணங்களே கல்வி, அனுபவங்களே ஆசான்!

சுட்டி ஸ்டார் ஸ்பெஷல் நிகழ்வு

பயணங்களே கல்வி, அனுபவங்களே ஆசான்!

‘‘ஹாய்... ஹலோ... ப்ரோ...'' என விதவிதமான குரலுடன் ஹைஃபை போட்டுக்கொண்ட உற்சாக முகங்களால் அந்த அரங்கம் நிரம்ப ஆரம்பித்தது. சுட்டி விகடனின் 'பேனா பிடிக்கலாம், பின்னி எடுக்கலாம்' கேரியர் கைட்னஸ் நிகழ்வு அது. 6 மாதங்களுக்குப் பிறகு நண்பர்களைச் சந்தித்ததில், நிறைய நிறைய பேசி தீர்த்தார்கள். சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது இந்த முழுநாள் நிகழ்வு.

அறிவியலும் தொழில்நுட்பமும்!

பயணங்களே கல்வி, அனுபவங்களே ஆசான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அறிவியலின் முக்கியத்துவம், வருங்கால வாய்ப்புகள் குறித்துப் பேசவந்தார், அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர், பேராசிரியர் ஜெ.குமார்.

‘‘எல்லோருக்குள்ளும் நிறைய கதைகள் இருக்கிறது. பாட்டி சொன்னது, பயணம் செய்தது போன்ற இந்தக் கதைகள்தான் நம்மை வழிநடத்தும். பத்திரிகையாளராக இருக்க நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அறிவியல் ரீதியாகவும் கருத்துகளை அணுகவேண்டும். பல விஷயங்களைப் பாகுபடுத்திப் பார்க்க,   உண்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள, அறிவியல் அவசியம். அறிவியலுக்கு எண்ணற்ற உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சக்தி உள்ளது.  அறிவியல் வளர்ச்சியும், ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜன்டுமே வருங்காலத்தை ஆளப்போகிறது'' எனப் பல விஷயங்களை எளிமையாகப்  புரியவைத்தார்.

பயணங்களே கல்வி, அனுபவங்களே ஆசான்!

‘கல்வி மேம்பாடும் நவீனத் தொழில்நுட்பமும்' என்ற தலைப்பில் பேசவந்தார், BYJU'S Senior Educational Counsellor அருண் ஜேக்கப்.

‘‘கல்வி என்றால் என்ன? நாம எதுக்குப் படிக்கணும்?'' என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடலாக ஆரம்பித்து, கல்வி பற்றிய பல புதிய பார்வையை உண்டாக்கினார்.

‘‘நீ யார் என்பதை நீயே தெரிஞ்சுக்கிறதுதான் கல்வி. உலகத்தில் எந்தத் துறையையும் எடுத்துப் பாருங்க, அதில் வெற்றிபெற்றவங்க பிடிச்சதைத் தேடிப்போனவங்களா இருப்பாங்க. எதுக்காகப் படிக்கணும்னு புரிஞ்சுட்டா போதும்.  கணக்கு கசக்குது, அறிவியல் மிரட்டுது என்கிற பயம் போயிரும். இந்தப் பயத்தைத் தாண்டிவிட்டால் வெற்றி நிச்சயம்'' என்றார்.

பயணங்களும் மனிதர்களும்!

பயணங்களே கல்வி, அனுபவங்களே ஆசான்!

அடுத்து, தனது கலகலப்பான ஸ்டைலுடன் மைக் பிடித்தார், ‘ஹெலிக்ஸ் மனிதவள மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின்’ சேர்மன் ஜி.செந்தில்குமார்.

‘‘வகுப்பில் படிக்கும் கல்வி என்பது அடிப்படையான கல்வியே. பயணங்களே நமக்கு நிறையக் கற்றுக்கொடுக்கும். அதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிறைய பயணம் செய்ய வேண்டும். வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டும் பயணம் செய்ய வேண்டும். நிறைய மனிதர்களைச் சந்திக்க வேண்டும். அவர்கள்தான் உண்மையான கல்வியைக் கற்றுத்தருபவர்கள்.

நான் கல்லூரியில் பிசினஸ் மேனேஜ்மென்ட் முடித்ததும், ‘அடுத்து என்ன செய்யப்போறே?' என அப்பா கேட்டார். ‘ரெண்டு வருஷம் ஊர் சுற்றப்போறேன். அதில், ஒரு பகுதியாகப் பிச்சைக்காரர்களுடன் தங்கியிருந்து பிச்சை எடுக்கப்போறேன்' என்றேன். என் அப்பா கோபப்படவில்லை. ‘ஆல் தி பெஸ்ட்' சொல்லி அனுப்பினார்’’ என்றார்.

பயணங்களே கல்வி, அனுபவங்களே ஆசான்!

பின்னர், சுட்டி ஸ்டார்களுக்கு உற்சாகமான ஒரு பயிற்சி மூலம் சவால் வைத்தார். ‘‘உங்க பெயர், உங்களின் சிறந்த குணாதிசயம், எந்தப் பழக்கத்தை விடணும்னு நினைக்கிறீங்க? வருங்காலத்தில் என்னவாக ஆகணும்னு நினைக்கிறீங்க? இந்த உலகம் உங்களை எப்படி ஞாபகம் வெச்சுக்கணும்னு நினைக்கிறீங்க? இந்தக் கேள்விகளுக்கு  எழுத்தையோ, எண்களையோ பயன்படுத்தாமல் புகைப்படங்கள், ஓவியங்கள் மூலமே பதில் சொல்லணும்'' என்றார்.

சுட்டி ஸ்டார்கள் அத்தனை பேரும் அந்த கொலாஜ் சவாலில் பட்டையைக் கிளப்பினார்கள். அந்த நேரத்தில்,  பெற்றோர்களுடன் தனி கலந்துரையாடல் மூலம், குழந்தைகளை அணுகும் விதம் குறித்து வழிகாட்டினார் செந்தில்குமார்.

கதையும் மேஜிக்கும்!

பயணங்களே கல்வி, அனுபவங்களே ஆசான்!

உணவு இடைவேளைக்குப் பிறகு, உற்சாகத்தின் மடங்கு கூடியது. ‘குடுகுடு ராஜா... குத்தாலத்து ராஜா... காசி ராஜா...  காதபுடி ராஜா...’ என்று குழந்தைகளையும் பெற்றோர்களையும் விளையாட்டுக்குள் அழைத்துச்சென்று குதூகலப்படுத்தினார்,  கதை சொல்லி ஷர்மிளா. பிறகு, ஒரு கதையின் வழியே காட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

‘மந்திரமா தந்திரமா?’ என்றவாறு அடுத்து வந்தார், ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’  சேதுராமன். பலவித மாயாஜாலங்களில் சுட்டிகளையும் இணைத்து கலகலப்புடன் நிகழ்த்தி வியக்கவைத்தார். பிறகு, ‘எதுவுமே மாயம் இல்லை. எல்லாமே தந்திரம்தான்’ என, அவற்றுக்கான அறிவியல் விளக்கம் அளித்தார்.

திறமையும் பரிசும்!

பயணங்களே கல்வி, அனுபவங்களே ஆசான்!

நிகழ்வின் இறுதிப் பகுதியை நெருங்கியது, சுட்டி ஸ்டார்ஸ் மிட் கேம்ப். சுட்டி ஸ்டார்கள் கடந்த 6 மாதங்களில் பெற்ற அனுபவங்கள், அனுப்பிய படைப்புகள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர்.

‘குட்டி குட்டி பிள்ளைகளுக்காக நிலவை எட்டிப்பிடிக்கும் கனவை வளர்த்த எனது சுட்டிவிகடனே...’ என ஆரம்பித்து, ‘ஆன் தி ஸ்பாட்’ கவிதைகள் மற்றும் கருத்துகள் சொல்லி அசத்தினர்.

முழு நிகழ்வையும் கலகலப்புடன் தொகுத்து வழங்கினார்கள், விகடன் குழுவைச் சேர்ந்த சக்திவேல் முருகன் மற்றும் வித்யா காயத்ரி. இறுதியாக, ஆச்சர்யமூட்டும் பரிசுகளுடன் மனம் நிறைந்த மகிழ்வுடன் விடை பெற்றார்கள் நம்ம சுட்டி ஸ்டார்கள்!

பயணங்களே கல்வி, அனுபவங்களே ஆசான்!எந்த விஷயமாக இருந்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். நிறைய புத்தகங்கள் வாசியுங்கள். அடுத்த 6 மாதங்களில் பல்வேறு படைப்புகளால் சுட்டி விகடனின் சூப்பர் சுட்டி ஸ்டார்களாக வென்று காட்டுங்கள்.

-ச.ராம் சங்கர்

படங்கள்: வீ.நாகமணி, பா.கார்த்திகா