நம் வீட்டு குட்டிப் பட்டாளங்களுக்கு சமையலில் ஆர்வம் அதிகமிருக்கும். ஆண், பெண் குழந்தைகள் என பேதமில்லாமல் சமையல் சொப்பு சாமான்களை வைத்து விளையாடுவதைப் பார்த்திருப்போம். யூடியூபின் வரவுக்குப் பிறகு, விளையாட்டு சமையல் நிஜமாக மாறி பல குழந்தைகள் வீட்டு கிச்சனில் நுழைந்திருக்கின்றனர். சமையலுக்குள் நுழையும் பெரும்பாலான குழந்தைகளின் தேர்வு பேக்கிங்தான்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பேக்கிங்கில் ஆர்வம் உள்ள உங்கள் வீட்டு குட்டீஸுக்கான பிரத்யேக பயிற்சியை அவள் விகடன் நடத்தவுள்ளது. அவள் விகடன் மற்றும் Four Seasons pastry நிறுவனத்தின் நிறுவனருமான சுட்டி செஃப் வினுஷாவுடன் இணைந்து `Baking with Kutties!' என்ற பயிற்சியை வரும் ஜூன் 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தவுள்ளனர்.
12 வயதாகும் சுட்டி செஃப் வினுஷா, பேக்கிங்கில் கொண்ட ஆர்வத்தால் அதைப் பற்றிய பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று 9 வயதிலேயே கேக் பேக்கிங் நிறுவனம் தொடங்கினார். தேசிய அளவிலான தொலைக்காட்சி ஷோக்கள், போட்டிகள் எனப் பலவற்றில் கலந்துகொண்டுள்ள வினுஷாவுக்கு இதே துறையில் சாதிக்க வேண்டும் என்பதே விருப்பம்.

வினுஷா பங்கேற்று கற்றுக்கொடுக்கும் இந்தப் பயிற்சி வகுப்பில், மூன்று ரெசிபிக்கள் நேரடியாகச் செய்து காட்டப்படும். பேக்கிங்கில் ஈடுபட விரும்பும் குழந்தைகளுக்கான டிப்ஸ், பேக்கிங் கலையை மூலதமானமாகக் கொண்டு குழந்தைகள் பிசினஸ் தொடங்குவதற்கான டிப்ஸ், பேக்கிங் மற்றும் பிசினஸ் தொடர்பான கேள்வி பதில் நேரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இதில் இடம்பெறும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
* 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம்.
* பயிற்சி வகுப்பில் குழந்தைகளுடன் அவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளர் (Guardian) என யாராவது ஒருவர் மட்டும் பங்கேற்க அனுமதி உண்டு.
* பயிற்சிக்கான கட்டணம் ரூ.1,000.
* பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு ரூ.550 மதிப்புள்ள Baking Kit இலவசமாக வழங்கப்படும்.

ஜூன் 5-ம் தேதி காலை 9.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரை 757, அண்ணாசாலை, வாசன் அவென்யூ, சென்னை - 600 002 என்ற முகவரியில் அமைந்துள்ள ஆனந்த விகடன் அலுவலகத்தில் பயிற்சி நடைபெறும். இந்தக் கோடையில் உங்கள் வீட்டுக் குழந்தைகளின் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற இந்தப் பயிற்சியில் பங்கேற்கச் செய்யுங்கள். இதில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.