Published:Updated:

புதுமை படைத்த புதுச்சேரி சுட்டிகள்!

இன்ஃபோ புக் 200... ஊரைத் தெரிஞ்சிக்கிட்டோம்!

பிரீமியம் ஸ்டோரி

ங்கள் மாவட்டம் குறித்தும் அதன் வரலாற்றுச் சிறப்புகள் குறித்தும் தெரிந்துகொள்வதற்காக, சுட்டி விகடன் வழங்கும் ‘நம்ம ஊரை நல்லாத் தெரிஞ்சுப்போம் - இன்ஃபோ 200’ என்ற இணைப்பிதழை ஒவ்வோர் இதழிலும் வழங்கி வருகிறது. பள்ளிகள் வழியே கொடுத்து, OMR ஷீட்டில் தேர்வுகளை நடத்திப் பரிசுகளை வழங்கி வருகிறது. சேலம், மதுரை, சென்னை, தர்மபுரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைத் தொடர்ந்து புதுச்சேரி பள்ளிகளிலும் சுட்டி விகடன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன.

புதுமை படைத்த புதுச்சேரி சுட்டிகள்!

இதில், புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 5,000 மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். வெற்றிபெற்ற 300 மாணவ மாணவிகளை கௌரவித்து பரிசளிக்கும் விழா, புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

புதுமை படைத்த புதுச்சேரி சுட்டிகள்!

சிறப்பு விருந்தினராக மாண்புமிகு புதுச்சேரி கல்வி, வேளாண் மற்றும் மின்துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசளித்தார்.

புதுமை படைத்த புதுச்சேரி சுட்டிகள்!

“தற்போது வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது. வாசிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போதே எனக்கு செய்தித்தாள்கள் படிக்கும் ஆர்வம் தொடங்கிவிட்டது. இன்று இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கான பலமே வாசிப்பின் மூலம் கிடைத்த அனுபவங்கள்தான். பாடப் புத்தகங்களைத் தாண்டி செய்தித்தாள்கள், புத்தகங்களை வாசியுங்கள். உலக அறிவும் பொதுஅறிவும் மிகவும் முக்கியம். வாசிப்புப் பழக்கம் இருந்தால்தான் இவற்றைப் பெற முடியும். புத்தகங்களை தலைகுனிந்து படித்தால் மட்டுமே வாழ்வில் தலைநிமிர்ந்து வாழமுடியும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைப் பயின்றால் மட்டுமே சமுதாயம் அவர்களை அங்கீகரிக்கும். 93 வருடங்கள் பாரம்பர்யமிக்க விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் சுட்டி விகடன் நடத்திய தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.

புதுமை படைத்த புதுச்சேரி சுட்டிகள்!

அமலோர்பவம் பள்ளியின் முதல்வர் பிரிட்டோ பேசும்போது. ``செல்போன் மற்றும் இணைய ஊடகங்கள் பயன்பாட்டினை மாணவர்கள் அறிவுத்தேடலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெற்றோரும் மாணவர்களுக்கு அதற்குத் தேவையான வழிகாட்டலை அளிக்க வேண்டும்.'' என்றார்.

புதுமை படைத்த புதுச்சேரி சுட்டிகள்!

இந்த நிகழ்ச்சியினை சீனியர் சுட்டி ஸ்டார் வைகவி தொகுத்து வழங்கினர்.

பரிசுகள் மற்றும் சான்றிதழ்களுடன் தலைநிமிர்ந்து நடந்தார்கள் நாட்டின் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு