Election bannerElection banner
Published:Updated:

சிறந்த பேச்சாளர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஆன்லைன் பயிலரங்கத்துக்கு வாருங்கள்!

தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்

சிறந்த பேச்சாளர் ஆக வேண்டும் என்கிற ஆவலும் ஆர்வமும் எல்லோருக்கும் இருக்கும். அரசியல் ஆர்வம்கொண்ட இளைஞர்களுக்கு அது சற்று அதிகமாகவே இருக்கும். எனவேதான், அதற்காகவே ஒரு ஆன்லைன் பயிலரங்கத்தை ஜூனியர் விகடன் நடத்துகிறது.

`தமிழ் மண்ணே வணக்கம்! உரக்கப் பேசுவோம்... உண்மையே பேசுவோம்’ என்ற நிகழ்ச்சியை காணொலி வாயிலாக ஜூனியர் விகடன் நடத்துகிறது. இந்த வாரம் சனிக்கிழமை (மார்ச் 13) மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது.

நாடறிந்த நல்ல பேச்சாளரும், பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களைத் தன் பேச்சாற்றாலால் கட்டிப்போடுகிற, கலகலப்பூட்டுகிற பட்டிமன்ற மன்னன் ராஜா பங்கேற்று உங்களின் பேச்சுத்திறனை பட்டைதீட்டவிருக்கிறார். ஆர்வமுள்ள இளைஞர்களும் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். அதற்கு முன்பாக இங்கு வழங்கப்பட்டுள்ள இணைப்பில் வந்து பதிவுசெய்துகொள்ளுங்கள்.

ராஜா
ராஜா

பேச்சாற்றல் குறித்து முக்கியமான சில கருத்துகளை இங்கு பகிர்ந்துகொள்கிறார் பட்டிமன்றம் ராஜா. ``மனிதன் எழுப்பும் ஒலியில், பொருள் பொதிந்த ஒலி என்பதுதான் மொழி. மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஒரு கருவியாக மனிதனுக்கு மொழி இருக்கிறது. நினைக்கிற கருத்துகளை மொழி மூலமாகத்தான் மனிதன் வெளிப்படுத்துகிறான். அப்படி வெளிப்படுத்துகிற வாய்ப்பு இருக்கும்போது மொழியை நாம் நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும். மொழியைத் திறம்படக் கையாளுவதற்கான ஆற்றலை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, நாம் சொல்ல நினைக்கும் கருத்தைத் தெளிவாகக் கொண்டுவருவதாக நாம் பயன்படுத்தும் சொற்கள் இருக்க வேண்டும். மனதில் ஒன்றை நினைத்து, சொற்களில் வேறு ஒன்றாகப் போய்ச் சேர்ந்தால், நாம் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவோம். அந்தச் சூழல், நாம் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறான ஒன்றாகவும், விரும்பத்தகாத ஒன்றாகவும் மாறிவிடும். https://events.vikatan.com/197-tamil-manne-vanakkam/

ஒரு சூழலை இலகுவானதாக மாற்றுவதற்கு சொல்லாற்றல் மிகவும் முக்கியமானது. ‘ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்’ என்று நம் ஊரில் சொல்வார்கள். எனவே, அந்தச் சொற்களைத் தெரிந்துகொள்ளுதல் மிகவும் முக்கியம். சொற்களில் தேர்ச்சிபெற்ற ஒரு தலைமுறை நமக்குத் தேவை.

சிலருக்கு நகைச்சுவையான பேச்சு அதிகம் வரும், சிலருக்கு சீரியஸான பேச்சு வரும். சிலருக்கு உணர்ச்சிவசப்படும்படியான பேச்சு வரும். ஆனால், எதையெல்லாம் சொல்லக் கூடாது என்பது ஒரு மனிதருக்கு அவசியம் தெரிய வேண்டும். எனவே, எதையெல்லாம் நாம் தவிர்க்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வது அவசியம்.

தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்

பத்து நல்ல வார்த்தைகளைப் பேசிவிட்டு கடைசியில் தவறான ஒரு வார்த்தையைப் பயன்படுத்திவிட்டால், நாம் பேசிய அத்தனையும் கெட்டுவிடும். பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு இது போன்ற பல முக்கியமான கருத்துகளைச் சொல்ல ஆசைப்படுகிறேன்” என்கிறார் பட்டிமன்றம் ராஜா.

இலக்கியம், நகைச்சுவை, நடிப்பு என பன்முகம்கொண்ட ராஜாவிடம் பாடம் படிக்க நீங்கள் தயாராகுங்கள். உங்கள் நிறைகுறைகளை அவரிடம் நேரிடையாகப் பகிர்ந்துகொண்டு பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்வதற்கான ஆலோசனைகளை அவரிடம் பெறலாம். இந்தச் சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள், கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கி முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

வாருங்கள்... உரக்கப் பேசுவோம், உண்மையே பேசுவோம்!

இணைப்பு: https://events.vikatan.com/197-tamil-manne-vanakkam/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு