Published:Updated:

ஹலோ வாசகர்களே...

ஹலோ வாசகர்களே...

ஹலோ வாசகர்களே...

ஹலோ வாசகர்களே...

Published:Updated:

இயற்கை வளக் கொள்ளையைத் தடுத்திடுங்கள்!

ஹலோ வாசகர்களே...

அலைக்கற்றை ஏலத்தின் மூலம் சுமார் 1.09 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கிடைக்கவிருக்கிறது. மேலும், 32 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதன் மூலம் 2.09 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் மத்திய அரசாங்கம் மதிப்பிட்டிருக்கிறது. நாட்டு மக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களையும் தொழில்நுட்பங்களையும் சரியானபடி, நேர்மையாக ஏலம் விடுவதன் மூலம் நமது அரசாங்கத்துக்கு பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் கூடுதலாக கிடைக்கும் என்பதையே இந்த இரு புள்ளிவிவரங்களும் சொல்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அலைக்கற்றை மற்றும் நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதில் பெரும் முறைகேடுகள் நடந்து, அந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்ததால்தான், இப்போது அந்த இரு விஷயங்களும் நேர்மையாக, எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படையாக விற்கப்படுகின்றன.

ஆனால், அரசின் சொத்துக்கள் அனைத்தும் இதேமாதிரி நேர்மையாகத் தான் விற்கப்படுகிறதா? ஆற்று மணலை அள்ளுவதாக இருந்தாலும் சரி, கிரானைட் கல்லை வெட்டி எடுப்பதாக இருந்தாலும் சரி, இதற்கான விதிமுறைகள் தெளிவாக இருந்தும் அவை எந்தவிதத்திலும் பின்பற்றப்பட வில்லையே! கடற்கரை ஓரத்தில் கிடக்கும் கார்னட் மணலை அள்ளிக் கொண்டு செல்வதை யாரும் கேள்வி கேட்ட மாதிரி தெரியவில்லையே!

ஹலோ வாசகர்களே...

ஆற்றில் ஓடும் தண்ணீரை தனியார் கம்பெனிகளுக்குத் தாரை வார்த்ததால், விவசாயத்துக்கும் மக்களின் பயன்பாட்டுக்கும் தண்ணீர் இல்லாமல் போனதுதானே நிஜம்! இவை மட்டுமல்ல, அரசுக்கு சொந்தமான அத்தனை வளங்களையும் பலம் கொண்ட அரசியல்வாதிகளும், வளம் கொண்ட பிசினஸ் சுயநலவாதிகளும் ‘கூட்டு’ சேர்ந்து இன்றும் ‘கொள்ளை’ அடிப்பதைத்தானே கண்கூடாகப் பார்க்கிறோம். இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கத்தைவிட மாநில அரசாங்கங்கள் செய்யும் தவறு மிகமிக அதிகமாக இருக்கிறதே!

இனியும் இந்த ‘இயற்கை வளக் கொள்ளை’ நடக்காமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட வேண்டும். நாட்டின் வளங்களை நேர்மையாக, உரிய விலையில் விற்பனை செய்யும்போது கிடைக்கும் பல லட்சம் கோடி ரூபாயை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதன் மூலம் நம் நாட்டை முன்னேற்றலாமே! கறுப்புப் பணத்தை ஒழிக்க நினைக்கும் மோடி, இயற்கை வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த என்ன செய்யப் போகிறார்?

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism