Published:Updated:

நடுவர்களைப் பிரமிக்கவைத்த எட்டு சிறுவர்கள்!‍

நடுவர்களைப் பிரமிக்கவைத்த எட்டு சிறுவர்கள்!‍
நடுவர்களைப் பிரமிக்கவைத்த எட்டு சிறுவர்கள்!‍

அமெரிக்காவில், ஆண்டுதோறும் ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் 'தேசிய ஸ்பெல்லிங் பீ' போட்டி நடப்பது வழக்கம்.  இந்தப் போட்டிகளில், உலக நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் பங்கேற்பார்கள். அவர்களில் மிகச்சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச்சுற்றுக்கு அனுப்பப்படுவார்கள். இந்தப் போட்டியில், இதுவரை  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களே வாகை சூடியிருக்கிறார்கள். 'தேசிய ஸ்பெல்லிங் பீ' போட்டி, 94-வது முறையாகத் தற்போது நடந்து முடிந்திருக்கிறது.

நடுவர்களைப் பிரமிக்கவைத்த எட்டு சிறுவர்கள்!‍

Photo Credit : Sky News

இந்தப் போட்டியில், கிட்டத்தட்ட 562 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அதில், ஆறு சிறுவர்களும் (Rishik Gandhasri, Saketh Sundar, Sohum Sukhatankar, Abhijay Kodali, Christopher Serrao and Rohan Raja) , இரண்டு சிறுமிகளும் (Erin Howard,Shruthika Padhy ) மட்டுமே பைனலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எட்டு போட்டியாளர்களுமே, 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.  இறுதிப் போட்டியில், 47 வார்த்தைகளைப் பிழையின்றி உச்சரித்து, அதற்கான ஸ்பெல்லிங்கையும் சரியாகச் சொல்லி, எட்டுப் பேரும் நடுவர்களைப் பிரமிக்க வைத்திருக்கிறார்கள். 

ஒரு வார்த்தையைக்கூட தவறாக உச்சரிக்காத காரணத்தால், எட்டுப் பேரும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் சாம்பியன் பட்டத்தையும்,  50,000 ரூபாய் அமெரிக்க டாலரையும் வழங்கியிருக்கிறார்கள். 

Vikatan