ஆட்சித் தகுதியை இழக்கும் காங்கிரஸ்!

ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவ் தனது பதவிக்காலம் முடியும் தருவாயில், மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு மிகப் பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார். இன்றைக்கு நம் ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்திற்கு சென்றதற்கு முக்கியக் காரணம், மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாகவே நடப்புக் கணக்கு பற்றாக்குறையை அளவுக்கு அதிகமாக வளரவிட்டதேயாகும் என ஆணித்தரமாகவும் தைரியமாகவும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் சுப்பாராவ்.

'நாம் இப்போது சந்திக்கும் பிரச்னைகளுக்கு காரணம், வெளியுலகத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளின் விளைவுகள்தான். பொருளாதாரம் உலகமயமான பிறகு இதுபோன்ற விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது'' என சுப்பாராவுக்கு பதில் சொல்கிற மாதிரி ரூபாய் மதிப்பு சரிந்ததற்கான விளக்கத்தைத் தந்திருக்கிறார் பிரதமர் மன்மோகன்.

நாட்டின் பொருளாதாரம் நசிந்ததற்கு அரசாங்கமே காரணம் என ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவ் சொல்ல, மன்மோகனோ அமெரிக்காவின் பொருளாதார முடிவுகள்தான் காரணம் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? உலக அளவிலான தாராளமயமான பொருளாதாரமே நம்மை உயர்த்தும் என இத்தனை நாளும் சொல்லி வந்த பிரதமர், இப்போது திடீரென அதற்கெதிராக பேசுவதன் காரணமே, பிரச்னைக்கான பொறுப்பை ஏற்க மறுத்து, அதிலிருந்து தப்பிக்க நினைப்பதுதான். சுப்பாராவ் சொன்னதுபோல், கடந்த மூன்று ஆண்டுகளில் இருந்த அதிகமான பணப்புழக்கத்தை சீர்திருத்தங்களுக்குப் பயன்படுத்தாமல் தற்போது அமெரிக்க டாலர் வெளியில் செல்லும்போது, அதைக் காரணமாக குறிப்பிடுவது பொருளாதாரப் புலியான நம் பிரதமருக்கு அழகல்ல.

தங்களுக்குக் கிடைத்த பொன்னான பத்தாண்டுகளில் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், இப்போது வெளிச்சூழலை காரணமாக சுட்டிக்காட்டுவது கண் கெட்டபிறகு சூரியோதயம் என்கிற மாதிரி அல்லவா இருக்கிறது! நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளியன்று பேசிய பிரதமர் பிரச்னை இருப்பதைக் கடைசியாக ஒப்புக்கொண்ட போதிலும், எந்தவிதமான தீர்வையும் குறிப்பிடாதது காங்கிரஸ் அரசுக்கு நாட்டின் மீது எள்ளளவும் அக்கறையில்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது.

1991-ல் மன்மோகன் சாதிப்பதற்கு நரசிம்மராவ் 'கை’ கொடுத்தார். 2013-ல் மன்மோகனுக்கு 'கை’ கொடுக்க யாரும் இல்லாதது காங்கிரஸின் துரதிர்ஷ்டம். இதேநிலை தொடர்ந்தால் வரவிருக்கும் தேர்தலில் மக்களும் 'கை’ கழுவிவிடுவார்கள்.

- ஆசிரியர்.