Published:Updated:

`ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து அப்பாவை டெல்லிக்கு அழைத்தார் மோடி’ - கனிமொழி பகிர்ந்த நினைவு!

பிரதமர் மோடி

``திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்கும். திரைத்துறையில பங்காற்றும் ஆர்வம் இல்லை. `செம்மொழியான தமிழ் மொழியே' பாட்டை ஒருங்கிணைச்சு வாங்குறதுக்குள்ளயே போதும் போதும்னு ஆகிடுச்சு...”

`ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து அப்பாவை டெல்லிக்கு அழைத்தார் மோடி’ - கனிமொழி பகிர்ந்த நினைவு!

``திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்கும். திரைத்துறையில பங்காற்றும் ஆர்வம் இல்லை. `செம்மொழியான தமிழ் மொழியே' பாட்டை ஒருங்கிணைச்சு வாங்குறதுக்குள்ளயே போதும் போதும்னு ஆகிடுச்சு...”

Published:Updated:
பிரதமர் மோடி

விருது என்பது திறமைக்கும் உழைப்புக்குமான மரியாதை என்பதோடு ஒருவரை ரோல் மாடலாக முன் நிறுத்தக்கூடியது. பல்துறைகளில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் பெண்களை சிறப்பிக்கும் வகையில் `அவள் விருதுகள்' வழங்கப்படுகின்றன. அவள் விகடன் வெள்ளிவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் 5-ம் ஆண்டு, `அவள் விருதுகள்' கடந்த 18-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் மதுரையில் `டிரான்ஸ் கிச்சன்' எனும் உணவகத்தை நடத்தி வரும் திருநங்கையர் குழுவுக்கு `வெற்றிப்படை' விருது வழங்கப்பட்டது.

திருநங்கையர் மற்றும் திருநம்பிகளுக்கு மூன்றாம் பாலினம் என்கிற சட்ட ரீதியாக அங்கீகாரம் கிடைத்தாலும் சமூக ரீதியில் அவர்கள் புறக்கணிப்புக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கான முறையான வேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியாத கடுமையான சூழலே இங்கு நிலவுகிறது. இந்தச் சவால்களைக் கடந்து வெற்றிகாணும் திருநங்கைகள் இருக்கிறார்கள். அப்படியாக 15 திருநங்கைகள் ஒன்றிணைந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை அருகே `டிரான்ஸ் கிச்சன்' உணவகத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். பல்வேறு சவால்களைக் கடந்து இந்த வெற்றியைப் பெற்ற அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி `வெற்றிப்படை' விருதை வழங்கினார்.

டிரான்ஸ் கிச்சன் குழுவினருக்கு கனிமொழி விருது வழங்கிய தருணம்
டிரான்ஸ் கிச்சன் குழுவினருக்கு கனிமொழி விருது வழங்கிய தருணம்

``நாங்க இதுக்கு முன்னாடி கேட்டரிங் சர்வீஸ் நடத்திக்கிட்டு வந்தோம். கொரோனாவால அதைத் தொடர்ந்து நடத்த முடியலை. சமைக்கத் தெரியும்னா ஹோட்டல் ஆரம்பிக்கலாமேன்னு ஆலோசனை கொடுத்தாங்க. தொண்டு நிறுவனங்களோட உதவியிலதான் இந்த ஹோட்டலைத் தொடங்கினோம். இன்னைக்கு நாங்க ஒரு முதியோர் இல்லத்தைத் தத்தெடுத்து அங்குள்ள தாத்தா, பாட்டிகளைப் பார்த்துக்குறோம்" என்றனர் டிரான்ஸ் கிச்சன் குழுவினர்.

இவர்களுக்கு விருது வழங்கியது தனக்குப் பெரும் நிறைவைக் கொடுப்பதாக இருக்கிறது எனக் கூறிய கனிமொழியிடம், தொகுப்பாளர்களான தீபக் - நட்சத்திரா கேள்விகள் கேட்டனர்.

கனிமொழி வாழ்வோடு தொடர்புடைய சில புகைப்படங்கள் திரையிடவே அதன் நினைவுகளைக் கனிமொழி பகிர்ந்து கொண்டார்.

படம்: கனிமொழியின் மகன் ஆதித்யனை, கருணாநிதி கொஞ்சுவது.

`ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து அப்பாவை டெல்லிக்கு அழைத்தார்  மோடி’ - கனிமொழி பகிர்ந்த நினைவு!

``அப்பாவுக்கும் ஆதித்யனுக்கும் நல்ல உறவு இருந்தது. அப்பாவிடம் நாங்கள் கேட்டால் நடக்காததுகூட ஆதித்யன் கேட்டால் நடந்துவிடும்.

படம்: ஜெயலலிதாவால் நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்ட நிகழ்வு.

`ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து அப்பாவை டெல்லிக்கு அழைத்தார்  மோடி’ - கனிமொழி பகிர்ந்த நினைவு!

``தலைவர் கைது செய்யப்பட்ட இரவு. இங்கே எதுவுமே நிரந்தரமில்லை... எல்லாம் மாறும் என்கிற உண்மையைச் சொல்லிக் கொடுக்கக்கூடிய தருணமாக இருந்தது. இருண்மை நிறைந்த இரவு அது. தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கிய இரவு."

தயாளு அம்மாள் புகைப்படம்:

`ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து அப்பாவை டெல்லிக்கு அழைத்தார்  மோடி’ - கனிமொழி பகிர்ந்த நினைவு!

``முன்னாள் முதல்வரின் மனைவி, இந்நாள் முதல்வரின் தாய் என்பதையெல்லாம் தாண்டி மிகவும் கரிசனம் மிக்க நபராக தயாளு அம்மாள் இருப்பார். அவரின் அன்பும் அக்கறையும் என்றும் மாறாதது."

படம்: கனிமொழி, அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு முத்தமிடும் தருணம்.

`ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து அப்பாவை டெல்லிக்கு அழைத்தார்  மோடி’ - கனிமொழி பகிர்ந்த நினைவு!

``அப்பாவுக்குப் பிறகு, அண்ணன் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டபோது எடுத்தது. அது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்பதோடு நாங்கள் கடந்து வந்திருந்த வலியும் அதில் நிறைந்திருந்தது.”

படம்: பிரதமர் நரேந்திர மோடி - மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் பேசுவது.

`ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து அப்பாவை டெல்லிக்கு அழைத்தார்  மோடி’ - கனிமொழி பகிர்ந்த நினைவு!

``அவங்களும் இருக்காங்க" என்று அரங்குக்கு வந்திருந்த ஆளுநர் தமிழிசையைப் பார்த்துக் கூறினார். ``அப்பாவை சந்திப்பதற்காக பிரதமர் மோடி வந்திருந்தார். அத்தருணம் வெகு இயல்பாக இருந்தது. மோடி, ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்தவராக, ``நீங்கள் டெல்லிக்கு வர வேண்டும்... என்னோடு தங்க வேண்டும்" என்று அன்போடு அப்பாவிடம் சொன்னார்.”

எழுத்தாளர் ஜெயகாந்தன் புகைப்படம்:

`ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து அப்பாவை டெல்லிக்கு அழைத்தார்  மோடி’ - கனிமொழி பகிர்ந்த நினைவு!

``தமிழ் எழுத்துலகின் மிகப்பெரும் ஆளுமை. அவரை சந்திக்கப் போகும்போது கடுமையானவராக இருப்பாரோ என்கிற பயம் இருந்தது. ஆனால், அவரைப் போல அன்பான மனிதரை எங்கும் சந்திக்க முடியாது. அவரின் மனிதநேயம் அனைத்தையும் தாண்டி நிற்கக்கூடியது.''

கனிமொழிக்கு கவிஞர் என்கிற இலக்கிய முகமும் உண்டு. இலக்கிய ஆளுமையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் பாமாவுக்கு, கனிமொழி விருது வழங்கினார்.

சாதிய மனப்பான்மையின் கோரத்தை `கருக்கு' என்கிற தனது முதல்நாவல் வழியாக எழுதியவர் பாமா. எழுத்து என்பது கலையம்சத்தைத் தாண்டியும் சமூகத்தின் குரூரத்தை எடுத்துக்காட்டுவதாக இருக்க வேண்டும் என்கிற முனைப்பு கொண்ட படைப்பாளர் பாமா.

கனிமொழி கையால் விருது பெற்றுக்கொண்ட பாமா பெரும் நெகிழ்வோடு பேசினார்...

கனிமொழி - பாமா
கனிமொழி - பாமா

``பேச எனக்கு வார்த்தையே வரலை. கனிமொழியை கவிஞராகத் தெரியும். அவர் மேல் எனக்கு ஈர்ப்பும் அபிமானமும் எப்போதும் உண்டு. நாங்க தொடர்புல இல்லாவிட்டாலும் தொடர்புலதான் இருக்கோம். அவர் அரசியலுக்கு வந்த பிறகு, அவரோட ரசிகையாக நான் மாறிட்டேன். விட்டு விடுதலையாகிப் பறப்பாய் அந்த சிட்டுக்குருவியைப் போலங்குற கவிதை மாதிரி அடித்தட்டு மக்களுக்கும் பறக்குற சுதந்திரம் வேணும். எழுத்தின் ஆற்றலை நான் உணர்ந்திருக்கேன். சர்வதேச அளவில் பெரும் வீச்சுக்கு செல்லக்கூடியது. எழுத்தின் மூலமா பல தடைகளை உடைச்சுப் பறக்க முடிஞ்சது. இந்த நேரத்தில் இந்த விருது கிடைத்தது உயிர்ப்போடும் அர்த்தத்தோடும் வாழும் உத்வேகத்தைக் கொடுக்குது" என்றார் பாமா.

``என் விருப்பத்துக்குரிய எழுத்தாளர் பாமா. அவர் கையால நான் விருது வாங்கியிருந்தா இன்னும் மகிழ்ச்சியடைஞ்சிருப்பேன்" என்று சொன்ன கனிமொழியிடம், ``கடைசியாக எப்ப கவிதை எழுதினீங்க?" என நட்சத்திரா கேட்டார்.

``சில நேரங்களில் கவிதை எழுதுறேன். அப்பா அளவுக்கு அதிகமா எழுதுறதில்லை. சமீபத்தில் பெரியாரைப் பற்றி ஆங்கிலப் பத்திரிகையில் கட்டுரை எழுதினேன். இனி அவசியம் எழுதுவேன்" என்றார்.

``உங்கள் குடும்பத்தில் பெரும்பான்மையானவங்களுக்கு சினிமா ஆர்வம் இருக்கு. உங்களுக்கு அந்த ஆர்வம் இருந்திருக்கா…இப்பவும் இருக்கா? " என தீபக் கேட்க...

``திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்கும். திரைத்துறையில பங்காற்றும் ஆர்வம் இல்லை. `செம்மொழியான தமிழ் மொழியே' பாட்டை ஒருங்கிணைச்சு வாங்குறதுக்குள்ளயே போதும் போதும்னு ஆகிடுச்சு. தப்பான முடிவுனு தோண்ற அளவுக்கு ஆகிடுச்சு" என்று மிக வெளிப்படையாகப் பேசினார் கனிமொழி.