Published:Updated:

இளைஞர்களைக் குறிவைக்கும் மாரடைப்பு... அவள் விகடனின் ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி!

இளைஞர்களைக் குறிவைக்கும் மாரடைப்பு

உலக இதய தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு குறித்த ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி, அவள் விகடன் சார்பில் செப்டம்பர் 29-ம் தேதி நடைபெறவுள்ளது.

இளைஞர்களைக் குறிவைக்கும் மாரடைப்பு... அவள் விகடனின் ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி!

உலக இதய தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு குறித்த ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி, அவள் விகடன் சார்பில் செப்டம்பர் 29-ம் தேதி நடைபெறவுள்ளது.

Published:Updated:
இளைஞர்களைக் குறிவைக்கும் மாரடைப்பு

ஆண்டுதோறும் உலக இதய தினம் செப்டம்பர் 29-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவள் விகடன் மற்றும் Manipal Hospitals சேலம் இணைந்து `இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு... பாதிக்கப்பட்ட இதயத்தைக் கையாள்வது எப்படி?' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.

Heart Attack
Heart Attack

செப்டம்பர் 29-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 முதல் 5 மணி வரை, ஆன்லைனில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். சேலம் Manipal மருத்துவமனையைச் சேர்ந்த இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் சையது அப்துல் காதர், நிகழ்ச்சியில் பங்கேற்று இளைஞர்களுக்கு ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது, ஆரம்பத்திலேயே அதைக் கண்டறிவது எப்படி, இதயநோய்களைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும், மாரடைப்பு ஏற்பட்ட பிறகு எப்படி ஆரோக்கியமாக வாழ்வது உள்ளிட்டவை குறித்துப் பேசவுள்ளார்.

அதே மருத்துவமனையைச் சேர்ந்த இதய அறுவைசிகிச்சை மருத்துவர் வினோத் சுப்ரமணியன், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நுண்துளை பைபாஸ் அறுவைசிகிச்சை குறித்த விவரங்கள், நுண்துளை அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் இளைஞர்கள், முதியோர் உடல்நலம் நீண்டநாள்களுக்கு எப்படி இருக்கும், பைபாஸ் அறுவைசிகிச்சை பற்றிய தவறான கருத்துகள் அவற்றுக்குரிய விளக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசவுள்ளார்.

இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு
இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு

இதுதவிர, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மருத்துவர்கள் நேரடியாகப் பதில் அளிப்பார்கள். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க, முன்பதிவு அவசியம்.

முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.