Published:Updated:

கோவையில் கொண்டாட்டம்... பங்கேற்க நீங்க ரெடியா? `அவள் விகடன்' ஜாலி டே!

கோவையில் அவள் விகடன் ஜாலி டே

ஜாலி டே நடைபெறும் நாளன்று சுவாரஸ்யமான `ஆன் தி ஸ்பாட்' போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.

கோவையில் கொண்டாட்டம்... பங்கேற்க நீங்க ரெடியா? `அவள் விகடன்' ஜாலி டே!

ஜாலி டே நடைபெறும் நாளன்று சுவாரஸ்யமான `ஆன் தி ஸ்பாட்' போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.

Published:Updated:
கோவையில் அவள் விகடன் ஜாலி டே

பல ஆண்டுகளாக `அவள் விகடன்' வாசகிகளின் மனதில் தனியிடம் பிடித்த `ஜாலி டே' நிகழ்ச்சி இப்போது புதுப்பொலிவுடன் இன்னும் உற்சாகத்துடன் வந்துவிட்டது. மதுரை, சென்னை, திருநெல்வேலி அவள் விகடன் வாசகிகளுக்கு மாபெரும் கொண்டாட்ட அனுபவத்தைக் கொடுத்த `அவள் விகடன் ஜாலி டே’ - வாசகிகளின் திருவிழா, அடுத்ததாக கோவை மாநகரில் செப்டம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

அவள் ஜாலி டே
அவள் ஜாலி டே

Prithvi Inner Wears வழங்கும் `அவள் விகடன் ஜாலி டே', கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். முன்தேர்வு செப்டம்பர் 24-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அதே கல்லூரியில் நடைபெறும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாட்டு, நடனம், நடிப்பு, ரேடியோ ஜாக்கி/ வீடியோ ஜாக்கி, ரங்கோலி, மெகந்தி, ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ், அடுப்பில்லா சமையல், கவிதைப்போட்டி, பட்டிமன்றம், Script Writing/ News Reporting, செல்ஃபி, ஒரு நிமிட வீடியோ என மொத்தம் 13 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஜாலி டே
ஜாலி டே

12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல், அனைத்து வயதுப் பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆச்சர்ய பரிசுகள் காத்திருக்கின்றன. இதுமட்டுமன்றி ஜாலி டே நடைபெறும் நாளன்று சுவாரஸ்யமான `ஆன் தி ஸ்பாட்' போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆன்லைனில் பதிவு செய்யும் முதல் 100 பேருக்கு மற்றும் ஜாலி டே நிகழ்ச்சிக்கு நேரில் வரும் முதல் 50 பேருக்கு ரூ.500 மதிப்புள்ள புடவை வழங்கப்படும். இதுமட்டுமன்றி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் நிச்சய பரிசு உண்டு.

ஜாலி டே! - வாசகிகள் திருவிழா
ஜாலி டே! - வாசகிகள் திருவிழா

நிகழ்ச்சியை மேலும் கலகலப்பாக்க `குக் வித் கோமாளி’ பாலாவும் வாசகிகளின் கொண்டாடத்தில் இணைகிறார். பாலாவுடன் இணைந்து தொகுப்பாளர் திபிகாஷியும் மகிழ்விக்க வருகிறார். வேலை, குடும்பம், படிப்பு என பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கும் பெண்கள் எல்லாவற்றிலிருந்தும் ஒரு பிரேக் எடுத்து இரண்டு நாள்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இருக்க சிறப்பான வாய்ப்பு இது.

எனவே, தவறாமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள். பரிசுகளோடு அழகான நினைவுகளையும் அள்ளிச் செல்லுங்கள். நிகழ்ச்சியில் ஆண்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. பெண்களுக்கு அனுமதி இலவசம்.

கோவையில் அவள் விகடன் ஜாலி டே
கோவையில் அவள் விகடன் ஜாலி டே

நிகழ்ச்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவுக்கு இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு

97909 90404