இந்தச் சமுதாயத்தின் ஆணிவேரான முதியோர்களின் நலனுக்காக, அவள் விகடன் சார்பில் `ஹலோ சீனியர்ஸ்' என்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. முதியோர் பாதுகாப்பு, உடல்நலம், பண நலம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சர்வதேச முதியோர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, வரும் அக்டோபர் 2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), அவள் விகடன் மற்றும் அதுல்யா சீனியர் கேர் இணைந்து `ஹலோ சீனியர்ஸ்..! உங்கள் பாதுகாப்பு... உங்கள் நலம்... உங்கள் பணம்... ஆலோசிக்கலாம்... அலர்ட் ஆகலாம்!' என்ற நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், முதியோர் பாதுகாப்பு குறித்து சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் (வடக்கு) அன்பு ஐபிஎஸ், `முதியோரும் முதலீடும்’ என்ற தலைப்பில் முதலீட்டு ஆலோசகர் வ. நாகப்பன், `ஹெல்த் இஸ் வெல்த்' என்ற தலைப்பில் பொதுமருத்துவர் மு. அருணாசலம் ஆகியோர் பேசவிருக்கின்றனர்.

அக்டோபர் 2-ம் தேதி காலை 10 மணி முதல், நண்பகல் 12: 30 மணி வரை சென்னை அண்ணாசாலையில் (ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகில்) உள்ள விகடன் அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அனுமதி இலவசம்! முதியோர், முதியோர் நலனில் அக்கறை கொண்டவர்கள் என அனைவரும் இதில் பங்கேற்கலாம். நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.
