மூட்டுவலி முதியோர், உடல் பருமன் உடையவர்கள் எனப் பலரையும் மிகவும் படுத்தியெடுக்கும் பிரச்னை. சிலருக்கு எந்த வேலையும் செய்ய முடியாதபடி மூட்டுகளில் மட்டும் அதிக வலி இருக்கும். அப்படி நீண்ட நாள்கள் வலி இருந்தால், அதற்கு `ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்’ (முடக்குவாதம்) என்று பெயர்.

இந்த நோய் பெரும்பாலும் வளையக்கூடிய மூட்டுகளில் உள்ள சதைப்பகுதி மற்றும் திசுக்களை பாதித்து, அதன் செயல்பாடுகளைக் குறைத்துவிடும். இந்திய மக்கள்தொகையில் 1% பேருக்கு இந்தப் பிரச்னை ஏற்படலாம் என்கின்றன தரவுகள். நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் உடல் இருக்கும் ஆரோக்கியமான திசுக்களை பாதிக்கும் ஆட்டோ இம்யூன் வகையைச் சேர்ந்த நோய் இது.
இந்தப் பிரச்னையை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியாது என்றாலும் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், மருந்து மாத்திரைகளிலேயே கட்டுப்படுத்திவிடலாம். அதே போன்று உரிய பயிற்சிகள், சிகிச்சைகள் மூலம் நிவாரணம் பெறலாம்.

ருமட்டாய்ட்டு ஆர்த்ரைட்டிஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவள் விகடன் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து ‘முடக்குவாதம்... சிகிச்சைகளும் தீர்வுகளும்!’ என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஜனவரி 18-ம் தேதி (புதன்கிழமை) நடத்தவுள்ளது.
திருச்சி காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த முடநீக்கியல் மருத்துவர் எஸ்.சொக்கலிங்கம், சென்னை காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த பொது மருத்துவர் எஸ். ஷாம் ஆகியோர் கலந்துகொண்டு முடக்குவாதம் தொடர்பான ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் சந்தேகங்களுக்கு நேரடியாக பதில் அளிப்பார்கள். ஜனவரி 18-ம் தேதி மாலை 5 முதல் 6 மணி வரை, ஆன்லைனில் நிகழ்ச்சி நடைபெறும். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.
முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.