Published:Updated:

செல்லம்மா பாரதி ரத யாத்திரை: சேவாலயாவுடன் கரம் கோக்கும் நக்‌ஷத்ரமீன் அறக்கட்டளை!

நக்‌ஷத்ரமீன் அறக்கட்டளை

செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல நிதிதிரட்டும் வகையில், பல்வேறு முன்னெடுப்புகளை இந்த அறக்கட்டளை திட்டமிட்டிருக்கிறது.

செல்லம்மா பாரதி ரத யாத்திரை: சேவாலயாவுடன் கரம் கோக்கும் நக்‌ஷத்ரமீன் அறக்கட்டளை!

செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல நிதிதிரட்டும் வகையில், பல்வேறு முன்னெடுப்புகளை இந்த அறக்கட்டளை திட்டமிட்டிருக்கிறது.

Published:Updated:
நக்‌ஷத்ரமீன் அறக்கட்டளை

நட்சத்திர மீனுக்கு இருக்கும் ஐந்து கைகளைப் போல், ஐந்து செயல்பாடுகளை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது நக்‌ஷத்ரமீன் அறக்கட்டளை. இச்செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல நிதி திரட்டும் வகையில், பல்வேறு முன்னெடுப்புகளை இந்த அறக்கட்டளைத் திட்டமிட்டிருக்கிறது. அதன் ஒரு அங்கமாக சேவாலயா அறக்கட்டளை நடத்தும் செல்லம்மா பாரதி ரத யாத்திரையை தருமபுரி மாவட்டம் பெரிச்சக்கவுண்டன்பட்டியில் நக்‌ஷத்ரமீன் ஒருங்கிணைக்கிறது. மே 16 அன்று நடக்கவிருக்கும் இந்நிகழ்வில், நக்‌ஷத்ரமீன் அங்கு பராமரித்துவரும் ஸ்ரீ சாய்ராம் சுகாதார மையத்தில் பல் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நக்‌ஷத்ரமீன் அறக்கட்டளை
நக்‌ஷத்ரமீன் அறக்கட்டளை

நக்‌ஷத்ரமீன் அறக்கட்டளை குறித்து அதன் இயக்குநர்களில் ஒருவரான சுமிதா கோபாலகிருஷ்ணன் பகிர்ந்துகொள்கிறார்.

“எங்கள் அறக்கட்டளையின் பெயர் நக்‌ஷத்ரமீன். பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு ஆதரளிக்கிறோம்; ஆதரவில்லாதவர்களின் குழந்தைகளுக்குப் படிப்பு, சுகாதாரம், மருத்துவ வசதிகளை உருவாக்கிக் கொடுக்கிறோம்; கோசாலை நடத்துகிறோம் - இப்படியாக நக்‌ஷத்ரமீனின் ஐந்து கைகளைப் போல் ஐந்து செயல்பாடுகளை முக்கியப் பணிகளாக நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம், மேற்கொள்ளவிருக்கிறோம். வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்காகச் சர்வதேச தரத்தில் அமைந்த உறைவிடப் பள்ளியை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் கனவு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆண்டு வருமானம் 50 ஆயிரம், அதற்கும் குறைவாக உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிப் படிப்பு மட்டுமல்லாமல், கல்லூரிப் படிப்புக்கும் பங்களித்து, வேலை கிடைக்கும் வரை அவர்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவளிக்கும் திட்டங்களைக் கொண்டுள்ளோம்.

நன்றாகப் படித்திருந்தாலும் பெரும்பாலானோரிடம் வேலைவாய்ப்புத் திறன் குறைவாகவே இருக்கிறது. அப்படியானவர்களைக் கண்டறிந்து அவர்கள் வேலையில் சேர்வதற்கும், சேர்ந்த பிறகு கடைப்பிடிக்க வேண்டிய திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் ‘ஃபினிஷிங் ஸ்கூல்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதும் எங்கள் திட்டத்தில் இருக்கிறது.

பெரிச்சக்கவுண்டன்பட்டி
பெரிச்சக்கவுண்டன்பட்டி

செல்லம்மா பாரதி ரதம் வரவுள்ள பெரிச்சக்கவுண்டன்பட்டியில் நக்‌ஷத்ரமீன் பராமரித்துவரும் ஸ்ரீ சாய்ராம் சுகாதார மையம் போன்ற பணிகளைப் பெரிய அளவில் கொண்டு செல்லும் திட்டம் எங்கள் செயல்திட்டத்தில் முதன்மையாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏராளமான குழந்தைகளுக்குத் தனிப்பட்ட முறையில் பள்ளிக் கட்டணம் செலுத்துகிறோம். பள்ளி இடைநின்றவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கிறோம். ‘ஹீலிங் டச்’ என்ற அமைப்பின் மூலம் இருதய, சிறுநீரக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறோம். எங்கள் சேவைக்காக, கர்நாடக கவர்னர் விருது பெற்றிருக்கிறோம்.

செல்லம்மா பாரதி ரத யாத்திரை
செல்லம்மா பாரதி ரத யாத்திரை

இப்படியான பணிகளைக் கடந்த 14 ஆண்டுகளாக மேற்கொண்டுவரும் நிலையில், அடுத்த கட்டத்துக்கு இந்தப் பணிகளைக் கொண்டுசெல்ல விரும்புகிறோம். எங்களைப் போன்ற ஒருமித்த கருத்துடையவர்கள் இணைந்து சமூகத்துக்குத் திருப்பிச் செலுத்த விரும்புகிறோம். இந்தப் பணிக்கு தன்னார்வலர்கள், புதிய சிந்தனைகள், நிதியுதவியும்கூட எதிர்பார்க்கிறோம். இந்தத் திட்டங்களுக்கு 9, 10 கோடி வரை தேவைப்படுகிறது; சொந்தப் பணத்திலிருந்து இதுவரை 1.5 கோடி திரட்டியிருக்கிறோம். மிகச் சிறிய அளவில் தொடங்கி வளர்ந்துவரும் எங்களை ஆதரிக்கும் சேவலாயாவுக்கும் பரந்த அளவில் மக்கள் நன்கொடை வழங்கி உதவும்போது இக்காரியங்கள் நிறைய பேரைச் சென்றைடையும் என்று நம்புகிறோம்” என்கிறார் சுமிதா கோபாலகிருஷ்ணன்.

நக்‌ஷத்ரமீன் அறக்கட்டளை ஃபேஸ்புக் பக்கம் - Nakshathrameen Foundation

ஸ்ரீ சாய்ராம் சுகாதார மையம் ஃபேஸ்புக் பக்கம் - SaiRam Healthcare Centre Perichagoundapatti

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism