Published:Updated:

`இசையால் நிறைந்த தி.நகர் சாலை!’- வீதியில் நடந்த குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சி

டிராஃபிக் நிறைந்த அந்த சாலை, நேற்றைய பொழுது இசையாலும் நிறைந்தது.

'வார்த்தைகளால் கடத்தவியலாத உணர்வுகளை இசை வழியாகக் கடத்தமுடியும்' என்பது இசையைப் பற்றிய பொதுக் கருத்து. அதற்கு நேர்மை சேர்க்கும் வகையில் அமைந்தது, 'Sundown Sessions' இசை நிகழ்ச்சி. பரபரப்பான சென்னை தி.நகரின் பெடஸ்ட்ரியன் பிளாசாவில் 'ழா' மற்றும் 'நம் வீடு நம் ஊர் நம் கதை' அமைப்பு இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். விழித்திறன் குறைபாடுடைய இசை ஆசிரியர் ஜோதி திரையிசைப் பாடல்களைப் பாடினார். கிட்டார் இசை, குழந்தைகளுக்கான ரைம்ஸ், லயன்கிங் பாடல் என டிராஃபிக் நிறைந்த அந்தச்சாலை, நேற்றைய பொழுது இசையாலும் நிறைந்தது.

அந்தக் குழந்தைகளுடன், நிகழ்ச்சியில் பல இளைஞர்கள் இணைந்திருந்தனர். பொதுமக்கள் பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். சாலையைக் கடந்துசென்ற பலரும் அந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். அது, அந்த இளைஞர்களின் இசைக்குக் கிடைத்த வெற்றி. இசை ஆசிரியர் ஜோதி, தன் இசையால் அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தார்.

பொங்கல் பண்டிகையை குழந்தைகளுடன் உணர்வுபூர்வமாகக் கொண்டாட சூப்பர் ப்ளான்!

செவித்திறன் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்குப் புரியும்படியாக 'Sign language' உபயோகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருந்தது. குழந்தைகளின் மனத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் உற்சாகத்தைக் கொடுக்கும் எனப் பொதுமக்கள் பலரும் கூறிச்சென்றனர். நகரின் முக்கிய இடங்களில் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம் இந்த இளைஞர் கூட்டம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு