Election bannerElection banner
Published:Updated:

சிறந்த பேச்சாளர் ஆகலாம் வாருங்கள்... உங்களுக்காகவே ஒரு பயிலரங்கம்!

தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்

நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? உங்களுக்காகவே ஒரு பயிலரங்கத்தை ஜூனியர் விகடன் நடத்துகிறது.

ஆகச் சிறந்த கலைகளில் முதன்மையானது பேச்சுக்கலை. நாம் நேசிக்கும் அரசியல், சித்தாந்தம் எதுவாக இருந்தாலும், அதைப் பேச்சின் மூலமாகக் கடத்தும் லாகவம் நமக்குக் கைகூடிவிட்டால்... நூற்றுக்கு நூறு வெற்றியே! குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்கிற நம் விருப்பம் நிறைவேறவும் பேச்சாற்றல் என்பது மிகவும் முக்கியம்.

ராஜா
ராஜா

நாமும் பேச்சாற்றல்மிக்கவராக விளங்க வேண்டும், பேச்சுத்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் பலருக்கும் இருக்கிறது. இதை மனதில்கொண்டே இளைஞர்கள், இளைஞிகள், மாணவர்கள், மாணவிகள் ஆகியோர் தமது பேச்சாற்றலை வளர்த்தெடுத்துக்கொள்வதற்கான சிறந்த ஒரு களத்தை ‘ஜூனியர் விகடன்’ ஏற்படுத்திக்கொடுக்கிறது.

காணொலிப் பயிரங்கம் வாயிலாக அந்த வாய்ப்பு உங்களைத் தேடிவருகிறது. அரசியல், சமூகம், இலக்கியம், ஆன்மிகம், நகைச்சுவை என்று பல்வேறு வகைகளிலும் உங்களைப் பட்டை தீட்டிக்கொள்ள... காணொலி வாயிலாக நடைபெறும் இந்தப் பயிலரங்கம் ஒரு நல்ல வாய்ப்பாக நிச்சயம் அமையும்.

தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்

பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வது எப்படி என்பது குறித்த பயிற்சி மற்றும் ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க தமிழகத்தின் ஆகச்சிறந்த பேச்சாளர்கள் அணிவகுக்க இருக்கிறார்கள்.

ஜூனியர் விகடனின் ‘தமிழ் மண்ணே வணக்கம்! என்கிற தலைப்பிலான இந்தப் பயிலரங்கத்தின் முதல் நிகழ்வு, கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தின் ஆற்றல்மிக்க பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் பங்கேற்று, பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வதற்கான பயிற்சியை அளித்தார்.

அடுத்ததாக, 13.03.2021 (சனிக்கிழமை) மாலை 6 - 7 மணியளவில் பட்டிமன்ற மன்னன் ராஜா பங்கேற்று பேச்சாற்றல் குறித்த பயிற்சியை அளிக்கவிருக்கிறார். பட்டிமன்ற மேடையை மொத்தமாகத் தன்வசப்படுத்திக்கொள்வதில் வல்லவரான ராஜா, உங்களைப் பட்டைதீட்டத் தயாராக இருக்கிறார்.

ராஜா
ராஜா

இலக்கியம், நகைச்சுவை, நடிப்பு என பன்முகம்கொண்ட ராஜாவிடம் பாடம் படிக்க நீங்கள் தயாராகுங்கள். அவரிடம் நேரடியாகப் பயிற்சி பெறும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள், கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கி முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

வாருங்கள்... உரக்கப் பேசுவோம், உண்மையே பேசுவோம்!

இணைப்பு: https://events.vikatan.com/197-tamil-manne-vanakkam/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு