Published:Updated:

சென்னை மசூதியில் 40 ஆண்டுகளாக நோன்பு திறக்க உணவு தரும் இந்துக்கள்!|Video

நோன்பு

கடந்த 40 ஆண்டுகளாக இந்த இஸ்லாமிய சகோதரர்களின் கரம் பற்றி நோன்பு திறப்பதற்கான உணவுப்பொருள்களை வழங்குகிறார்கள் சிந்தி சமூக மக்கள்.

சென்னை மசூதியில் 40 ஆண்டுகளாக நோன்பு திறக்க உணவு தரும் இந்துக்கள்!|Video

கடந்த 40 ஆண்டுகளாக இந்த இஸ்லாமிய சகோதரர்களின் கரம் பற்றி நோன்பு திறப்பதற்கான உணவுப்பொருள்களை வழங்குகிறார்கள் சிந்தி சமூக மக்கள்.

Published:Updated:
நோன்பு

சென்னை திருவல்லிக்கேணியில் ஜாம் பஜாரை ஒட்டி வாலாஜா சாலையில் இருக்கிறது திருவல்லிக்கேணி பெரிய மசூதி. பிரமாண்டமான குவி மாடங்களோடும் கோபுரங்களோடும் விரிந்து நிற்கும் இந்த மசூதியில்தான் காயிஅண்ணனும் தம்பியும் அக்காவும் தங்கையுமாக கரம் கோர்த்து வாழ்ந்த மக்களை பெருங்கோடிட்டுப் பிரிக்கிறது மதம். அன்பும் பரிவும் ஆதரவும் கொண்டிருந்த மதம்கடந்த அந்த நேசத்தில், காலம் பல பிரிவினைகளை விதைத்து வளர்த்துக்கொண்டிருக்கிறது. நேரெதிரில் கண்டாலும் ஒதுங்கிப்போகும் அளவுக்கு அந்த உறவு துண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் சென்னையில் நடக்கும் ஒர் நிகழ்வு மதம் கடந்த மனிதத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக தொடரும் அந்த பந்தம் சிந்தி பேசும் இந்து மக்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்குமான உணர்வோடு நெருங்கியிருக்கிறது.

பெரிய மசூதி
பெரிய மசூதி

காயிதே மில்லத் ஆழ்வுறக்கம் கொண்டிருக்கிறார். ஆற்காடு நவாப்பின் நிர்வாகத்தில் இருக்கும் இந்த மசூதியில் ரம்ஜான் கால நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஒரு மாதம் தொடர்ந்து நடக்கும். நோன்பு கடைபிடிக்கும் எவரும் அதற்குரிய நேரத்தில் இங்கு சென்று நோன்பு திறக்கலாம். கடந்த 40 ஆண்டுகளாக இந்த இஸ்லாமிய சகோதரர்களின் கரம் பற்றி நோன்பு திறப்பதற்கான உணவுப்பொருள்களை வழங்குகிறார்கள் சிந்தி சமூக மக்கள். ரம்ஜான் நோன்புக்காலம் முழுவதும் தினமும் இந்த நிகழ்ச்சி ஒரு திருவிழா போல நடந்தேறுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருங்கிணைந்திருந்த புராதன இந்தியாவில் சிந்து மாகாணத்தில் வசித்தவர்கள் சிந்திகள். இந்திய பிரிவினையின்போது இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த சிந்தி மக்கள், தங்கள் அயராத உழைப்பாலும் வணிகத் திறனாலும் இந்தியாவின் பல பகுதிகளில் தங்கள் இருப்பை நிறுவிக்கொண்டார்கள். அவ்விதம் சென்னைக்கு இடம்பெயர்ந்து வந்த சிந்தி மக்கள் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில் செய்தாலும் தங்கள் மரபையும் பண்பாட்டையும் ஒருங்கிணைந்து நின்று காக்கிறார்கள்.

சிந்தி மக்கள் எல்லா மதங்களையும் அரவணைத்துப் போற்றும் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்ட சூபியிசத்தை பின்பற்றுபவர்கள். எவரோடும் வன்மம் பாராட்டாமல் எல்லோரையும் சகோதரர்களாகப் போற்றும் இவர்கள் சென்னை மயிலாப்பூரில் `சூபிதார் டிரஸ்ட்!' என்ற ஒர் புனிதத்தலத்தை நிறுவி தங்கள் சேவைகளை ஆற்றி வருகிறார்கள்.

சூபிதார் டிரஸ்ட்
சூபிதார் டிரஸ்ட்

எல்லா மதங்களிலிருந்தும் நல்லனவற்றை எடுத்து அவ்வழியில் வாழும் இவர்களின் புனித தலத்தில் ஜீசஸ், குருநானக், இந்து மத கடவுள்கள் என எல்லா மதக் கடவுள்களையும் நிறுவி வழிபடுகிறார்கள். வணக்கத்துக்குரிய செகண்ஸா பாபாவின் நினைவு நாள், நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி என எல்லாப் பண்டிகைகளையும் வழிபாட்டோடும் கொண்டாட்டத்தோடும் பின்பற்றும் இந்த மக்கள் சத்தமேயில்லாமல் பல சேவைகளை செய்து வருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் நோன்பு திறப்புக்கான உணவுகளை வழங்குவதும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

40 ஆண்டுகளுக்கு முன்பு சூபிதார் டிரஸ்டை நிறுவிய தாதா ரத்தன் சந்த், ரம்ஜான் காலத்தில் இஸ்லாமிய மக்கள் நோன்பு திறப்பதற்கான உணவுகளைத் தர விரும்பினார். சென்னையின் பெரிய மசூதிகளில் ஒன்றான இந்த திருவல்லிக்கேணி மசூதியை நிர்வகிக்கும் ஆற்காடு நவாப்பை நேரில் சந்தித்து ரம்ஜான் சேவா செய்ய தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ரம்ஜான் என்பது புனித நாள். மிகுந்த கட்டுப்பாட்டோடும் கடமையுணர்வோடும் இஸ்லாமியர்கள் இந்த நோன்பை கடைபிடிப்பார்கள். அந்த புனித நோன்பில் பங்கெடுக்க இன்னொரு மதத்தைச் சேர்ந்த சகோதரர்கள் விரும்புவதை நவாப் வரவேற்றாலும் சூபிதார் டிரஸ்டின் செயல்பாடுகளையும் உணவு தயாரிக்கும் இடங்களையும் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றார். அதன்படி நவாப்பே நேரில் சென்று உணவு தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்து சேவையை ஏற்றுக்கொண்டார்.

இஸ்லாமிய மக்கள்
இஸ்லாமிய மக்கள்

அன்று தொடங்கி இன்றுவரை எவ்விதத் தொய்வும் இல்லாமல் உற்சாகத்தோடு இந்த ரம்ஜான் சேவாவை தொடர்ந்து செய்துவருகிறார்கள் சிந்தி மக்கள். ரம்ஜானுக்கான நாள்கள், நேரங்கள் தீர்மானிக்கப்பட்ட பிறகு மசூதி நிர்வாகம் முறைப்படி சூபிதார் டிரஸ்டுக்கு தகவல் தெரிவித்துவிடும்.

சூபிதார் டிரஸ்ட் தயாராகிவிடும். தினமும் 1200 பேர் நோன்பு திறப்பு செய்வதற்கான உணவுப் பொருள்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாகும். வாட்ஸப் குழுக்கள் உருவாக்கப்படும். பணிகள் பிரித்து ஒதுக்கப்படும். தினமும் பால் சேர்த்த ஒரு குளிர் பானம், கலவை சாதம், பேரிச்சம்பழம், வாழைப்பழம், பிஸ்கெட் பாக்கெட்கள், துணை உணவுகளோடு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைச் சுமந்துகொண்டு தினமும் மாலை நான்கரை மணிக்கு ஒரு வாகனம் வந்து நிற்கிறது, மசூதியின் முகப்பில்.

வழங்கப்படும் உணவு வகைகள்
வழங்கப்படும் உணவு வகைகள்

வாகனத்துக்கு முன்பாகவே, தத்தம் பணிச்சூழலில் இருந்து விடுபட்டு 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வந்து காத்திருக்கிறார்கள். வாகனம் வந்ததும் பரபரவென உணவுப்பொருள்களை தனித்தனியாக சுத்தமான பிளாஸ்டிக் வாளியில் சேகரிக்கிறார்கள். பிறகு நிதானமாக அவற்றை பள்ளிவாசலின் வாசலில் கொண்டு போய் வைக்கிறார்கள். இஸ்லாமிய சகோதரர்கள் வரிசையாக அமர்ந்தபிறகு 5 குழுக்களாக பிரிந்து உணவை வினியோகிக்கிறார்கள். ஒவ்வொருவராக முகம் பார்த்து தேவையறிந்து பரிமாறுகிறார்கள். 15 நிமிடத்தில் உணவு விநியோகம் நிறைவடைந்து விடுகிறது. வாளிகளை வாகனத்தில் ஏற்றிவிட்டு அனைவரும் அவரவர் பணித்தளத்துக்குப் பறந்துவிடுகிறார்கள்.

இந்தியாவின் எந்தப்பகுதியிலுமே இல்லாதவகையில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நெகிழ்வோடும் அன்போடும் உணவுச்சேவையாற்றும் சிந்தி மக்களின் சூபிதார் டிரஸ்டை இப்போது தாதா ரத்தன்சந்தின் மகன் லட்சு பாய் நிர்வக்கிறார். அசோக் கூப்சந்தானி தலைவராக செயல்படுகிறார்.

துவேஷங்களால் மனித மாண்புகளும் உறவுகளும் நிலைகுலைந்து நிற்கும் இந்தக் காலத்தில் சிந்தி சமூக மக்கள் இன்முகத்தோடு நோன்புக்கான உணவு வழங்குவதும் கட்டுப்பாட்டோடு நோன்பைக் கடைபிடிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் பிற மதத்தினர் என்று வேறுபாடு காட்டாமல் கரம் பற்றி அந்த சேவையை ஏற்றுக்கொள்வதும் நெகிழ்வூட்டும் நிகழ்வு. காலாகாலத்துக்கும் தொடரட்டும் இந்த பந்தம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism