Published:Updated:

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஆயத்தமாகும் மும்பை: கணபதி மண்டலுக்கு ரூ.360 கோடிக்கு இன்சூரன்ஸ்

லால்பாக் ராஜா

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக நாளை தொடங்குகிறது. இதற்காக மும்பை முழுக்க ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஆயத்தமாகும் மும்பை: கணபதி மண்டலுக்கு ரூ.360 கோடிக்கு இன்சூரன்ஸ்

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக நாளை தொடங்குகிறது. இதற்காக மும்பை முழுக்க ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வருகின்றன.

Published:Updated:
லால்பாக் ராஜா
ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா மகாராஷ்டிராவில் 10 நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

ஆனால் இந்த ஆண்டு, விழாவை சிறப்பாக நடத்த மாநில அரசு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறது. கணபதி சிலைகள் எத்தனை அடி உயரத்தில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகளில் கணபதி மண்டல்கள் முழுவேகத்தில் ஈடுபட்டிருந்தன.

லால்பாக் ராஜா கணபதி

அதிகமான மண்டல்களில் கணபதி சிலைகள் ஏற்கெனவே கொண்டு வரப்பட்டு பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மும்பையில் புகழ் பெற்ற, 'லால்பாக் ராஜா' போன்ற கணபதி மண்டல்கள் பந்தலிலேயே கணபதி சிலையை சிற்பிகளைக் கொண்டு செய்துள்ளது. மும்பையில் அதிக அளவில் பக்தர்களால் தரிசிக்கப்படும் கணபதி மண்டலாக லால்பாக் ராஜா கணபதி மண்டல் இருக்கிறது.

விநாயகர்
விநாயகர்

இம்மண்டலில் இரண்டு நாள்களுக்கு முன்பே கணபதி சிலை தயாராகி, பத்திரிக்கையாளர்கள் தரிசனத்திற்குத் திறக்கப்பட்டது. இந்த கணபதி மண்டலில் பக்தர்கள் ஒவ்வோர் ஆண்டும் தங்க ஆபரணங்களை அதிக அளவில் காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். அவ்வாறு செலுத்தப்படும் தங்க ஆபரணங்கள், தேங்காய், இதர பொருள்கள் விழா முடிந்த பிறகு பக்தர்களுக்கு ஏலம் விடும். லால்பாக் ராஜா கணபதி மண்டலில் தரிசனம் செய்யப் பல மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்க வேண்டும்.

லால் பாக் ராஜா கணபதி
லால் பாக் ராஜா கணபதி

316 கோடிக்கு இன்ஷூரன்ஸ்

இதே போன்று மாட்டுங்கா கிங்சர்க்கிள் பகுதியில் வெறும் 5 நாள்கள் மட்டுமே வைக்கப்படும் ஜிஎஸ்பி சேவா மண்டல் கணபதியை 5 நாள்களில் பல லட்சம் பேர் தரிசிப்பது வழக்கம். மும்பையில் மிகவும் பணக்கார கணபதி மண்டலகாக இது இருக்கிறது. 66 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்களால் 5 நாள்களும் ஜிஎஸ்பி சேவா மண்டல் கணபதி அலங்கரிக்கப்படுவார். அதோடு 295 கிலோ வெள்ளி ஆபரணங்களும் சமர்ப்பிக்கப்படும். இந்தத் தங்க ஆபரணங்கள் 31.97 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 5 நாள்கள் நடக்கும் பண்டிகை முழுவதற்கும் சேர்த்து மொத்தம் 316.40 கோடி ரூபாய் அளவுக்குக் காப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது.

இதில் மண்டல் தன்னார்வலர்கள், பூஜாரிகள், சமையல்காரர்கள், பாதுகாப்பாளர்கள் போன்றவர்களுக்கு 263 கோடிக்கு விபத்துக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆன்லைனிலும் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மண்டல் அறங்காவலர் அமித் பாய் தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க மராத்தியர்கள் கொங்கன் பகுதிக்குச் செல்ல 10 நாள்களும் சுங்கச்சாவடியில் நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

செயற்கைக் குளங்கள்

மும்பையில் ஆயிரக்கணக்கான கணபதி மண்டல்கள் பந்தலில் விநாயகரை பிரதிஷ்டை செய்து 10 நாள்கள் வழிபடுவது வழக்கம். இவ்விழா நாட்டிலேயே மிகவும் பிரபலமாகும். பொதுமக்கள் வீடுகளில் சிறிய விநாயகரை பிரதிஷ்டை செய்து ஒரு நாள், 5 நாள் அல்லது 7 நாள்கள் வைத்திருந்து வழிபட்டுவிட்டுக் கடலில் கரைப்பது வழக்கம். அது போன்ற சிறிய விநாயகர் சிலைகளை கரைக்க மும்பை முழுவதும் மாநகராட்சி நிர்வாகம் செயற்கைக் குளங்களை நூற்றுக்கணக்கில் அமைத்திருக்கிறது. பொதுமக்கள் கடலுக்குச் செல்லாமல் தங்களது பகுதியில் இருக்கும் குளத்தில் விநாயகர் சிலைகளைக் கரைக்க முடியும். விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். கணபதி விழா வரும் 9 - ம் தேதி முடிவுக்கு வருகிறது.