Published:Updated:

கிருஷ்ண ஜெயந்தியில் தயிர் பானை உடைக்கும் கோவிந்தாக்கள்; ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

மும்பையில் கிருஷ்ண ஜெயந்தி

மகாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தியின்போது தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அரசு 10 லட்சத்திற்கு காப்பீடு வழங்க இருக்கிறது.

கிருஷ்ண ஜெயந்தியில் தயிர் பானை உடைக்கும் கோவிந்தாக்கள்; ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

மகாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தியின்போது தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அரசு 10 லட்சத்திற்கு காப்பீடு வழங்க இருக்கிறது.

Published:Updated:
மும்பையில் கிருஷ்ண ஜெயந்தி
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பையில் கிருஷ்ண ஜெயந்தி விழா சரியாகக் கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு பெரிய அளவில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதில் தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சிதான் மிகவும் பிரபலம்.

முதல் நாள் இரவில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிவிட்டு மறுநாள் காலையில் தயிர் பானை உடைக்கப்படுவது வழக்கம்.

`கோவிந்தா மண்டல்கள்' எனப்படும் பக்தர்கள் குழு பல அடுக்கு பிரமிடு அமைத்து தயிர் பானை உடைப்பில் ஈடுபடுவது வழக்கம். மும்பையில் மட்டும் பல நூறு கோவிந்தா மண்டல்கள் இருக்கின்றன. இதில் தயிர் பானை உடைக்கும் கோவிந்தா மண்டல்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். கிருஷ்ண ஜெயந்தியின்போது தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சியை அரசியல் தலைவர்கள் தங்களது செல்வாக்கை நிரூபிக்கும் நிகழ்ச்சியாகவும் நடத்துவதுண்டு. இந்த ஆண்டு வரும் 18ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. 19ம் தேதி தயிர் பானை உடைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக `கோவிந்தா மண்டல்கள்' தயிர் பானை உடைக்க ஒரு மாதத்திற்கும் மேலாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தயிர் பானை உடைப்பின்போது பலர் காயம் அடைவதுண்டு. ஒரு சிலர் உயிரிழப்பதும் உண்டு.

தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சி
தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சி

எனவே கோவிந்தா மண்டல்கள் தங்களது உறுப்பினர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. இதையடுத்து மாநில அரசு கோவிந்தா மண்டல்களுக்கு இன்சூரன்ஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. கோவிந்தா மண்டல்களின் வேண்டுகோளை ஏற்று அனைத்து கோவிந்தா மண்டல் உறுப்பினர்களுக்கும் தலா 10 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. இதன் மூலம் பாதுகாப்பான முறையில் தயிர் பானை உடைப்பில் மண்டல் உறுப்பினர்கள் ஈடுபட முடியும் என்று மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பிறகு மிகவும் பிரமாண்டமாக நடக்கும் முதல் விழாவாக இது இருப்பதால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் தங்களது செல்வாக்கை நிரூபிக்க கோவிந்தா மண்டல்களுக்குப் பல லட்சம் பரிசு அறிவித்துள்ளனர்.