Published:Updated:

மும்பை: 10 ஏக்கர்; ரூ.70 கோடி மதிப்பு; உருவாகும் திருப்பதி பாலாஜி கோயில்!

கோயில் கட்ட நிலம் வழங்கும் ஆதித்ய தாக்கரே

மும்பையில் ரூ.70 கோடி செலவில் திருப்பதி பாலாஜி கோயில் கட்டப்படுகிறது.

மும்பை: 10 ஏக்கர்; ரூ.70 கோடி மதிப்பு; உருவாகும் திருப்பதி பாலாஜி கோயில்!

மும்பையில் ரூ.70 கோடி செலவில் திருப்பதி பாலாஜி கோயில் கட்டப்படுகிறது.

Published:Updated:
கோயில் கட்ட நிலம் வழங்கும் ஆதித்ய தாக்கரே

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் திருப்பதி பாலாஜி கோயில் கட்டுவதற்கு மகாராஷ்டிரா அரசு 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்திருந்தது. ரூ.500 கோடி மதிப்பிலான அந்த நிலத்தில் பிரமாண்டமாக திருப்பதி பாலாஜி கோயில் கட்டப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு நிர்வாக அதிகாரி தர்ம ரெட்டி அளித்த பேட்டியில், நவிமும்பையில் ரூ.70 கோடி செலவில் புதிய திருப்பதி பாலாஜி கோயில் கட்டப்படும். முழுக்க முழுக்க பக்தர்களின் நன்கொடையில் கட்டப்படும் இக்கோயில் திருப்பதியில் இருப்பது போன்ற வடிவமைக்கப்படும். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் திருப்பதி பாலாஜி கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் கட்டப்பட்டு வரும் பாலாஜி கோயில், வரும் 21 - 26ம் தேதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும். ஜம்மு, அமராவதி, உளுந்தூர் பேட்டை போன்ற இடங்களிலும் திருப்பதி பாலாஜி கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. சென்னை தி நகரில் பத்மாவதி கோயில் கட்டப்பட்டு வருகிறது.

கோயில் கட்ட நிலம் வழங்கும் ஆதித்ய தாக்கரே
கோயில் கட்ட நிலம் வழங்கும் ஆதித்ய தாக்கரே

திருப்பதி பாலாஜி கோயிலில் விடுமுறை நாள்களில் அதிகப்படியான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் விதமாக விஐபி தரிசனம் ஜூலை 15 - ம் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குத் தண்ணீர், மோர், உணவு வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உத்தரவின் பேரில் திருப்பதி தேவஸ்தானம் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு செலவு செய்யப்படும் நிதியின் அளவை அதிகரித்து இருக்கிறது. திருப்பதியில் உலக தரம் வாய்ந்த குழந்தைகள் மருத்துவமனை ரூ.300 கோடி செலவில் தேவஸ்தானம் சார்பாகக் கட்டப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மும்பையில் கட்டப்படும் திருப்பதி கோயிலுக்கான முழு செலவையும் ரெமாண்ட் குரூப் ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism