Published:Updated:

``கைத்தறியை இனி மியூசியம்லதான் பார்க்கணும்!" - `பைரவா’ டிசைனர் நிரஞ்சனி

``கைத்தறியை இனி மியூசியம்லதான் பார்க்கணும்!" - `பைரவா’ டிசைனர் நிரஞ்சனி
News
``கைத்தறியை இனி மியூசியம்லதான் பார்க்கணும்!" - `பைரவா’ டிசைனர் நிரஞ்சனி

``கைத்தறியை இனி மியூசியம்லதான் பார்க்கணும்!" - `பைரவா’ டிசைனர் நிரஞ்சனி

``கைத்தறியை இனி மியூசியம்லதான் பார்க்கணும்!" - `பைரவா’ டிசைனர் நிரஞ்சனி

``கைத்தறியை இனி மியூசியம்லதான் பார்க்கணும்!" - `பைரவா’ டிசைனர் நிரஞ்சனி

Published:Updated:
``கைத்தறியை இனி மியூசியம்லதான் பார்க்கணும்!" - `பைரவா’ டிசைனர் நிரஞ்சனி
News
``கைத்தறியை இனி மியூசியம்லதான் பார்க்கணும்!" - `பைரவா’ டிசைனர் நிரஞ்சனி

விதவிதமா ஃபேன்சி ஆடைகளை டிசைன் செய்து முத்திரை பதித்துக்கொண்டிருக்கும் இந்தக் காலத்து டிசைனர்களுக்கு மத்தியில், அழிந்துகொண்டிருக்கும் கைத்தறியைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார் இந்த இளம் டிசைனர். வீட்டிலேயே கைத்தறி கருவியை வைத்து, `தறி' எனும் தர அடையாளத்தை நிறுவி, முழுக்க முழுக்க ட்ரெண்டி உடைகளை டிசைன் செய்து பல புதுமைகளைப் படைத்துக்கொண்டிருக்கிறார் ஆடை வடிவமைப்பாளரும் தொழில் முனைவோருமான நிரஞ்சனி சுந்தர். அவரிடம் பேசினோம்...

``Hand loom மீது ஆர்வம் வரக் காரணம்?"

``நான் டாக்டருக்கு படிப்பேன்னு எல்லாரும் நினைச்சுட்டு இருந்தப்போ, என்னோட இன்ட்ரஸ்ட் டிசைனிங் மேல போச்சு. அதுலயும் எனக்கு ஃபேஷன் டிசைனைவிட டெக்ஸ்டைல் டிசைன்தான் ஈர்த்துச்சு. துணிமேல டிசைன் பண்றதைவிட, துணியவே டிசைன் பண்றதுதான் சவால்னு நினைச்சேன். அதைவிட பெரிய சவால், கைத்தறியில மட்டும் ஆடைகளை நெய்து விக்கிறது. கல்லூரியில் படிக்கிறப்போ, புராஜெக்ட்டுக்காக கைத்தறித் தொழிலாளர்களை மீட் பண்ண வாய்ப்பு கிடைச்சது. அவங்கதான் என்னோட இன்ஸ்பிரேஷன். இப்படித்தான் கைத்தறி மேல விருப்பம் வந்துச்சு."

``பலரும் ஹேண்ட்லூம்னாலே காட்டன் மட்டும்..."

``இருங்க... இருங்க! ஹேண்ட்லூம்னாலே காட்டன் மட்டும்தாங்கிற ஸ்டீரியோ டைப்பை முதல்ல உடைக்கணும். கைத்தறியிலயும் கலர்ஃபுல்லா உடைகளை வடிவமைக்கலாம். இது பக்கா ஆர்கானிக் பொருள். இதனால உடம்புக்கு எந்தக் கெடுதலும் இல்லை. இதைப் பற்றிய விழிப்புஉணர்வை எல்லாருக்கும் ஏற்படுத்தணும்."

``படத்திலும் Hand loom ஆடைகளை மட்டும்தான் உபயோகப்படுத்துறீங்களா?"

`` `அதிதி', `மூணேமூணு வார்த்தை' மற்றும் `பைரவா' படங்கள்ல ஆடைகள் வடிவமைச்சிருக்கேன். எல்லாத்துலயும் கைத்தறி உடைகள்தான் யூஸ் பண்ணியிருக்கேன். ஆனாலும், படங்கள்னு வர்றப்போ இயக்குநர்களுக்குப் பிடிச்ச மாதிரி பண்ணுவேன். முடிஞ்ச அளவுக்கு கைத்தறிதான் பயன்படுத்தணும்னு இருக்கேன்" எனக் கூறி, தன் அம்மாவின் சப்போட் இல்லாமல் இது சாத்தியம் இல்லை என்று அவரைக் கைகாட்டினார்.

``நம்ம பாரம்பர்யக் கலைகள்ல ஒன்றான கைத்தறியை, எல்லாரும் முழுசா மறந்துட்டோம். அதை அழியாமப் பாதுகாக்க எங்களால் ஆன முயற்சியைச் செய்துக்கிட்டிருக்கோம். இதனால, லாப-நஷ்டத்தைத் தாண்டி நிம்மதி நிறையவே இருக்கு" என்று பெருமிதம்கொள்கிறார் `தறி'யின் இணை நிறுவனரான பவானி சுந்தரலிங்கம். அவரிடம் பேசினோம்...

`` `தறி'யின் குறிக்கோள்?"

``தமிழ்நாட்டுல கைத்தறிய அழிஞ்சுடாமப் பாதுகாக்கிறதுதான். பரம்பரைப்பரம்பரையா கைத்தறி செஞ்சிட்டு வந்தவங்ககூட இப்போ பவர் லூம்க்கு மாறிட்டாங்க. சொல்லப்போனா, நூத்துல ஒருத்தர் வீட்டுலதான் கைத்தறி கருவி இருக்கு. அதுவும் மறந்துடக் கூடாதுனு பண்ணிட்டிருக்காங்க. இந்த நிலைமை இப்படியே போச்சுன்னா, கைத்தறியை மியூசியம்லதான் பார்ப்போம். அந்த நிலை வந்துடவே கூடாது."

``நீங்கள் எதிர்கொண்ட சவால்?"

``சவால் நிறையவே இருக்கு. முதல்ல எங்கேயும் கைத்தறியே கிடைக்கலை. அதுவே பெரிய சேலஞ்ச்தான். அப்புறம், கைத்தறி நெசவாளர்களும் கிடைக்கலை. சின்னச்சின்ன Cluster-க்குப் போய், அவங்ககிட்ட நிறைய பேசிப் பேசி, தகவல் வாங்கினோம். துணி நெய்யும்போதும் நிறைய சவால்கள் வந்துச்சு. பவர் லூம் உபயோகப்படுத்திட்டு ஹேண்ட்லூம் யூஸ் பண்ண ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. செய்கூலி அதிகம் கேப்பாங்க. இப்படி நிறைய சிக்கல்கள் இப்பவும் இருக்கு."

``கைத்தறி நெசவாளர்களே இதை மறந்ததற்குக் காரணம்?"

``அவங்க மட்டும் என்ன பண்ணுவாங்க? செய்கூலி கம்மி. ஆனா, வேலைப்பாடு அதிகம். சில நேரத்துல, ஒரு புடவை நெய்றதுக்கு ஒரு வாரம்கூட ஆகும். டிசைனைப் பொறுத்து. ஆனா, அவங்க கைக்கு பாதி கூலிகூட வராது. அவங்க கைத்தறிலாம் வித்துட்டு, கம்மியான காசுக்கு பவர் லூம் ஓட்டுறதுக்குத் தள்ளப்பட்டுட்டாங்கனுதான் சொல்லணும்.''

``தறியின் சிறப்பு?"

`` `தறி'யோட ஸ்பெஷாலிட்டி, இங்கே எல்லாமே 100 சதவிகிதம் ஒரிஜினல் கைத்தறிப் பொருள்கள். டிசைனுக்கு ஏற்றதுபோல நெசவு பண்ணிடுவோம். ஃபினிஷிங் பக்காவா இருக்கும். திருமண கலெக்‌ஷன், கேஷுவல் கலெக்‌ஷன், பார்ட்டி கலெக்‌ஷன் எல்லாம் ரொம்ப ட்ரெண்டியா டிசைன் பண்ணுவோம். அதுகூட செண்டு, Potli Bags, இப்படி Accessoriesகூட கைத்தறித் துணியில செஞ்சதுதான். அதனால எரிச்சல், நமைச்சல்னு எந்தத் தொந்தரவும் இருக்காது. கைத்தறிய எல்லாரும் ஆதரிக்கணும்" என, தன் வேண்டுகோளைத் தெரிவித்துக்கொண்டார்.