பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

டிரெஸ்ஸிங் முக்கியம் ஒறவே!

டிரெஸ்ஸிங் முக்கியம் ஒறவே!
பிரீமியம் ஸ்டோரி
News
டிரெஸ்ஸிங் முக்கியம் ஒறவே!

கானப்ரியா

ஸ்ட்ரெஸ் ஓவராக இருக்கும் இந்தக் காலத்தில் `டிரெஸ்ஸிங்’தான் எல்லோருக்குமே ப்ளெஸ்ஸிங். ப்ளஸ்-2 தேர்வு முடிந்து கல்லூரிக்குள் காலடி எடுத்துவைக்கும்போது கலர் கலர் டிரெஸ்ஸால் தெறிக்கவிட வேண்டும் என்று அனைவருக்குமே ஆர்வம் அதிகம் இருக்கும். ஆனால், நமக்கான டிரெஸ்ஸைத் தேர்ந்தெடுக்கும்முன்  இப்போதைய லேட்டஸ்ட் ஃபேஷன் என்ன எனத் தெரிந்துகொள்வது அவசியம். 

2018 கல்லூரிப் பெண்களுக்கான ஃபேஷன் பட்டியலில், பிரின்ட்டெட் பலாசோ, பிரின்ட்டெட் ஸ்கர்ட், ப்ளெய்ன் குர்த்தி, தோத்தி பேன்ட், ஸ்கார்ஃப் (Scarf) அல்லது ஸ்டோல்ஸ் (Stoles), லெக்கிங்ஸ், க்ராப் டாப், டெனிம் ஜாக்கெட், மெட்டாலிக் ஆபரணங்கள் போன்றவை முதல்வரிசையில் இருக்கின்றன.

சென்ற ஆண்டின் இறுதியில் கலம்காரி ட்ரெண்ட் ஆனது. இப்போது கலம்காரியுடன் வார்லி பிரின்ட் டிசைனும் இணைந்து காக்டெய்ல் டிசைனாக மாறியிருக்கிறது.  இனி பலாசோ, ஸ்கர்ட்ஸ் போன்ற உடைகளில் இந்த பிரின்ட்களின் தாக்கம் அதிகம் இருக்கும்.

டிரெஸ்ஸிங் முக்கியம் ஒறவே!

பிரின்ட்டெட் பலாசோ மற்றும் ஸ்கர்ட்டுடன், சாலிட் அல்லது ப்ளெய்ன் டாப், ஷர்ட், டீ-ஷர்ட், குர்த்தி போன்றவற்றை இணைத்து ஸ்டைலிஷாக வலம்வரலாம். இதனுடன், கழுத்தில் மெலிதான செயின், கைகளில் பிரேஸ்லெட் மற்றும் வாட்ச், காதுகளில் சிறிய அளவு ஜிமிக்கி அல்லது வளையம், குட்டி ஹீல்ஸ் அல்லது தட்டையான காலணியை உபயோகிக்கலாம்.

பல புதிய டிசைன்களில் மார்க்கெட்டில் கொட்டிக் கிடக்கும் ஸ்டோல் அல்லது ஸ்கார்ஃபை  எப்போதும்  உங்கள்  ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தச் சிறிய ஸ்டோல் வைத்தே உங்கள் தோற்றத்தை மாற்றிக் கொண்டேயிருக்கலாம்.

டிரெஸ்ஸிங் முக்கியம் ஒறவே!

ஆண்களின் ஸ்மார்ட் லுக்குக்கு புளூ ஜீன்ஸ், கறுப்பு, வெள்ளை, நீல நிறங்களில் டீ-ஷர்ட் மற்றும் ஷர்ட், அடர்த்தி யான நிறத்தில் செக்டு (Checked) சட்டை, ஸ்னீக்கர்ஸ் போன்றவை அவசியம்.

புளூ ஜீன்ஸுடன் ப்ளெய்ன் டீ-ஷர்ட் அல்லது ஷர்ட் அணிவது காலத்துக்கும் நிற்கும் ஃபேஷன். இதனுடன் கூலர்ஸ், ஸ்னீக்கர் ஷு போன்றவற்றை அணிவதனால் பொலிவு கூடும். 
 
இன்னும் கொஞ்சம் வித்தியாச லுக் வேண்டும் என்பவர்கள் முடியைக் கொஞ்சம் அளவோடு திருத்தி, அளவான தாடி மற்றும் மீசையைக் கட்டாயம் வைக்க வேண்டும். சென்ட் அல்லது பெர்ஃப்யூமுக்கு பதிலாக கொலோன் (Cologne) எனும் ஒருவகையான நறுமணநீரை உபயோகப்படுத்தலாம்.

டிரெஸ்ஸிங் முக்கியம் ஒறவே!

ஜிம் சென்று உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு  வி-நெக் மற்றும் போலோ டீ-ஷர்ட் கச்சிதமாகப் பொருந்தும். இல்லையெனில், ரவுண்டு அல்லது க்ரூ நெக் டீ-ஷர்ட் சரியான சாய்ஸ்!

நல்ல டிரெஸ்ஸிங் கொடுக்கும் நம்பிக்கையை வேறு எதுவுமே கொடுக்க முடியாது. அதனால் `க்யாரே... ட்ரெஸ்ஸிங்கா’ எனக் கேட்கும்படி தெறிக்கவிடணும் மக்களே!